Author: Editor web3

தவெக தலைவர் விஜய் முதல் முறையாக தேசிய ஊடகமான NDTVக்கு நேர்காணல் அளித்துள்ளார்.. NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் ஷிவ் அரூர் மற்றும் அரசியல் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோருக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். கேள்வி : கரூர் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உங்கள் பதில் தாமதமானதற்கு காரணம் என்ன? விஜய் : கரூர் சம்பவம் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அது இன்னும் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை மனதில் ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது. எல்லாவற்றுக்கும் உடனடியாக நான் எதிர்வினை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. கேள்வி : நெருக்கடி நேரங்களில் உங்கள் மௌனம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என சிலர் கூறுகிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்? விஜய் : நான் உடனடியாக பதிலளிக்கவில்லை…

Read More

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சமீப காலமாக விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், நேற்று, தங்கம் விலை பவுனுக்கு காலையில் ரூ.4,800 குறைந்தது, மாலையில் மேலும் ரூ.2,800 குறைந்து, மொத்தமாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,26,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று (ஜன.31) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.7600 சரிந்துள்ளது. அதன்படி, இன்று கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1,19.200-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், நேற்றைய தினம் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது. இதனால் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.405க்கும், ஒரு கிலோவின் விலை ரூ.4.05 லட்சத்துக்கும் விற்பனையானது. இன்று…

Read More

கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ருபாயா கோல்டன் (coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, கோல்டன் தாதுவை உற்பத்தி செய்யும் ஒரு சுரங்கத்தில் நிகழ்ந்துள்ளது. உலகின் கோல்டன் விநியோகத்தில் சுமார் 15% இங்கிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது. இது மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் கேமராக்கள் , விண்வெளித் துறை பாகங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகளில் பயன்படுத்தப்படும் டாண்டலம் என்ற உலோகமாகப் பதப்படுத்தப்படுகிறது. மாகாணத்தின் கிளர்ச்சியாளர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் லுமும்பா கம்பேரே முயிசா, சரியான எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை என்றார். “இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் சந்தைப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சிலர் சரியான நேரத்தில் மீட்கப்பட்டனர் மற்றும் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது,” என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார், காயமடைந்த சுமார் 20 பேர் சுகாதார வசதிகளில் சிகிச்சை பெற்று…

Read More

அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சுநேத்ரா பவார் மகாராஷ்டிராவின் அடுத்த துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், புதன்கிழமையில் (ஜன. 28) விமான விபத்தில் சிக்கி பலியானார். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமையில் நடைபெற்றது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, பிளவுப்படுத்தி பின்னர் அதை தனதாக்கிக் கொண்டவர் அஜித் பவார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு சரத் பவார் கட்சியையும், தனது கட்சியையும் ஒன்றிணைக்க அஜித் பவார் முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலியாக உள்ள துணை முதல்வர் பதவிக்கு அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவாரை நியமிக்க தேசியவாத காங்கிரஸ் (NCP – அஜித் பவார் பிரிவு) ஆலோசித்து…

Read More

2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில், பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில், பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன். இந்த அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி. விருது பெறும் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.

Read More

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்ட செய்தி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை அதிகாலை (ஜனவரி 30), கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு செயலிழந்ததாகச் செய்தி பரவியது, இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது. சிலர் கோலி திடீரென இன்ஸ்டாகிராமில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகக் கூறினர், மற்றவர்கள் இது இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று குறிப்பிட்டனர். இருப்பினும், கிங் கோலியின் கணக்கு இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது. https://x.com/___100rabh/status/2017064708004860315? கோலியின் கணக்கு முடக்கப்பட்ட உடனேயே இன்ஸ்டாகிராமிற்கு 7 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.  உண்மையில், கோலியின் கணக்கு முடக்கப்பட்ட உடனேயே, இன்ஸ்டாகிராம் ஒரே ஒரு மணி நேரத்தில் 7 மில்லியன் பின்தொடர்பாளர்களை இழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவத் தொடங்கின. இன்ஸ்டாகிராமிற்கு எதிரான ஒரு போராட்டமாக கோலியின் ரசிகர்கள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அந்தத் தகவல் கூறியது. இன்ஸ்டாகிராமின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை…

Read More

காங்கிரஸ் மீது மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. தளபதி வைத்த விமர்சனத்துக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக நிர்வாகி தளபதி ‘நாங்கள் இல்லாவிட்டால் ‘இந்தியா’ கூட்டணியே கிடையாது’ என்று பேசியிருந்தார். இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “39 காங்கிரஸ் தலைவர்களை அழைத்து தமிழ்நாடு காங்கிரஸின் நிலை பற்றி, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கேட்டறிந்தார்கள். அதற்கு முன்பு டிசம்பர் 3-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸின் நிலையை எடுத்து சொன்னது. அந்த குழு சந்திப்பிற்கு 2 நாட்கள் முன்பு தி.மு.க எம்.பி கனிமொழி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அது பற்றி வெளிவரும் செய்திகள் கற்பனை கதைகளாக தான் இருக்கும். மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெற…

Read More

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில், “தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள், ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தபோது, கூடுதல் ஊதியம் வழங்காமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் விளம்பர நாடகம் நடத்தினார் முதலமைச்சர். மேலும், ஊதிய உயர்வு கேட்ட தூய்மைப் பணியாளர்களை அவமானப்படுத்தும் விதமாக, கோயம்புத்தூரில், குப்பை அள்ளும் வாகனத்தில், அவர்களுக்கான உணவு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்றும், திமுக அரசு வழங்கும் இந்த உணவை உண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி, இந்த தரமற்ற உணவைக் கூட, அவர்களை வெகுநேரம் காத்திருக்க வைத்தே வழங்குகிறது திமுக அரசு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அவர்களது ஆழ்மனதில், அவர் கடையேழு வள்ளல்களில் ஒருவர் என்ற எண்ணத்தை யாரோ விதைத்துள்ளார்கள் போலும். நியாயமான ஊதிய உயர்வு கொடுப்பதை விட்டுவிட்டு, தரமற்ற உணவை…

Read More

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2007ஆம் ஆண்டு இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்றபோது, அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங், 2011-இல் ஒரு நாள் உலக கோப்பையை இந்தியா வென்றபோது தொடர் நாயகனாகவும் விளங்கினார். 2019-ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்த நிலையில், இவரது ஓய்வுக்கான காரணம் குறித்து அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுவதுண்டு. தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தது எம்.எஸ்.தோனிதான் என யுவராஜின் தந்தை கூறியது சர்ச்சையாகவும் வெடித்தது. இந்நிலையில், முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் யூடியூப் சானலில் பல்வேறு விஷயங்களை யுவராஜ் தற்போது பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு உரிய ஆதரவோ மரியாதையோ வழங்கப்படாததாக தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆர்வமே இல்லாமல் ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும் என கருதியே ஓய்வு முடிவை தான் அறிவித்ததாகவும் யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார். எனது கேரியரின் இறுதிக்கட்டத்தில் தகுந்த மரியாதையும்,…

Read More

விஜயகாந்த் இல்லாத முதல் பொதுத் தேர்தலை பிரேமலதா தலைமையிலான தேமுதிக இந்த முறை களமிறங்கவுள்ளது. தேமுதிகவுக்கு வெறும் 2% வாக்குகள் மட்டுமே இருப்பதாக கணிக்கப்படும் நிலையில், திமுக, அதிமுக, தவெக என மும்முனைகளில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த தகவல் வெளியாகின்றன. இதற்கு காரணம், தங்களின் பலத்தைவிட, தங்களை எதிரணிக்கு செல்லவிடாமல் தடுப்பதில்தான் இந்த கட்சிகள் குறியாக இருக்கின்றன. இதை புரிந்துகொண்ட பிரேமலதா, அதிக இடங்களைப் பேரம் பேசி வாங்கும் முனைப்பில் இழுத்தடித்து கொண்டிருக்கிறது. இதேபோல், ஒரு ராஜ்ய சீட்டையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தேமுதிக நினைக்கிறது. இருப்பினும் கூட்டணி குறித்த முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் எளிதாக தேமுதிக வெற்றி சட்டசபை போக முடியும் என்றாலும், விஜயகாந்த் தொடக்கத்திலிருந்தே திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர் என்பதால், மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பது அக்கட்சியின் அடிப்படை அடையாளத்தையே கேள்விக்குறியாக்கிவிடக்கூடும் என்பதால் பிரேமலதா மௌனமாகவே…

Read More