Author: Editor web3

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இன்று கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, இதுவரை இல்லாத மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்று பிரதமர் நரேந்திர மோடி விவரித்தார். இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தற்போதைய வர்த்தகம் சுமார் 180 பில்லியன் டாலர்கள் என்றும், 800,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐரோப்பாவில் பணிபுரிவதாகவும் அவர் கூறினார். இந்த ஒப்பந்தம் மூலோபாய தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி, உற்பத்தி மற்றும் முதலீடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும். பிரதமர் மோடியின் கூற்றுப்படி, 27 நாடுகளுடனான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், விவசாயிகள், சிறு தொழில்கள் மற்றும் MSME-களுக்கு ஐரோப்பிய சந்தையை எளிதாக அணுக உதவும், உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையே முதலீட்டை துரிதப்படுத்தும், இது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பரவலான நன்மைகளை வழங்கும். இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுக் செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்த ஒப்பந்தம்…

Read More

இந்தியாவிலேயே முதல் முறையாக, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்புடன் இருக்கக்கூடிய, 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். மேலும் ஏறக்குறைய 79,000 பெண்கள் இந்த நோயால் தங்கள் உயிரை இழக்கின்றனர். மற்ற பல புற்றுநோய்களைப் போலல்லாமல், இதை பெரும்பாலும் தடுக்க முடியும். நவீன மருத்துவமானது எச்.பி.வி தடுப்பூசி, வழக்கமான பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகால விழிப்புணர்வு போன்ற சக்திவாய்ந்த வழிமுறைகளை கொண்டுள்ளது. இவற்றின் மூலம் இந்த நோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியும். தடுப்பூசியை சரியான நேரத்தில் செலுத்திக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை தடுக்க முடியும். இந்தநிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, 14…

Read More

தவெக கூட்டணியில் இணைய இருந்த டிடிவி தினகரன், கடைசி நேரத்தில் முடிவை மாற்றிவிட்டார் என்று கூறிய செங்கோட்டையன் கருத்துக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,  டிடிவி தினகரன் எங்களுடன் வரவேண்டும் என நினைத்தார். இப்போது சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம் என்று பேசியிருந்தார். இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், செங்கோட்டையன் கருத்துக்கு விளக்கமளித்துள்ளார். அதாவது, 1986-87 ஆண்டுகளிலிருந்தே நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். நான் தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணிக்கு வர வேண்டும் என விரும்பினார், ஆனால் மறுக்க முடியாமல் தயக்கமாக இருந்தேன். நான் கூட்டணிக்கு வருவேன் என்று அவர் நம்பினார், நானும் அதனை மறுக்கவில்லை. ஆனால் நான் தவெகவில் இணையவில்லை என்பதற்கு சூழ்நிலை காரணமல்ல. அரசியல் சதி நிறைந்த துறை. ஆட்சி அமையும் போது நல்ல உறவுகள் வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடவில்லை. அம்மா ஆட்சி மீண்டும்…

Read More

மாலத்தீவு குறித்த பிரதமர் மோடியின் பதிவை Grok AI தவறாக மொழிப்பெயர்த்ததால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. AI உருவாக்கும் மொழிபெயர்ப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பும் வகையில், X தளத்தின் AI உதவியாளர் Grok ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தையொட்டி மாலத்தீவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட தூதரக பதிவை தவறாக மொழிபெயர்த்த Grok, அதில் அரசியல் ரீதியாக சுமத்தப்பட்ட சொற்களை சேர்த்துள்ளது. அதாவது, குடியரசுத் தின வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு, மோடி அவர்களது மொழியிலேயே எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். அதில் இருநாடுகளின் நன்மைக்காக இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதை இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு செயல்படுவதாக க்ராக் மொழிப்பெயர்த்துள்ளது. இருப்பினும், எக்ஸ் தளத்தில் பயனர்கள் அந்தத் தவறைக் சுட்டிக்காட்டி ஒரு விவாதம் தொடங்கிய பிறகு, க்ரோக் ஏஐ அந்த மொழிபெயர்ப்பைப் புதுப்பித்தது.சமீப காலங்களில் இந்தியா–மாலத்தீவு உறவுகள் பதற்றமான கட்டங்களை…

Read More

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, இது வெறும் ஆரம்பம் தான் என்று கூறியுள்ளார். இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வமான பதிவிட்டுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு இலக்கு அல்ல, ஒரு புதிய தொடக்கம் என்று ஹர்திக் வர்ணித்துள்ளார். சிறுவயதில் தான் கனவு கண்ட பாதையில் இப்போதுதான் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார். ஹர்திக், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். குடியரசு தினத்தன்று அறிமுகமானது அவருக்கு ஒரு மிகவும் சிறப்பான தருணமாக அமைந்தது. இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஹர்திக், “10 ஆண்டுகள் கடந்துவிட்டன, எனக்கு இப்போது 33 வயது. என் நாட்டிற்காக விளையாடுவதும் சேவை செய்வதும் எனக்குப் பெருமைக்குரிய விஷயங்கள். நான் பெற்ற அன்புக்காக உங்கள் அனைவருக்கும்…

Read More

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் தான் போட்டி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதிமுக, பாமக, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவானக் கூட்டணியை அமைத்த பிறகு, தோல்வி பயத்தில் தூக்கத்தைத் தொலைத்து விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனால் ஏற்பட்ட மயக்கத்தில் வெளிப்படுத்திய உளறல்களாகத் தான் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கே திமுகவுக்கு தகுதி இல்லை. தமிழ்நாடு என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்ற அவப்பெயரைத் தேடித் தந்தது மட்டும் தான் திமுகவின் சாதனை. புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று வேட்டையாடியதை மறுக்க முடியுமா?…

Read More

நாங்கள் யாருடனாவது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் உடனே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்; கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிவிட்டார் டிடிவி என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ராமதாஸ், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அண்ணாவை மறந்து விட்டதாக விஜய் கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இரண்டு கட்சிகளும் மறந்து விட்டனர். அம்மாவை மறந்தார்கள். தலைவர்களை மறந்தார்கள். அண்ணாவை மறந்தார்கள் அதான் வெளியே வந்தேன். வளர்த்து விட்டவர்களை மறக்ககூடாது. என்னை பொறுத்த வரை தலைவர் தலைவியோடு பயணம் செய்தவன் சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன் என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வார்கள் என்றால் உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் எங்களுடன் வரவேண்டும் என நினைத்தார். இப்போது சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம். அதாவது, நாங்கள் யாருடனாவது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால்…

Read More

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரையை பிப்ரவரி மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது, இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பரப்புரையின் கீழ், ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும்…

Read More

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் தினசரி விமான சேவை இருந்து வருகிறது. இதே போல, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி போன்ற மாவட்டங்களுக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் இருந்த ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அனைவரையும் வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் சென்னை விமான நிலையம் பரபரப்பில் காணப்பட்டு வருகிறது.

Read More

ஜனநாயகன் படத்தில் மத பிரச்சனைகளை தூண்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதியே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருந்தது. ஆனால் திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் இப்படத்திற்கு சென்சார் பிரச்சனை ஏற்பட்டு ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிற்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது தணிக்கை வாரியம். இந்தசூழலில் ஜனநாயகன் பட நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவால் படம் பொங்கலை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டதால், உச்சநீதிமன்றத்தில்…

Read More