Author: Editor web3
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழு கூட அமைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பணிகள் தாமதமாகி இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்திருக்கும் சூழலில், திமுக தலைமை அதனை ஏற்கவில்லை என்றும் அதேபோல் அதிக தொகுதிகள் கோரி காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடோ, முரணோ இல்லை. கூட்டணி கட்சிகள் நினைப்பதை முதலமைச்சர் செய்வார், யாரையும் அவர் விட்டுக்கொடுக்கமாட்டார். கூட்டணி குறித்து மாநிலத் தலைவரான நானே பேசவில்லை என்ற அவர், காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும்…
திமுகவும் அதிமுகவும் இணைந்தால் கூட தவெகவை வெல்ல முடியது என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக்கழகத்தின் ஒரே எதிரி தி.மு.க. தான். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். த.வெ.க. சார்பில் விருப்ப மனு அளிக்க வந்து 15,000 பேர் திரும்ப சென்றதால் ஆன்லைனில் விருப்ப மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க. கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள். குறுகிய காலக்கட்டத்தில் கூட்டணி அமையும் என்று கூறினார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் “நிர்வாகம்” என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை, இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. TNPSC குரூப் 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன, தொழில்நுட்பக்கோளாறு என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள், குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த தவறுக்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின்…
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு நல்ல செய்தி! புதிய வாய்ப்புகளால் மேக் இன் இந்தியா வலுப்பெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு அதிபர் டிரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த கட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் இது ‘மேக் இன் இந்தியா’வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைப்…
மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் வெளியிட்ட கூட்டு செய்தியறிக்கையில், இந்தியா மற்றும் மலேசியா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த பல முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நம்பிக்கையும் கூட்டாண்மையும் அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் முன்னேற திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், உளவுத் தகவல்களைப் பகிர்வு செய்தல் மற்றும் கடல் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் மலேசியா கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவதற்காக பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பை இரு நாடுகளும் மேலும் விரிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் (semiconductors) ஆகிய துறைகளில் இந்தியா மற்றும்…
டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற பெருமையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். மும்பையின் வான்கடே மைதானத்தில், அமெரிக்க பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு இந்திய வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்த இந்திய அணி, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு ரன் எடுப்பதற்கே திணறியது. விக்கெட்டுகள் சீராக விழுந்துகொண்டிருந்தபோதும், ரன் விகிதம் மிக மெதுவாக இருந்தபோதும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு தூணாகத் திகழ்ந்தார். ஆரம்பத்தில் அவர் அமெரிக்க பந்துவீச்சாளர்களுக்கு மரியாதை கொடுத்தாலும், இறுதியில் தனது இயல்பான ஷாட்களை ஆடி, அணியின் ஸ்கோரை 150-ஐத் தாண்ட வைத்தார். ஒரு கட்டத்தில், இந்திய அணி 125 ரன்களைக் கூட எட்டுமா என்பது சந்தேகமாகத் தோன்றியது, ஆனால் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காத 84 ரன்கள் இந்தியாவை 161 ரன்களுக்குக் கொண்டு சென்றது. இந்திய வம்சாவளி வீரர்களைக் கொண்ட அமெரிக்க அணி, எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செயல்பட்டது. ஒரு பலம்…
தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சக பாஜக தலைவர்களுடன் நின்றுக்கொண்டிருக்கும் தன்னை பார்த்தால் அப்படியா தோன்றுகிறது என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமலஹாசன் நல்ல நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நிதியமைச்சர், இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் சொல்லவந்ததை கமலஹாசன் தவறாக புரிந்து கொண்டார். அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அடுத்த முறை பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது திருத்தத்தை பதிவு செய்வார் என நம்புகிறேன். விஜய் அவரது கட்சி, அவரது கொள்கையை மக்கள் முன்னால் வைக்கட்டும். நாங்கள் ஜனநாயக கூட்டணி கொள்கையை வைக்கிறோம் மக்கள் முடிவு செய்யட்டும். ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. ஓபிஎஸ் எங்களுடன் தான் உள்ளார் கவலைப்பட வேண்டாம். கல்வி கூடங்களில் கஞ்சா விற்கும் நிலைமையை திமுக ஆட்சி கொண்டு வந்துள்ளது. கல்வியில் சிறந்த மாநிலம்…
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப்2, 2 ஏ மெயின்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார். உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்பட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் அதில், 4,20,217 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியான நிலையில், அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்தது. காலையில் குரூப் 2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும்…
2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு அதிரடி சதத்தை அடித்துள்ளார். அவர் 55 பந்துகளில் சதத்தை எட்டினார், இது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிக வேகமான சதமாகும். முந்தைய போட்டிகளில் தனது மோசமான பேட்டிங்கிற்காக சூர்யவன்ஷி விமர்சிக்கப்பட்டார், ஆனால் இறுதிப் போட்டியில் அவர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். இதேபோல், ஆயுஷ் மாத்ரே 50 பந்தில்…
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது ஹர்ஷித் ராணா காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் நிலை குறித்து மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 டி20 உலகக் கோப்பைக்கான கேப்டன்களின் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்ஷித் ராணாவை அணியிலிருந்து நீக்குவது குறித்து இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹர்ஷித் ராணா சரியான நேரத்திற்குள் முழு உடல் தகுதியை பெற முடியாத நிலை இருக்கலாம். அந்த அறிக்கையில், ஹர்ஷித் ராணா தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், அவரது உடல்நிலை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான வார்ம்-அப் போட்டியில், ஹர்ஷித் ராணா…