Author: Editor web3

கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட விவகாரத்தில் சலசலப்பு நிலவிவருகிறது. இந்தநிலையில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க, கனிமொழி எம்.பி. டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸின் சில தலைவர்கள் முன்வைத்த கருத்துகள் தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை கனிமொழி தெளிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி,  திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதா? இல்லையா என தடுமாறுகிறது. திமுக டெல்லிக்கு அடிமையாகி விட்டது. ராகுல்காந்தி எம்.பி உடனான கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, திருவாரூர் செய்தியாளர் சந்திப்பில்,  எம்.பி கனிமொழி முகத்தில் துண்டை போட்டுக்கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? முகத்தில்…

Read More

நேற்றுவரை வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று சற்று சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 9 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 34ஆயிரத்து 400ரூபாய்க்கும், ஒரு கிராம் 16 ஆயிரத்து 800க்கு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10  குறைந்து ரூ.415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.4,15,000-க்கு விற்பனையாகிறது. வல்லுநர்கள் அடுத்த சில நாட்களில் விலை மீண்டும் ஏறலாம் அல்லது…

Read More

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம்  ஓமலூரில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 2000 பேர் நேற்று (ஜன.29) அதிமுகவில் இணைந்தனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில்,ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில், அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர், அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மாதேஸ்வரன் மற்றும் ஆதரவாளர்கள், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவின் பலம் குறைந்ததாக பார்க்கப்பட்டது, சேலம் அதிமுகவின் கோட்டையாக இருந்துவருவதால் இதனை தன் வசப்படுத்த பல முயற்சிகளை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓமலூரில் நடந்த நிகழ்ச்சியில்…

Read More

தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை. தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி…

Read More

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளை (ஜன.30) முடிவடைகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 16.02 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்த இந்த அவகாசத்தை பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். இதனால் 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்தது. இந்த மாற்றம் அரசியல் கட்சிகள் மத்தியில் கவனம் பெற்றது. ஜனவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைய வேண்டிய பெயர் சேர்ப்பு பணி, ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டது. புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு பதிவேற்றப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More

அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தள பதிவில், “சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சென்னை தரமணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை மீண்டும், மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில்…

Read More

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று தேனி பெரியகுளத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், என் டி ஏ கூட்டணியில் இணை நான் ரெடி, என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ள அண்ணன் எடப்பாடி தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தநிலையில், சேலம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். தன்னை எப்படியாவது கட்சியில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் சுமார் 2,000 பேர் சேர்ந்து அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பது ஓபிஎஸ்க்கு கட்சியில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்த்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

Read More

விமான விபத்தில் நேற்று (புதன்) உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல், இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் அஜித்பவார் மற்றும் அவருடன் பயணித்த விமானி கேப்டன் சுமித் கபூர், பெண் துணை விமானி கேப்டன் சாம்பவி பதக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, மும்பை போலீசைச் சேர்ந்த அஜித்பவாரின் பாதுகாப்பு அதிகாரி விபித் ஜாதவ் உள்ளிட்டோர் மரணமடைந்தனர். இதனையடுத்து அவர்களின் உடல்கள் அஹில்யாபாய் ஹோல்கர் அரசு மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை நடந்தது. இதன் பிறகு அஜித்பவாரின் உடல் மருத்துவமனையிலிருந்து காட்டேவாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை…

Read More

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசு, அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்துவிட்டது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில்,  “சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன. முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு…

Read More

புதிய UGC விதிமுறைகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடங்கியது. அப்போது, மனுதாரர்களின் வழக்கறிஞர், “அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. அனைத்து குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், இந்த புதிய விதிமுறைகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் சமூகத்தில் பாகுபாட்டை உருவாக்குகின்றன. அவை ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன,” என்று கூறினார். மனுதாரர்களின் வழக்கறிஞர், விதி 3(e) ஏற்கனவே பாகுபாட்டை வரையறுக்கிறது என்று வாதிட்டார். அப்படியிருக்க, விதி 3(c)க்கு என்ன தேவை? அது சமூகத்தில் பிளவுகளை உருவாக்குகிறது. “மற்ற குழுக்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கும் என்னால் உதாரணங்களைக் கூற முடியும், ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை,” என்று வழக்கறிஞர் கூறினார். இதற்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், “அதற்குத் தேவையில்லை. புதிய விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவுக்கு (சமத்துவ உரிமை) இணக்கமாக உள்ளதா என்பதை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம்,”…

Read More