Author: Editor web3
அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயிரிழக்கும் வீரருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக-அதிமுகவினர் இடையே பெரும் போட்டி நிலவிவருகிறது. ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் தொகை மாதம் ரூ.2000 வழங்கப்படும், பெண்களை போலவே ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார். இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட சாலப்பாளையத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். ஏற்கனவே…
நேற்றுவரை வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று சற்று சரிந்துள்ளது. இருப்பினும் வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ரூ.387-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 உயர்ந்து ரூ.3,87,000-க்கு விற்பனையாகிறது. வல்லுநர்கள் அடுத்த சில நாட்களில் விலை மீண்டும் ஏறலாம் அல்லது நிலைத்து நிற்கலாம் என்று கணித்துள்ளனர். நகை வாங்க திட்டமிட்டவர்கள் இப்போது சந்தை நிலவரத்தை கவனித்து வாங்குவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் குறைவு நகை வியாபாரிகளுக்கும் சற்று நம்பிக்கையை அளித்துள்ளது.
பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ் என திமுக எம்.எல்.ஏ. தளபதி பேசியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். https://x.com/SPK_TNCC/status/2015852828414378456 இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்கள் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதி அவர்களின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும். காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது; 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம்…
வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உடனடியாக அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று (ஜன., 27) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வங்கிகள் ஒவ்வொரு மாதமும் முதல், 3வது, 5வது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக இயங்குகின்றன. இதை மாற்றி, அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இன்றைய வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. “பொதுத்துறை, வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். “ஏற்கனவே வங்கிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று வேலைநிறுத்தம் நடைபெறுவதால் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துவது எடுப்பது காசோலை மற்றும் ஏடிஎம் சேவைகள் கடுமையாக பாதிக்கும்…
புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது வரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில், பிப்ரவரியில் தேர்தல் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் நேற்று (ஜன., 26) பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தேர்தலில் வெறும் எம்எல்ஏக்களை மட்டும் பெறுவதோடு அல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்றார். தவெகவுடன் கூட்டணியா? என்பது குறித்தும் கிருஷ்ணசாமி பேசியுள்ளார். இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சி விஜய்யின் தவெக பக்கம்…
திருச்சி செங்கிப்பட்டியில் நடைபெறும் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார். அப்போது மாதத்திற்கு ஒரு மாநாடு, சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான். தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் முதல் 4 இடங்களில் உள்ள மாநிலங்களை ஆள்வது பாஜக தான். பாஜகவின் முரட்டு அடிமையை நம் கண் முன் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. மகளிருக்கான அரசு என்பது தான் திராவிட மாடல் அரசுக்கான அடையாளம். திராவிட மாடல் பார்ட்-2க்கு மக்கள் தயாராகி விட்டார்கள். நாம் தான் மீண்டும் வெல்வோம். நாம தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக தான் என்றும்…
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையில், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது விதிக்கப்படும் அதிக வரிகளில் குறிப்பிடத்தக்க குறைப்பை முன்மொழிந்து, அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கத் தயாராகி வருகிறது. ஆதாரங்களின்படி, இந்தத் திட்டம் தற்போதைய 110 சதவீத வரியை 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும், அதன் இறக்குமதி விலை 15,000 யூரோக்களுக்கு மேல் (இந்திய ரூபாயில் தோராயமாக ரூ. 16.26 லட்சம்). அரசாங்கத்தின் இந்த முடிவு ஐரோப்பிய கார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் இருப்பை விரிவுபடுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கக்கூடும், அதே நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் வலுப்படுத்தும். இந்தியாவிற்கும்…
உலகபுகழ் பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் இந்துக்களின் முக்கியமான வழிப்பாட்டு தளங்களாகும். இமையமலையின் அடியில் அமைந்துள்ளதால் ஆண்டிற்கு ஆறுமாதகங்கள் மட்டுமே இக்கோயில்கள் திறக்கபடுகின்றன. அதன் படி இந்த ஆண்டு ஆறு மாத குளிர்காலத்தையொட்டி ஆறுமாதங்கள் மூடிவைக்கப்பட்டுள்ள பத்ரிநாத கோயில் ஏப்ரல் 23 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவத தடை செய்யப்படும் என்றும் இது தொடர்பான தீர்மானம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற உள்ளதாகவும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு (BKTC) தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடையானது BKTC- யின் அதிகார வரம்பிற்குட்பட்ட 45 கோயில்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு (BKTC)தலைவரும், பாஜக மூத்த தலைவருமான ஹேமந்த் திவேதி கூறியதாவது ; உத்தரகாண்டின் மத மற்றும்…
2025ஆம் ஆண்டில், அமெரிக்க எல்லையில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், ‘அமெரிக்க கனவு’ இன்னும் பலரை சட்டவிரோத மற்றும் ஆபத்தான பாதைகளில் பயணிக்க வைப்பதாக கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டில், அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை (US Customs and Border Protection) 23,830 இந்தியர்களை கைது செய்துள்ளது. இது 2024ஆம் ஆண்டில் பிடிபட்ட 85,119 பேருடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும், இந்தியா இன்னும் அதிக அளவில் குடியேறிகள் வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாகத் தொடர்கிறது. பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் தனியாக பயணம் செய்த பெரியவர்கள் என்றாலும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இன்றி பயணம் செய்த சிறுவர்கள் (unaccompanied children) குறைந்த அளவில் இருந்தாலும் அதிகரித்து வருவது கவலைக்கிடமான போக்காக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 ஜனவரியில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது, காந்திநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்…
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் அதிக பங்கு வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது முன்வைக்கப்படுவது, திமுகவின் சில நிர்வாகிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதன் பிரதிபலிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் கருத்துகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், திமுக – காங்கிரஸ் உறவுகளில் எந்தவித பிளவும் இல்லை என சில திமுக தலைவர்கள் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பு காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த சூழலில்தான் மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அரசியல் ரீதியாக கவனம் பெற்றது. திமுக மாணவர் அணியின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…