Close Menu
    What's Hot

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதலமைச்சரே விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பார்!. விஜய் அதிரடி பேச்சு!
    தமிழ்நாடு

    முதலமைச்சரே விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பார்!. விஜய் அதிரடி பேச்சு!

    Editor web3By Editor web3February 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm stalin vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசியபோது தவெகவுக்கு இருக்கும் ஆதரவை டெஸ்ட் பண்ண ஒரு வழி இருப்பதாக விஜய் கூறியுள்ளார். திமுகவினரின் செயலால் தூக்கமின்றி தவிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் பேசியதை நினைவு கூர்ந்த அவர், முதலமைச்சர் நன்றாக உறங்கும்போது அவரை எழுப்பி யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டால் விசில் சின்னம் தான் என்று சொல்வார் என்றார்.

    எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது அவரை அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், அட்டை கத்தி என்று விமர்சித்தனர். அவர்கள் தான், இன்றைக்கு நம்மை பற்றியிம் விமர்சிக்கின்றனர். இவர் பேட்டி கொடுக்கமாட்டார். வெளியிலேயே வரமாட்டார். டெல்லியில் இருந்து அவருக்கு அழுத்தம் வருகிறது என்று சொல்கிறார்கள். டெக்னாலஜி எங்கேயோ போகுது. உங்கள் டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.

    இப்போது, மும்முனை போட்டி, நான்குமுனை போட்டி என்கிறார்கள். மக்கள் சக்தியுடன் நாம் ஒரு பக்கம். திமுக ஒரு பக்கம். பாஜக தலைமையில் மற்றும் பலர். இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும், திமுக-வை வீழ்த்த தவெக-வால் தான் முடியும். விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கின்றனர். தேர்தலில் ஒவ்வொரு வீட்டில் இருந்து ஒரு விஜய் வாக்களிப்பர். அன்று தெரியும் ஏன் விஜய்யை அழைத்தோம் என நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

    கருத்து கணிப்பு என்று வெளியிடுகிறார்கள். சிலர் உண்மையாகவும், சிலர் கடுப்பிலும் வெளியிடுகின்றனர். கடுப்பில் வெளியிடுபவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வீடுவீடாக சென்று பாருங்கள், வீட்டுக்கு வீடு தவெக இருக்கும். எனவே, முதலில் இருந்து கருத்து கணிப்பை தொடங்குங்கள். கட்சித் தொண்டர்கள், அமைச்சர்களின் அட்ராசிட்டியை பார்த்து தூக்கம் வரவில்லை என முதல்வர் கூறியிருக்கிறார். விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பேன் என தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூட முதலமைச்சரே கூறுவார்.

    நகர்ப்புறங்களில்தான் தவெகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறுகிறார்கள். விசில் சின்னம் ஊதாத ஊரே இல்லை. தமிழ்நாட்டின் அரசியலில் இருந்து தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். தவெக ஆளுங்கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு”!. விஜய் பரபரப்பு பேச்சு!
    Next Article தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறந்துவிடாதீர்கள்!. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்!
    Editor web3
    • Website

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.