Close Menu
    What's Hot

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறந்துவிடாதீர்கள்!. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்!
    தமிழ்நாடு

    தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறந்துவிடாதீர்கள்!. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்!

    Editor web3By Editor web3February 2, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Justice N. Anand Venkatesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    3500 ஆண்டுகள் பழமையான என் தமிழ் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாகத்தான், மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை தரமணியில் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.

    மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச்சுற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடந்தது.

    இறுதிச்சுற்று போட்டிக்கு பிறகு நடந்த நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன், ராகேஷ் சட்ட அறக்கட்டளை தலைவரும், நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே. பாலாஜி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்வில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆற்றிய நிறைவுரை : மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகாசசிறந்தவையாக குண்டூசி, சக்கரம், மின்சாரம், மொழி ஆகியவை. முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் உள்ள 6000 மொழிகளில், மொழிகளுக்கான எழுத்தகளை கொண்டவை 200ஐ கூட தாண்டவில்லை. அவற்றில் 120 – 130 மொழிகளுக்கு சொந்த எழுத்து கிடையாது. அதிலும், 1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் ஆண்டுகளை தாண்டாத அங்கலத்தை பேசி பெருமைபடுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி.

    இதில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் என்பது மனிதன் கடவுளிடம் பேசும் ஒரு மொழி. அதாவது சாமியும் சாமியும் பேசிக்கொள்ளும் அந்த மொழி நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லை. பேச்சு வழக்கில் 2000 ஆண்டுகளை கடந்து இருப்பவை சீன மொழி, தமிழ் மொழி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம்.

    ஆனால் கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கின்ற ஒரே மொழி தமிழ் தான் என நிரூபணமாகியுள்ளது. ஒரு மொழியில் இலக்கணம் உரைநடையில் இருக்கும். ஆனால் தமிழில் மட்டுமே இலக்கணமும் கவிதை வடிவில் இருக்கும். மரத்தை சகோதரியாக பார்த்தது தமிழ் இலக்கணம், ஆனால் இப்போது மனிதர்கள் மரமாக செல்கிறார்கள்.

    உலகத்தின் எல்லா மூலைமூடுக்குகளிலும் மதம், சாதி, இனம் ஆகியவற்றின் பெயரால் பதற்றம் நிறைந்த சூழலை மனிதன் செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் நாம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    திருக்குறளில் எந்த அரசனையும் தூக்கிப்பிடிக்கவில்லை, இறைவனை உயர்த்திப் பிடிக்கவில்லை, எந்த மதத்துக்கும் சார்பாக இல்லாமல் எந்த சமய சாயத்தையும் தான் மீது பூசிக்கொள்ளாமல் அகில உலக மாந்தர் குலத்தின் செழுமைமிக்க பாடப்பட்ட பொதுமுறை நூல் திருக்குறள். அதில் ஒவ்வொரு அறக்ககூற்றையும் நுட்பமாக சொல்ல முடிந்தது என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழனின் வளர்ச்சியை மனதில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். இந்த மொழியை பேசுவதும் பாதுகாப்பதும் நாம் அனைவரின் கடமை.

    மகனுடம் பராசக்தி படத்துக்கு போனேன். படத்தை பார்த்த பிறகு மொழி போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது தெரியுமா என கேட்டேன். தெரியாது என்றபோது ரொம்ப அவமானப்பட்டேன். அதை சொல்லிக்கொடுக்காமல் என் கடமையிலிருந்து தவறியதாக என்னை கருதிக்கொண்டேன். அது நாம் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். ஏனென்றால் எங்கள் பள்ளிபருவத்தில் போராட்டத்தின் அதிர்வுகள் இருந்தது.

    அப்போதெல்லாம், பள்ளிகளில் இரண்டாவது மொழி தமிழ் என்பது இயல்பு, திரைப்படங்களில் கூட தமிழ் வசனங்கள் தெறிக்கும், “கொங்குதேர் வாழ்க்கை” என்ற குறுந்தொகை பாடலை நான் கற்றேன், அதற்கான சந்தர்ப்பம் இருந்தது.

    கப்பலோட்டிய தமிழன் படத்தில் “ஊமைப் பெண்ணல்லவோ” பாடலில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும், வல்லின, மெல்லின, இடையினத்தை திரைப்பாடல்கள் மூலம் கற்றுக்கொடுத்தன.

    கம்யூனிசம் உள்ளிட்ட சித்தாந்தங்களை அறிந்தக்கொள்ள “மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் ” தமிழ்ப்பாடல்கள் உதவின.

    காலங்கள் மாறின காட்சிகள் மாறின. மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம் என காலகட்டம் வந்தபோது, தமிழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இந்தி, பிரெஞ்ச், சமஸ்கிருதம் என மாறினார்கள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இன்று தெரிகிறது.

    மொழியில் முக்கியம் மதிப்பெண் எடுப்பதில்லை, மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம். மதிப்பெண் முக்கியமாக போனதால் பள்ளிப்பாடத்திட்டத்தில் வேறு சில மொழிகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதனால் மாணவர்களின் exposure குறைந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். அதனால் தமிழ் எல்லாவற்றிலும் ஓரடி பின்னே வைத்துள்ளது

    இதற்காக நாம் அடுத்த வேள்வி நடத்த வேண்டிய முக்கிய காலகட்டம் இது. மொழியினை பற்றி பெருமை கொள்ளாது தமிழ்நாட்டில் வாழ்வது தமிழுக்கு இழுக்கு. ஆங்கிலம் தெரியாமல் தமிழ்நாட்டை தாண்ட முடியாது என எங்கள் எல்லவோருக்கும் தெரியும்.

    தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை மாறாக விரும்பி படிக்கிறான். என் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாக, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன்.

    நான் தமிழன் என தலைநிமிர்ந்து சொல். மொழிக்கு ஒரு இழுக்கு வரும்போது உன் குரல் உயர வேண்டும். எந்த கட்டத்திலும் இந்த தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறவாதீர்கள் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சரே விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பார்!. விஜய் அதிரடி பேச்சு!
    Next Article திருப்பரங்குன்றம் வழக்கு!. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் மதுரை கலெக்டர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.