Author: Editor web3
தங்கம் விலை இன்று(ஜன.28) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.370 உயர்ந்து ரூ.15,330க்கும், சவரன் ரூ.2,960 உயர்ந்து ரூ.1,22,640க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று செவ்வாய் கிழமை (ஜன.27)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.14,960-க்கும், சவரன் ரூ.1,19,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் (ஜன.28)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,330க்கும், ரூ.2,960அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,22.640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.13,000 அதிகரித்து ரூ.4 லட்சத்துக்கும், கிராமுக்கு ரூ.13 அதிகரித்து ஒரு கிராம் ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டு…
விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார் மற்றும் அவரது பாதுகாப்புக்கு சென்ற 6 பேர் உயிரிழந்ததாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பாராமதியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அஜித் பவார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். https://x.com/ANI/status/2016360094838190589? மேலும் இந்த விபத்தில் அஜித் பவார் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் மரணமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. அஜித் பவார் யார்?அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) ஒரு தலைவர் மற்றும் தற்போது மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பணியாற்றுகிறார். இவர் என்சிபி (சரத்…
திமுக கூட்டணி கட்சிகளிடையே நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், வரும் பிப்.3ம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “எத்தனை எதிரிகள் வந்தாலும் எங்களை அசைத்துப் பார்க்கமுடியாது” எனச் சொல்லிக் கொண்டே இருந்த திமுக கூட்டணியின் மீது கண் பட்டுவிட்டது போலிருக்கிறது. உள்ளே இருக்கும் கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான கருத்துகளை பேச ஆரம்பித்திருப்பதால் கூட்டணிக்குள் சலனப் புயல் வீச ஆரம்பித்திருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் காங்கிரஸ் சார்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே பிரச்சனை வெடித்துள்ளது. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இது தொடர்பான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு பிடிக்கொடுக்காமல் திமுக சார்பிலும் அமைச்சர் முதல் நிர்வாகிகள் வரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கமுடியாது என்று தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் மற்ற கட்சிகளும் திமுகவிற்கு நெருக்கடி…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை 9-வது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. முதல் கட்ட கூட்டத் தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி மாதம் 13ம் தேதி முடிவடைகிறது. 2-வது கட்ட கூட்டத் தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மொத்தம் 30 அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது.…
கூட்டணி குறித்து நான் என்ன முடிவு எடுப்பேன் என தொண்டர்கள் பயப்பட வேண்டாம், நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் அவர்களுடன் தான் கூட்டணி அமைப்பேன் என்ற் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிவகாசியில் தேமுதிகவின் “உள்ளம் தேடி இல்லம் நாடி” கேப்டன் ரத யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் சிவகாசி என்.ஆர்.கே.ஆர் சாலையிலிருந்து பைபாஸ் சந்திப்பு சாலை வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்களுக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விருதுநகர் என்றாலே கேப்டன் கோட்டை என்பதை விருதுநகர் நிரூபித்துள்ளது. இலங்கை வாழ் தமிழர்கள் கொடுத்த அன்பு பரிசுதான் நான் பிரச்சாரம் செய்யும் ரதம். மக்கள் மீது கொண்ட அன்பினால் ரதத்தை பரிசாக கொடுத்துள்ளார்கள். விருதுநகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் விஜயபிரபாகர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார், ஆனால் அந்த வெற்றி…
நாளை முதல், ஆதார் மையங்களுக்குச் செல்லாமல் எங்கிருந்தும் மொபைல் எண்ணை எளிதாகப் புதுப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் ஒரு அடையாள அட்டையை விட பல மடங்கு முக்கியமானதாக மாறியுள்ளது. வங்கி கணக்குகள், அரசு நலத்திட்டங்கள், ஆன்லைன் சேவைகள் என அனைத்திற்கும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியமாக உள்ளது. மொபைல் எண் செயல்பாட்டில் இல்லை ஓடிபி வராத பிரச்சனை, சேவைகள் தடைபடும் சூழ்நிலை போன்றவை பலருக்கும் தலைவலியாக இருந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. UIDAI அறிவிப்பின்படி, 2026 ஜனவரி 28 முதல் ஆதார் மொபைல் எண் புதுப்பிப்புக்கு புதிய, நெகிழ்வான வசதி செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஆதார் சேவைகள் மேலும் எளிதாகவும், பயனர் நட்பாகவும் மாற்றப்படுகின்றன. இந்த முடிவு, பொதுமக்களின் தினசரி சிக்கல்களை குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் மொபைல் எண்ணை மாற்ற அல்லது…
சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் சென்னை கிண்டி கிங் நிலைய வளாகத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழம் சார்பாக 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 417.07 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் முருகானந்தம், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ் குமார் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையில் 7 தளங்களாக கட்டப்படும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தொடரையொட்டி நாளை (28ம் தேதி) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும்…
2026 தேர்தலுக்கான அறிவிப்புகளை விஜய் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் நிலையில், திட்டமிட்டப்படி நாளைமுதல் தவெக தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் திவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் முதல்முதலாக தேர்தலில் களம்காணும் விஜய்யும் தனது கட்சி பணிகளில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே, கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், மாமல்லபுரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை விஜய் அறிவித்திருந்தார். ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும், அரசியல் பணிகளில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில், திட்டமிட்டப்படி நாளைமுதல் தவெக தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் என்று விஜய் அறிவித்துள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தப் பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, அதிமுகவிலிருந்து…
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, (ஜனவரி 27) இன்று இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்திடப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் இந்தியப் பொருட்களில் சுமார் 97 சதவீதத்திற்கான வரிகள் நீக்கப்படும். இதன் விளைவாக, இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 பில்லியன் டாலர் சுங்க வரிச் சேமிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியச் சந்தையில் ஐரோப்பியப் பொருட்களின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பு ஏற்படும். பீர் மற்றும் மதுபானங்களின் விலை குறையும்: பீர் விலைகள் 50 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்றும், ஒயின் விலைகள் 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய மாற்றம் வாகனத் துறையில் காணப்படலாம், அங்கு தற்போது 110 சதவீதமாக உள்ள வரிகள் 10 சதவீதமாகக் குறைக்கப்படலாம். கூடுதலாக, பாஸ்தா மற்றும் சாக்லேட் போன்ற…