Author: Editor web3
தங்கம் விலை இன்று(ஜன.29) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.1,190உயர்ந்து ரூ.16,800க்கும், சவரன் ரூ.9,520 உயர்ந்து ரூ.1,234,400க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று புதன்கிழமை (ஜன.28)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கும், சவரன் ரூ.1,24,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் (ஜன.29)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1,190அதிகரித்து ஒரு கிராம் ரூ.16,800க்கும், ரூ.9,520அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.25,000 அதிகரித்து ரூ.4,25,000-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.425க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸுக்கு மீண்டும் பவர் கிடைக்கும் என்று விஜய்யின் தந்தை கூறியது பொதுவான கருத்து என்றும், கூட்டணி குறித்து விஜய் மட்டுமே அறிவிப்பார் என்றும் அக்கட்சியின் இணை செயலாளர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து மண்டல வாரியாக பிரச்சாரகுழு செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்துகிறோம். ஒரு சில நாட்களில் கட்சி தலைவர் பரப்புரை நிகழ்வு குறித்து அறிவிப்போம். எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது பொதுவான கருத்தை தான் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார். கூட்டணி குறித்து தலைவர் அறிவிப்பார் என்றார். திமுக வை எதிர்த்து பேசாதாவர்கள். எம்.ஜி.ஆர் உழைத்து ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதா வும் உழைத்தார். ஆனால் அந்தக் கட்சி எப்படி இருக்கிறது. அவர்களின் நிலை எப்படி மாறிவிட்டது. அதற்காக தான் NDA வில் இருக்கிறார்கள். கரூர் சம்பவத்தை அரசியலுக்காக மாற்றி மாற்றி பேசுவார்கள். ஆனால் மக்களுக்கு தெரியும். செங்கோட்டையன் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அதிமுக – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், ”ஜனநாயகம் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று சாலையில் செல்லும் பெண்மணிக்கு கூட தெளிவாக தெரியும். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள் எல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். “சுதந்திரத்துக்காக போராடிய வரலாறு இருக்கிற கட்சி, தற்போது நீர்த்துப் போயிருப்பதற்கு…
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், உதவியாளர் பிங்கி மாலி, தலைமை விமானி சாஹில் மதன், துணை விமானி ஷம்பவி பதக் ஆகியோர் உயிரிழந்தனர். விமான விபத்து சம்பவம் காலை 8:44 மணிக்கு நிகழ்ந்தது. மும்பை-பாராமதி பயணத்திற்காக VSR Ventures-ஐ சேர்ந்த Learjet 45 (VT-SSK) விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. விமானிகள் முதல்முறையாக தரையிறங்க முயன்ற போது ஓடுதளம் சரியாக தெரியவில்லை எனத் தெரிவித்ததால் தரையிறங்காமல் மேலெழும்பினர். இரண்டாவது முயற்சியில் ஓடுதளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிமிடத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா அரசு இந்த விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். AAIB (Aviation Accident Investigation Bureau) தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றது. விசாரணை முடிவுகள் வெளியாகும்…
டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய அணியின் நம்பிக்கை உச்சத்தில் உள்ளது; இதன் பிரதிபலிப்பு சமீபத்திய ஐசிசி டி20 தரவரிசையிலும் தெளிவாகக் காணப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள், அந்த சிறந்த செயல்திறனின் பலனை நேரடியாக பெற்றுள்ளனர். குறிப்பாக, அபிஷேக் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தங்களின் அதிரடி பேட்டிங்கின் மூலம் தரவரிசையில் ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளனர். அபிஷேக் சர்மாவின் நம்பர் 1 நிலை: இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தற்போது டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான அவரது ஆட்டம் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரை சதங்கள் அடித்த அபிஷேக், 929 புள்ளிகளைப் பெற்று, தனது சிறந்த தரவரிசைப் புள்ளிகளுக்கு (931) மிக அருகில் வந்துள்ளார். தற்போது,…
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 2 ஆம் தேதி தவெகவுடைய 3 ஆம் ஆண்டு துவக்க விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப். 2 ஆம் தேதி கட்சிக்கான பெயரையும் கட்சிக் கொடியையும் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2ம் ஆண்டு துவக்க விழாவில் மற்ற அரசியல் கட்சிகளை விஜய் நேரடியாகவே தாக்கி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது, “அரசியலில் யார் எப்போது யாரை எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் கிடையாது என்று கூறுவார்கள். மக்களுக்கு அதிகமாகப் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் அதை வரவேற்பார்கள், ஆனால் ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும். கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாக…
டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சந்தித்தார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அந்தவகையில் திமுக பிரதிநிதிகள் குழு இன்று புதன்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லியில் உள்ள காங். மூத்த தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் ராகுல் காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்தார். இரு கட்சிகளின் வட்டாரங்களின்படி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, சட்டமன்றத் தேர்தலுக்கான தங்கள் கட்சித் தலைமை வழங்கும் இடப் பங்கீட்டு முன்மொழிவைத் தெரிவிப்பதற்காக ராகுல் காந்தியை சந்தித்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், “கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் வழங்கப்பட்டன; அதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது இரண்டு தொகுதிகளை கூடுதலாக வழங்கி அந்த எண்ணிக்கையை மேம்படுத்தலாம் என்று திமுக வட்டாரங்கள்…
தமிழக வெற்றி கழக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் மீண்டும் பவர் கிடைக்கும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார். விஜய் நடிப்பதை விட்டு அரசியலில் களமிறங்கி தவெகவை தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் இதுவரை பெரிய அளவில் அரசியல் பற்றி பேசாத விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். பாரம்பரியமுள்ள காங்கிரஸ், மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தேய்ந்து விட்டதாக விமர்சித்த அவர், விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் பவருக்கு வரும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ், திமுகவிடம் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அவ்வப்போது காங்கிரஸ் நிர்வாகிகளும் பொதுவெளியிலேயே பேசி வருகின்றனர். இதற்கு திமுக தரப்பிலும் இசைவு கொடுப்பதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்களும் விஜய் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிப்பதாகவும்…
இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவை சுட்டிக்காட்டி அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற ஒரு சிறிய விமானம், புதன்கிழமை காலை தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விபத்தில் சதி நடந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, இந்தச் சம்பவத்தை நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பு என்றார். என்.டி.ஏ.வில் இருந்து அஜித் பவார், வெளியேறவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருவதை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, இந்த விபத்து நடந்தது…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ரூ.1,24,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,330க்கும், ரூ.2,960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,22.640 க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த அதிர்ச்சியாக பிற்பகலிலும் சவரனுக்கு மேலும் ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.15,610க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று வரி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த வட்டி விகித முடிவுதான் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்யும். வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலையானது பெரிய அளவில் மாறும். அதேநேரம் டாலர் பலவீனமடைந்து வருவதால்…