Author: Editor web3

இந்தியர்களின் டேட்டாவை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்வது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சூர்யா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வாட்ஸ்அப் பயனர்களின் தரவைப் பகிர்ந்ததற்காக மெட்டா நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அதாவது, நீதிபதி அமர்வு, “தரவைப் பகிர விரும்பாத பயனர்களுக்கு வெளியேறும் விருப்பத்தை நீங்கள் வழங்குவீர்கள். ஆனால் சாலையோரத்தில் பழம் விற்கும் ஒருவரால் உங்கள் விதிமுறைகளைப் புரிந்துகொள்ள முடியுமா? உங்கள் விதிமுறைகள் மிகவும் சிக்கலான மொழியில் எழுதப்பட்டுள்ளன, அது எங்களுக்கே புரியாமல் போகலாம். இது ஒரு வகையான திருட்டு. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றது. பயனர்கள் இதுபோன்ற செயலிகளுக்கு அடிமையாகிவிட்டதாகவும், அவர்களின் இந்த இயலாமை இப்போது சுரண்டப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. “எங்கள் அரசியலமைப்பின் விதிகளுக்கு உங்களால் கட்டுப்பட முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். எங்கள் குடிமக்களின் தனியுரிமை சமரசம் செய்யப்படுவதை நாங்கள்…

Read More

அரசியலில் திமுகவே தனக்கு முதல் எதிரி என்று விஜய் கூறிவரும் நிலையில், நான் யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை, அனைவரையும் நண்பர்களாக பார்க்கிறேன், மதிக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி இன்னும் 2 நாட்களில் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புதிய எதிரிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், சிரித்தப்படி, யாரையும் நான் எதிரியாகப் பார்க்கவில்லை, அனைவரையும் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் மதிக்கிறேன் என்றார்.

Read More

பள்ளிகளில் போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விளம்பர விழா எடுக்க திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். “அப்பா” என்ற அடைமொழிக்கு ஆசைப்படும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம். “அரசுப்பள்ளி எனது கோட்டை” என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ்  அவர்கள், அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார்…

Read More

நெல்லையில் இருவேறு பிரிவை சேர்ந்த காதல் திருமணத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மணப்பெண் மர்மமுறையில் உயிரிழந்திருப்பது ஆணவக் கொலையா என்ற அச்சம் நிலவுகிறது. நெல்லை பேட்டை செக்கடியைச் சேர்ந்த பச்சிராஜன், அரசு பஸ் டிரைவர்; அவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவமதி, பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனுடன் காதலித்து வந்தார். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறார். இருவரும் வெவ்வேறு பிரிவினரினால், சிவமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி, ஆனந்த கிருஷ்ணனும் சிவமதியும் வரும் 6-ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். கடந்த சில தினங்களில் சிவமதியின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மாலை 6 மணியளவில் அவரை டவுன்…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி விஜய்யின் தவெக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு விநியோகம் செய்து வருகின்றனர். இதேபோல், மற்ற கட்சிகளும் கூட்டணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, அரசியலில் நுழைந்துள்ள விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளிலும் தவெக தனித்து களமிறங்கவுள்ளதாக கூறிவருகிறார். இந்தநிலையில், தவெக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://x.com/TVKPartyHQ/status/2018577404013523448 இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக்…

Read More

சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதிக்களுக்கான தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை, செயல்வீரர்கள் கூட்டம், நலத்திட்டங்கள் ஆலோசனை, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், பொதுக்கூட்டம் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இணைந்த தேசிய கூட்டணி சார்பில் கடந்த 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அதனை தொடர்ந்து கடந்த 30ம் தேதி தமிழக பாஜக சார்பில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி,…

Read More

கோவை தெற்கின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வானதி சீனிவாசனை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுமாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழுத்தம் கொடுப்பதாக தகவல் கசிந்துள்ளது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி , தமிழ்நாட்டின் முக்கிய நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது, முன்பு கோயம்புத்தூர் மேற்கு என்று அழைக்கப்பட்ட தொகுதி, கோவை தெற்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தத் தொகுதி முழுவதுமே நகர்ப்புற பகுதியாகும். கோவையின் அரசு அலுவலகங்கள், வணிக மையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் இங்கு அமைந்துள்ளன. கோவை தெற்கு தொகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். ரேஸ்கோர்ஸ், உக்கடம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம் போன்ற முக்கிய பகுதிகள் இதில் அடங்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரயில் நிலையம், உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையங்கள்…

Read More

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக இடையேயான போட்டியில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கழக அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி, அண்ணாவின் நினைவு இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி, அண்ணாவின் கனவுகளை நிலைநாட்டி சமூக நீதியை நிலை நிறுத்தியது அதிமுக என பெருமிதம் தெரிவித்தார். ஊழல் பற்றி விஜய் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை என தெரிவித்த அவர், வாங்கும் ஊதியத்தில் வெள்ளையை விட கருப்புதான் அதிகமாக இருப்பதாகவும், வாங்கும் ஊதியம் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்க நடிகர் விஜய்யால் முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் விஜய்…

Read More

மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையில் 3 குழந்தைகளுக்கு தந்தையான ஒரு நபர், ஒரு குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தின் முகேத் தாலுகாவில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங் கோண்ட்மங்கலே, தனது கிராமத்தில் ஒரு முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு மூன்று குழந்தைகள். ஒரு மகன் மற்றும் ஆறு வயது இரட்டை மகள்கள் இருந்தனர். மாநிலத்தில் 2 குழந்தைகள் உள்ளவர்களே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. இதன் காரணமாக, அவர் போட்டியிடத் தகுதியற்றவராக இருந்தார். பாண்டுரங் தனது நண்பரும் தற்போதைய கிராமத் தலைவருமான கணேஷ் ராமச்சந்திர ஷிண்டேவுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் சேர்ந்து, ஒரு தீய திட்டத்தைத் தீட்டினார்கள்.  அவரது இரட்டை மகள்களில் ஒருவரான பிராச்சியைக் கொல்ல முடிவெடுத்தனர்.…

Read More

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் தனது ரூ.7 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.2.08 கோடிக்கு “DDC 001” என்ற எண்ணை வாங்கினார். இது இப்போது நாட்டின் மிக விலையுயர்ந்த வாகனப் பதிவு எண்ணாக புதிய சாதனை படைத்துள்ளது. “மூக்குத்தி மூக்கை விட கனமானது” என்று ஒரு பழமொழி உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் இதை உண்மை என்று நிரூபித்துள்ளார். அவர் சமீபத்தில் தனது புதிய மாருதி இக்னிஸ் காருக்கு ஒரு புதிய நம்பர் பிளேட்டை வாங்கினார், ஆனால் அந்த காரின் விலை ரூ.7 லட்சம் மற்றும் அந்த நம்பர் பிளேட்டின் விலை ரூ.2.08 கோடி (₹20.8 மில்லியன்) ஆகும். இது நாட்டின் மிக விலையுயர்ந்த வாகன நம்பர் பிளேட்டாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. ‘Bigboys Toys’ நிறுவனத்தின் உரிமையாளர் ஜதின் அஹுஜா முன்பு ‘DDC 001’ என்ற எண்ணை வைத்திருந்தார். இந்த எண்ணை அவர் தனது காருக்கு பதிவு செய்திருந்தார். சமீபத்தில், அவர்…

Read More