Author: Editor web3

புற்றுநோய் என்பது உடலின் செல்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கும் ஒரு நோயாகும். காலப்போக்கில், இந்த செல்கள் சுற்றியுள்ள திசுக்களையும் உறுப்புகளையும் சேதப்படுத்துகின்றன. இந்த நோய் உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம், ஆனால் சில உறுப்புகள் மற்றவற்றை விட அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. ஒரு உறுப்பில் உள்ள செல்களின் வளர்ச்சி விகிதம், சுற்றுச்சூழல் காரணிகளின் தாக்கம், மரபணு முன்கூட்டியே ஏற்படும் பாதிப்பு மற்றும் வயது தொடர்பான மாற்றங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து, எந்த உறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்படும் என்பது அமைகிறது. உலக சுகாதாரத் தரவுகளின்படி, சில குறிப்பிட்ட உறுப்புகளே புற்றுநோயின் அதிகபட்ச பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்களுக்குக் காரணமாக உள்ளன. நோயறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சை சிறப்பாக உள்ள பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் வேறுபடுகின்றன. ஆண்களும் பெண்களும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்படுகிறார்கள், மேலும் எந்தத் திசுக்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்பதைத் தீர்மானிப்பதில் வயதும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.…

Read More

800 பில்லியன் டாலருக்கும்(சுமார் 71 லட்சம் கோடி) அதிகமான நிகர சொத்து மதிப்பை அடைந்துள்ள கோடீஸ்வரர் எலான் மஸ்க், பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்ற உருக்கமாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் 800 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பை எட்டிய உலகின் முதல் நபர் எலான் மஸ்க் ஆவார். இந்தநிலையில், எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு  சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மக்கள் நினைப்பதை விட இதில் அதிக உண்மை இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். “யார் ‘பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது’ என்று சொன்னார்களோ, அவர்களுக்கு உண்மையில் என்ன சொல்கிறோம் என்பது தெரிந்தே இருந்திருக்கிறது” என்று மஸ்க் பதிவிட்டு, ஒரு சோகமான எமோஜியை சேர்த்து பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகள், ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகளை பெற்றுள்ளது.…

Read More

வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வருமான வரித்துறையின் அபராதத்துக்கு எதிராக விஜய் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தற்போதைய தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் கடநத 2016-2017 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்தாா். அதில், அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35,42,91,890 ஈட்டியதாக குறிப்பிட்டிருந்தாா். அந்த வருமான வரிக் கணக்கை 2015-ஆம் ஆண்டில் நடிகா் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்த போது ’புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தனா். இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவிட்டது.…

Read More

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை…

Read More

வங்கிகளின் குறுகிய கால கடங்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, இன்று, (பிப்ரவரி 6 )பணவியல் கொள்கையை அறிவித்தார். பிப்ரவரி 4 அன்று தொடங்கிய பணவியல் கொள்கை குழு (Monetary Policy Committee – MPC) கூட்டம் இன்று நிறைவடைந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இதற்கிடையில், ரெப்போ விகிதத்தை 5.25% ஆக மாற்றாமல் வைத்திருக்க குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். இதன் மூலம் கொள்கை ரெப்போ வட்டிவீதமும் 5.25% ஆகவே தொடரும். MPC கூட்டத்திற்குப் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில், “பணவியல் கொள்கை குழு (MPC), ரெப்போ வட்டிவீதத்தை 5.25% ஆக மாற்றமின்றி வைத்திருக்கவும், நடுநிலை நிலைப்பாட்டை தொடரவும் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், வரும்…

Read More

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவது,  மக்கள் விரோதச் செயல்கள் நடைபெற்று வருவது போன்ற தொடர்கதையாகிவிட்டது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர் என்றும் எதிர்க்கட்சிகளில் பயங்கரங்கமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடியில்லை. அந்தவகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன் என்கிற செந்தில் பட்டப்பகலில் தலை துண்டித்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இன்று காலை தனது…

Read More

டி20 உலகக் கோப்பையின் 10வது பதிப்பு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு நிலைப் போட்டிகளில், ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இந்தியாவும் பாகிஸ்தானும் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரிலிருந்து வங்கதேசத்தை ஐசிசி நீக்கியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசாங்கம் தங்கள் அணி இந்தத் தொடரில் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது என்று அறிவித்தது. இருப்பினும், இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்த சஸ்பென்ஸ் நீடிக்கிறது, ஏனெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தனது புறக்கணிப்பை ஐசிசி-க்கு எழுத்துப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை. கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும் என்று நம்பப்படுகிறது.…

Read More

தங்கம் விலை இன்று (பிப்.6) சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,960க்கும் ஒரு கிராம் ரூ200 குறைந்து ரூ.14,120க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை ரூ.6,240 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது. இந்தநிலையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.580 குறைந்து  ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று(பிப்.6) சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,960க்கும் ஒரு கிராம் ரூ200 குறைந்து ரூ.14,120க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.20,000 குறைந்து ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.

Read More

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட உள்ளதாகவும் இன்று சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அமைப்புகள் வந்திருந்தனர் அவர்களுடைய கருத்துக்களை அவர்கள் கூறியதாகவும் பல்வேறு அமைப்புகள் கல்வியாளர்கள் தொழில் முனைவோர் விவசாயிகள் பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறிய அவர் அதில் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்று பரிசீலனை செய்து முதலமைச்சரிடம் அனுமதி பெற்று தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும் என்றார். தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவைகள் உயர்த்தி வழங்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.…

Read More

ணிப்பூரில் 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தேய்-குகி இன மோதல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வன்முறை, கொலைகள், இடம்பெயர்வுகள் ஆகியவை மாநிலத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. இதனால் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2025 பிப்ரவரி 9-ஆம் தேதி, பைரன் சிங் தனது பதவியை  ராஜினாமா செய்தார். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக ல் கடந்த 4ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து, மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்று ஒரு நாள் கூட முழுமையடையாத நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்…

Read More