Author: Editor web3

சென்னையில் கடந்த சிலநாட்களாக காகங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் நிலையில்,  இறந்த பறவைகளை கையால் தொடக்கூடாது என்றும் ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை அடையாறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் திடீரென உயிரிழந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, காகங்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் H5.N1 வகை வைரஸ் கண்டறியப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆராய்ச்சி நிறுவனம் காய்ச்சல் எர்ச்சரிக்கை குறித்து தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனடிப்படையில், இறந்த காகங்களை கையால் தொட வேண்டாம் என்றும் இறந்த காகங்களை 8 முதல் 10 அடி வரை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் அல்லது எரிக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பறவைக்காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுப்பு…

Read More

ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதை புரிந்துகொள்ளவேண்டும் என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள், இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டுமா புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணங்களோடு தான் இந்த இயக்கம் தற்பொழுது வீர நடை போட்டு கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும் விஜய் மக்கள் பணியாற்றுவதற்காக ஒரு இளைஞர் என்ற முறையில் வந்திருக்கிறார், அவரை பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு இருக்கிறது.…

Read More

மகளிர் பிரீமியர் லீக் சீசன் 4 இன் இறுதிப் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். வெற்றி பெறும் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2026) நான்காவது சீசனின் இறுதிப் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஒருபுறம், இரண்டாவது சீசனின் வெற்றியாளரான ஆர்சிபி, இந்த சீசனில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மறுபுறம், முதல் சீசனில் இருந்து ஒவ்வொரு முறையும் இறுதிப் போட்டிக்கு வந்தும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி அணி உள்ளது. சாம்பியன் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஸ்மிருதி மந்தனாவின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த சீசனில்…

Read More

சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்றும் அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இதன்காரணமாக இந்தியா மீதான வரி குறைக்கப்பட்டது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்நிலையில், இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. முந்தைய காலங்களிலும் பிற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியுள்ளது. இதில் புதிதாக எதுவும் இல்லை. ரஷ்யா ஒன்றும் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஒரே நாடு கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளது.

Read More

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலம் முடிவடைய உள்ளது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20 -ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24 -ம் தேதிவரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து  இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில், சுமார் 18 தொழில் நிறுவனங்களுக்கு விரிவாக்கம், முதலீடு, சலுகைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசக்கபட்டு முக்கிய முடிவுகள் எடுக்கபடுகிறது. மேலும், இடைக்காலப் பட்ஜெட்டில் இடம் பெறும் புதிய திட்டங்கள், அதற்கான செலவுகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களுக்கான தொடர் செலவுகள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

Read More

2026 தேசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி  வீராங்கனை மிராபாய் சானு அசத்தலான சாதனை படைத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மோடிநகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மிராபாய், ஒரே நிகழ்வில் மூன்று தேசிய சாதனைகளை முறியடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றார்.. அவரின் அபாரமான செயல்திறன், போட்டி அரங்கையே உற்சாகத்தில் மூழ்கடித்தது. இதன் மூலம் மிராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்று, இந்திய பளுதூக்குதலில் மிகப் பெரிய நம்பிக்கையாக தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் தொடக்கத்திலிருந்தே மிராபாய் சானுவின் தன்னம்பிக்கை வெளிப்பட்டது. ஸ்நாட்ச் பிரிவில் 89 கிலோ எடையை தூக்கி புதிய தேசிய சாதனையை அவர் பதிவு செய்தார். தொடர்ந்து கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையை தூக்கி இன்னொரு தேசிய சாதனையையும் முறியடித்தார். இதன் மூலம் மொத்தமாக 205 கிலோ எடையை தூக்கிய மிராபாய், இந்த எடைப்பிரிவில் இதுவரை காணாத…

Read More

நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷனின் வாணவேடிக்கை ஆட்டத்தால், டி20 போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் 11ல் இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. டி20 உலக்கோப்பைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் வீரர்களை தேர்ந்தெடுத்துவிட்டன. இந்தநிலையில் பிப்.7 அன்று போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக கிஷன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் கிஷன், வெறும் 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அபார…

Read More

U19 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஃபைசல் கான் (110) மற்றும் உசைருல்லா நியாசி (101) ஆகியோர் சதமடித்தனர். இலக்கை விரட்டியபோது, ​​வைபவ் சூர்யவன்ஷி 206 ஸ்ட்ரைக் ரேட்டில் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை அளித்தார். ஆரோன் ஜார்ஜ் 104 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுத்தார். இந்த சதத்திற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதிகபட்ச ரன் சேசிங்: இந்தியா 41.1 ஓவர்களில் 311 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்தது. இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் எட்டப்பட்ட அதிகபட்ச ரன் சேசிங் ஆனது. இதற்கு முன்னர், இந்தச் சாதனை நியூசிலாந்திடம் இருந்தது; அவர்கள் 2006-ல் அயர்லாந்திற்கு எதிராக 305 ரன்கள் என்ற இலக்கை…

Read More

சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த கோபி(ஈரோடு) தொகுதியிலேயே போட்டியிட மீண்டும் விருப்ப மனு அளிக்கவுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 106வது சட்டமன்றத் தொகுதியாக அறியப்படும் கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் இடம்பெற்றுள்ள தொகுதி என்பதால் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்து வரும் நிலையில் காங்கிரஸ், சுதந்திரா கட்சி ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து, திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாக மாறியது. குறிப்பாக எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்ற 1977 சட்டமன்றத் தேர்தலில் இருந்து தொடர்ந்து 5 முறை அதிமுக மட்டுமே வென்றது. அதன்பிறகு 1996ல் திமுகவை சேர்ந்த ஜி.பி.வெங்கிடு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2001ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக வசம் தொகுதி வந்தது. அதிலிருந்து தொடர்ந்து 5 முறை வென்று வந்துள்ளது. மொத்தமாக பார்த்தால் அதிமுக 10 முறை கொடி நாட்டியிருக்கிறது. அதில் 8 முறை செங்கோட்டையன் வெற்றி…

Read More

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் வரும் 13ம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு தவெக மாவட்ட செயலாளர் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடி பிடித்துள்ளது.  மீண்டும் தனது அரசியல் பயணத்தை வேகப்படுத்த தொடங்கியுள்ள விஜய்க்கு, செங்கோட்டையனின் வருகை பலமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். கொங்கு மண்டலத்தில் தவெக-வின் முக்கிய முகமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார். தவெக-வில் இணைந்த பிறகு கடந்த ஈரோட்டில் கடந்த டிச.18ம் தேதி மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடித்தார் விஜய். இது கொங்கு மண்டலத்தில் விஜய்யின் தாக்கமாகவே பார்க்கப்பட்டது. அடுத்தப்படியாக, சேலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் வரும் 13ம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி கேட்டு சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கடிதம்…

Read More