Author: Editor web3

தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசியபோது தவெகவுக்கு இருக்கும் ஆதரவை டெஸ்ட் பண்ண ஒரு வழி இருப்பதாக விஜய் கூறியுள்ளார். திமுகவினரின் செயலால் தூக்கமின்றி தவிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் பேசியதை நினைவு கூர்ந்த அவர், முதலமைச்சர் நன்றாக உறங்கும்போது அவரை எழுப்பி யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டால் விசில் சின்னம் தான் என்று சொல்வார் என்றார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது அவரை அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், அட்டை கத்தி என்று விமர்சித்தனர். அவர்கள் தான், இன்றைக்கு நம்மை பற்றியிம் விமர்சிக்கின்றனர். இவர் பேட்டி கொடுக்கமாட்டார். வெளியிலேயே வரமாட்டார். டெல்லியில் இருந்து அவருக்கு அழுத்தம் வருகிறது என்று சொல்கிறார்கள். டெக்னாலஜி எங்கேயோ போகுது. உங்கள் டெக்னிக்கையாவது மாற்றுங்கள். இப்போது, மும்முனை போட்டி, நான்குமுனை போட்டி என்கிறார்கள். மக்கள் சக்தியுடன் நாம் ஒரு பக்கம். திமுக ஒரு பக்கம். பாஜக தலைமையில் மற்றும் பலர். இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும்,…

Read More

”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என்று விசித்திரமாக திருக்குறள் கூறி விமர்சித்த விஜய், மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான் என்று பேசியுள்ளார். சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய், தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜூன் மாதம் அளித்த பேட்டி ஒன்றில், பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தேன். அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் அதிமுக என்று கூறினார். 2017-க்கு பிறகு, 2021-க்கு பிறகு தமிழ்நாட்டு நிலையை யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா…

Read More

கர்நாடகாவில் 29 வயது நபர் குரங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். குரங்கு காய்ச்சல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். காசனுாரு பாரஸ்ட் டிசீஸ் என்று அழைக்கப்படும் குரங்கு காய்ச்சலால் கர்நாடகாவில் 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் நிலைமை தீவிரமாகும் வரை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது. தீர்த்தஹள்ளி தாலுகாவைச் சேர்ந்த அந்த இளைஞர், உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 28 அன்று உயிரிழந்தார். சுகாதாரத் துறை ஆணையர் குருதத்தா ஹெக்டே கூறியதாவது, இந்தச் சம்பவம் அசாதாரணமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார். பொதுவாக, கே.எஃப்.டி தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் கண்டறியப்பட்டால், நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 100 சதவீதம் ஆகும். அறிகுறிகள் தோன்றிய உடனேயே, அதிகாரிகள் நோயாளியை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றதாகவும், ஒரு நாளுக்குள் கே.எஃப்.டி நோயை…

Read More

வரும் 7ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர்பான சூழ்நிலை படிப்படியாக மோசமடைந்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் அணி இந்தியாவுடன் மட்டும் விளையாடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதற்குக் காரணமாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தரவைக் குறிப்பிட்டுள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பது மட்டுமல்லாமல், ஐசிசியின் வருமானம் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. எந்தவொரு ஐசிசி போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிதான் அதிகம் பேசப்படும் நிகழ்வாகும். இந்தப் போட்டி என்பது வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல, அது உணர்ச்சிகள் மற்றும் உச்சகட்ட பரபரப்பு நிறைந்த ஒரு தொகுப்பாகும். இதனால்தான் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் இதன் பார்வையாளர் எண்ணிக்கை சாதனை படைக்கிறது. ஒளிபரப்பாளர்கள் இந்தப் போட்டியை அடிப்படையாகக் கொண்டு பெரிய உரிமை தொகுப்புகளை வாங்குகிறார்கள். பொதுவாக, இந்தியா பங்கேற்கும் ஒரு போட்டி சுமார் ரூ.100 கோடி (தோராயமாக $1 பில்லியன்) வருவாயை…

Read More

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, பாஜக-அதிமுக சதிகளை முறியடித்து 2026 தேர்தலில் வெற்றி பெறவேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள் மடல். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது  மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற நம் மக்களுக்கான அரசியல் இயக்கத்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கி, 18 ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன் தி.மு.கழகத்தை அரியணை ஏற்றியவர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி. ‘மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்கு சேவை செய். அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு’ என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை. தன்னுடைய…

Read More

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு…

Read More

சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் தவெக என அக்கட்சியின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச்…

Read More

தமிழக வெற்றிக் கழகம் மூன்று ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி தொடங்கியதிலிருந்து அக்கட்சிக்குள்ளும் வெளியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த முக்கிய நகர்வுகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம். உற்சாகம் கொடுத்த முதல் ஆண்டு: தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்; ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பிப்ரவரி 02, 2024 அன்று தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் சமத்துவ கொள்கையோடு, 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு என்ற குரலோடே கட்சியை தொடங்கினார். கட்சியின் அடுத்த முக்கிய நகர்வாக மார்ச் 08, 2024 அன்று கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அச்செயலியின் மூலம் வெகு விரைவாக லட்சக்கணக்கான உறுப்பினர்கள் ‘தவெக’வில் இணைந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது. அச்சூழலில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்கவில்லை. யாருக்கும் ஆதரவும் அளிக்கவில்லை. அதன்…

Read More

ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களையும் கூறிவருகின்றனர். இந்தநிலையில், பட்ஜெட் தினத்தையொட்டி தொடர்ச்சியாக காணப்படும் பாலினப் பாகுபாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். அதில், பட்ஜெட் குறித்து செய்யும் தனது பணியை விட, பொதுமக்களின் கவனம் தன் உடை  மீது திரும்புகிறது என்றும், இத்தகைய பார்வையை ஆண் நிதியமைச்சர்கள் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்வதில்லை என்றும் அவர் கூறினார். “ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினத்தில் நான் என்ன உடை அணியப்போகிறேன் என்பதைக் குறித்து எழும் கேள்விகள் எனக்கு மன அழுத்தமாக மாறிவிடுகின்றன. பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது எந்த ஆண் நிதியமைச்சரிடமாவது இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டதுண்டா? ஆண்களிடம் இதைக் கேட்க மாட்டார்கள். ஆனால் எனது உடையும் கூட பட்ஜெட் விவகாரமாக மாற்றப்படுகிறது,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். பொதுமக்கள் கருத்துகளை…

Read More

கேரளாவும் இந்தியாவின் வரைபடத்தில் இருப்பதை நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே பட்ஜெட்டின்போது புறக்கணித்ததாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “கேரளாவின் நீண்ட கால கோரிக்கைகளான எய்ம்ஸ் மருத்துவமனை, 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் விழிஞ்சம் துறைமுகத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம்  ஆகியவை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களை வறுமையில் தள்ளும் வகையிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More