Author: Editor web3
தங்கம் விலை இன்று (பிப்.2) சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது. தாறுமாறாக எகிறி வரும் தங்கம் விலை, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மையால், உலக நாடுகள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதே, இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு, கடந்த வியாழக்கிழமை சவரன் தங்கம் 9,520 ரூபாய் உயர்ந்து, 1,34,400 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் சனிக்கிழமை (ஜன.31) ஒரே நாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது. அதன்படி ஒரு பவுன் ரூ.1,19,200 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று(பிப்.2) கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1,11,600-க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலை கிலோ ரூ.3 லட்சத்துக்கும், கிராம் ரூ.20 குறைந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது
2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்பாக மீண்டும் ஒரு பெரிய பரபரப்பு எழுந்துள்ளது. இந்தத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த அனுமதியுடன் வந்துள்ள ஒரு முடிவு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான குழுநிலை ஆட்டத்தில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா விளையாடாமலேயே இரண்டு புள்ளிகளைப் பெறும்: பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவின்படி, பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் குழுப் போட்டி நடைபெறாது. இதன் மூலம் இந்தியாவுக்கு வாக்ஓவர் முறையில் இரண்டு புள்ளிகள் கிடைக்கும். டி20 போன்ற ஒரு குறுகிய தொடரில் இந்த இரண்டு புள்ளிகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இந்த முடிவு பாகிஸ்தானுக்கு வரும் காலங்களில் மேலும் கடினமான சூழ்நிலையை உருவாக்கக்கூடும். இந்த முழுப் பிரச்சனைக்கும் மூல காரணம் பாதுகாப்பு மற்றும் அரசியல்…
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு பிரதமர் மோடி மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பெரும் பாராட்டு தெரிவித்தனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, பல பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். பட்ஜெட் உரையின் போது, நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்றும், உற்பத்தி குறைந்து வருவதாகவும் மக்களவையில் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் பதிலளித்தார். “பட்ஜெட்டில் எந்தத் திருத்தத்தை அவர் குறிப்பிடுகிறார் என எனக்குத் தெரியவில்லை. பொருளாதாரமும் அதன் அடிப்படைகளும் வலுவாகவே உள்ளன. இந்த வரவு செலவுத் திட்டத்தில், சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளான துறைகளை மேம்படுத்த நாங்கள் முயற்சி செய்துள்ளோம். இதற்காக, சிறு மற்றும் குறு நிறுவனங்கள், ஜவுளி, தோல், கிராமப்புறங்களில் பணிபுரியும் மக்கள், விவசாயிகள், மதிப்புக்கூட்டல் மற்றும் பெண் தொழில்முனைவோருக்காகப் பல திட்டங்களை…
மத்திய பட்ஜெட் வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது, ஒன்றிய பாஜக அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும் -அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இன்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இடம்பெறவில்லை. மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம். மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்…
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026&27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடு சுமார் 10% உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். 2026&27ஆம் ஆண்டுக்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிமவளங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், ஹைதராபத்திலிருந்து சென்னைக்கும் அதிவேக தொடர்வண்டிப் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும், ஒதிஷா மாநிலம் தால்ச்சர் முதல் தமிழ்நாட்டின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை அமைக்கப்படும், பழவேற்காடு ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 3 இடங்களில் பறவைகளை பார்வையிடும் மையங்கள் அமைக்கப்படும்,…
மத்திய பட்ஜெட்டுக்கான அரசின் தொலைநோக்கு பார்வையை விளக்கிய பிரதமர் நரேந்திர மோடி, இதை “மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்ட பட்ஜெட்” என்று வர்ணித்தார். இந்தப் பட்ஜெட் தற்போதைய தலைமுறையினரின் கனவுகளை நிறைவேற்றும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த பட்ஜெட் நாட்டின் பெண் சக்தியின் அதிகாரமிக்க பங்களிப்பை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார் தொடர்ந்து பல பட்ஜெட்களைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று கூறிய பிரதமர் மோடி, அவரைப் பாராட்டினார். இது 140 கோடி இந்தியர்களின் லட்சியங்களைப் பிரதிபலிப்பதாகவும், சீர்திருத்தப் பயணத்தை வலுப்படுத்துவதாகவும், மேலும் வளர்ந்த இந்தியாவிற்கான ஒரு தெளிவான செயல் திட்டத்தை வகுப்பதாகவும் அவர் கூறினார். “2047க்குள் விக்சித் பாரத் (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கிய நமது பயணத்திற்கு இந்த பட்ஜெட் ஒரு உறுதியான அடித்தளமாக உள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் சீர்திருத்தத்திற்கு புதிய வேகத்தை அளிக்கும்…
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 131 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்றும் அறநிலையத்துறைக்கு தனி சட்டத்தை இயற்றியவர் ஓமந்தூரார் என்றார். மேலும் பேசிய அவர், ஒன்றிய பட்ஜெட் அம்பானி அதானிக்கு பிரதமரின் கூட்டாளிகளுக்கான நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என்றும் தேசத்தின் பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் ஒன்றிய பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான நிதி நிலை அறிக்கையாக இருக்காது கூறினார். தேர்தல் வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வு இருக்காது அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உயர்த்தும் என பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 தோல்வியை…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை இன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் இந்த பட்ஜெட் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க நல்ல செய்திகளைக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், குறிப்பாக விரைவில் சட்டமன்றத் தேர்தல்களைச் சந்திக்கவிருக்கும் மாநிலங்களுக்காகப் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் இதில் அடங்கும். வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், இந்த பட்ஜெட் குறிப்பாக இரயில்வே மற்றும் அரிய வகை கனிமங்கள் மீது கவனம் செலுத்துகிறது. 1.ஏழு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள்: ஏழு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த வழித்தடங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை முக்கிய நகரங்களுடன் இணைக்கும். இது பயணத்தை வேகமானதாகவும், தூய்மையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றும். இதன் மூலம், சாலை மற்றும் குறுகிய தூர விமானப் பயணங்களுக்கு…
நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து 9 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா, இந்த பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு வாசித்து முடித்தார். இதேபோல், கடந்த ஆண்டு 1 மணிநேரம் 17 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 2024ல் (இடைக்கால பட்ஜெட்) 56 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 2023ல் 87 நிமிடங்கள், 2022ல் 1 மணி நேரம் 40 நிமிடங்க்ள், 2021ல் 1 மணிநேரம் 40 நிமிடங்கள், 2020ல் 2 மணிநேரம் 41 நிமிடங்களும் பட்ஜெட் உரையை அவர் வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி குழு GRANT ஆக அறிவிப்பு. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வருமான வரிசட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல். விபத்து கால காப்பீடுகள் என்பது வருமான வரி விலக்கை பெறுகிறது. வருமானவரி தாக்கல் முறை மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.4 லட்சம் வரை: 0%, ரூ.4 லட்சம் – ரூ.8 லட்சம் வரை 5%, ரூ.8லட்சம் – ரூ.12 லட்சம் வரை -10%, ரூ,12 லட்சம் – ரூ.16 லட்சம் வரை – 15%, ரூ.16லட்சம் – ரூ. 20 லட்சம் வரை – 20%, ரூ.20 லட்சம் – ரூ. 24 லட்சம் வரை -25%. ரூ.24 லட்சத்திற்கு மேல் -…