Author: Editor web3

தைப்பூசத் திருநாளையொட்டி, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும். இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து ரூ.1,899-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 110 ரூபாய் உயர்ந்த நிலையில் இம்மாதமும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

Read More

புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி நாளை (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான சுகாதார செஸ், அதிகபட்சமாக 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல்  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது. புதிய முறை நடைமுறைக்கு வருவது மூலம் சிகரெட் நீளத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் புதிய முறை அமலுக்கு வருகிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ரூ.2.05-8.50 வரை விலை உயர்கிறது. கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது. ஒரு சிகரெட்டுக்கு எவ்வளவு உயரும்: குறுகிய, பில்டர் இல்லாத சிகரெட்…

Read More

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரையாண்டு விடுமுறையின் போது தொடங்கிய இப்போராட்டம் பள்ளிகள் திறந்த பின்பும் தொடர்ந்தது. சென்னை டிபிஐ வளாகத்தில் 36 வது நாளாக இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் , மூவர் குழு அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்பி, கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் அமைச்சரின் அறிக்கையையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மாணவர்களின்…

Read More

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சாத்தியக்கூறால் மத்திய கிழக்கு அரசியல் தொடர்ந்து கொந்தளித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவை இராணுவ நடவடிக்கை எடுக்கத் தூண்டும் வகையில் சவுதி அரேபியா திரைமறைவில் செயல்பட்டு வருகிறது. Axios ஊடகம் மேற்கோள் காட்டிய வட்டாரங்களின் தகவலின்படி, சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் (KBS), வாஷிங்டன் டி.சியில் மிக முக்கியமான ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, வெள்ளை மாளிகையின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் கூட்டு தளபதிகள் குழுவின் தலைவர் ஜெனரல் டான் கைன் ஆகியோர் கலந்து கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், ஈரான்மீது அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய தாக்குதல் மற்றும் அதனால் மண்டலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆலோசிப்பதுதான் என்று அந்த…

Read More

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தானும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் நிதி திரட்டுவதற்காக மற்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். நேற்றி வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீப், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனது அரசாங்கம் எடுத்த முடிவுகள் குறித்துப் பேசினார். பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு மேம்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட ஷெரீப், கையிருப்பு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், ஆனால் இதில் நட்பு நாடுகள் மற்றும் பிற நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களும் அடங்கும் என்றும் கூறினார். கடன் வாங்கச் செல்பவர்கள் தலைகுனிந்துதான் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று கூறிய அவர், அந்தக் கடனைப் பெறுவதற்காகத் தானும் ஆசிம் முனீரும் அனுபவிக்க நேர்ந்த அவமானகரமான சமரசங்கள் குறித்து ஷரீஃப் மேலும் விளக்கமாக பேசினார். அதாவது, “ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் நானும் உலகெங்கிலும் பணம் கேட்டுச்…

Read More

அஜித் பவார் மறைவையடுத்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகா​ராஷ்டிர அரசி​யலில் திடீரென ஏற்​பட்​டுள்ள வெற்​றிடத்தை தொடர்ந்து, துணை முதல்​வர் பதவிக்​கான முன்​மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார். இந்தநிலையில், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றுள்ளார். இன்று சனிக்கிழமை மும்பையில் உள்ள விதான் சபாவில் நடந்த சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அவர் என்சிபி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றே துணை முதலமைச்சராக பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. சுனேத்ரா பவார் 1963ஆம் ஆண்டு தராஷிவ் மாவட்டத்தில் மராத்தா குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே அரசியல் சூழலில் வளர்ந்தார். அவரது தந்தை பாஜிராவ் பாட்டில் உள்ளூர் அரசியல்வாதியாக இருந்தார். 1980களில் அவரது சகோதரர் பதம்சிங்…

Read More

சந்திக்கவே முடியாமல் Not reachable -ல் இருக்கும் விஜய்யை பற்றி கேட்டு  எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று செந்தில் பாலாஜி காட்டமாக பேசியுள்ளார். கோவை பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக – காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான…

Read More

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நாம் அனைவரும் சில நேரங்களில் நம் உடல் தேவைகளை புறக்கணிக்கிறோம். அலுவலகக் கூட்டமாக இருந்தாலும் சரி, பள்ளி அல்லது கல்லூரி வகுப்பாக இருந்தாலும் சரி, நீண்ட பயணமாக இருந்தாலும் சரி, அல்லது அருகில் கழிப்பறை இல்லாதிருந்தாலும் சரி, சிறுநீர் கழிப்பதை அடக்கிவைக்கும் சூழ்நிலைகள் பல உள்ளன. சில நேரங்களில், சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிப்போம் என்று நினைத்து வேண்டுமென்றே சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப் போடுகிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் நீண்ட நேரம் சிறுநீர் கழிப்பதை அடக்கும் இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது நம் உடல் அடிக்கடி சமிக்ஞை செய்கிறது, ஆனால் நாம் இந்த சமிக்ஞைகளைப் புறக்கணித்தால், இந்தப் பழக்கம் படிப்படியாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை மற்றும் முழு சிறுநீர் அமைப்புக்கும் குறிப்பாக தீங்கு விளைவிக்கும். எனவே…

Read More

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வரும் நேற்று ஒரே நாளில் மட்டுமே சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையும் மாலையும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350 குறைந்து ரூ.15,850க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து…

Read More