Author: Editor web3

தங்கம் விலை இன்று(ஜன.26) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கும், சவரன் ரூ.2,200 உயர்ந்து ரூ.1,20,200க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன் தினம் சனிக்கிழமை (ஜன.24)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கும், சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் (ஜன.26)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,025க்கும், ரூ.2,200அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.3,75,000க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.375க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More

குடியரசு தினத்தையொட்டி இன்று மாலையில் இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 70 வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இந்த வீரர்களில் ஆறு பேருக்கு மரணத்திற்குப் பின் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் செய்த முதல் இந்தியரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவிற்கு அசோக சக்கரம் விருது வழங்கப்பட உள்ளது. அசோக சக்கரம் என்பது இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால வீரதீர விருது ஆகும்; இது விதிவிலக்கான வீரத்திற்கும் துணிச்சலுக்கும் வழங்கப்படுகிறது. மொத்தம் 70 இந்திய ராணுவ வீரர்களுக்கு வீரதீர விருதுகளை வழங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி இன்று மாலை நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளில் ஆறு விருதுகள் மறைந்த வீரர்களுக்கு வழங்கப்படும். இது தவிர, மேலும் 301 வீரர்களுக்கும் ராணுவப் பட்டங்கள் வழங்கப்படும். யார் இந்த சுபான்ஷு சுக்லா? சுபான்ஷு…

Read More

இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, இன்று கொண்டாடுகிறது. இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் இந்த நாள் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, நாடு ஏற்கனவே விடுதலை பெற்றதால், குடியரசு தினத்தில் கொடியை ஏற்றாமல் பறக்க விடுவார்கள். நாட்டின் மூத்த குடிமகனான குடியரசுத் தலைவர்தான் கொடியை அவிழ்பார். 1929-ல் இந்திய தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சியின் டொமினியன் அந்தஸ்தை எதிர்த்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டதால் ஜனவரி 26 குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் 1950 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது மற்றும் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாறியது. நாட்டின் கொடிவண்ணக் காட்சி, மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் இந்திய விமானப்படையின் வானில் அணிவகுப்பு ஆகியவை இந்த தேசிய விழாவின் சிறப்பம்சங்களாக மாறியுள்ளன. இதற்கிடையில், பொதுமக்களிடையே ஒரு பொதுவான கேள்வி அடிக்கடி எழுகிறது: குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடி ஏற்றப்படுகிறதா அல்லது…

Read More

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமார், பீட்டர் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை கலிமுல்லா மற்றும் வேளாண்மை நலத்துறையின் சிறப்பு விருதை நாராயணசாமி நாயுடுவும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்றோர்…

Read More

77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றிவைத்தார். நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார். இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 5-வது முறையாக ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். இதனை…

Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 77 அவது குடியரசு தினம் நாளை கொண்டாடவுள்ளது. ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் காவல்துறை அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி குடியரசு தலைவர் பதக்கம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கான குடியரசு தலைவர் பதக்கங்களை அறிவித்துள்ளது. அதன் படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 101 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஜி மகேஸ்வரி , காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமரவேலு மற்றும் துணை ஆணையர் அன்வர் பாஷா உள்ளிட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  2026 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, இதில் 5 பேருக்கு பத்மவிபூஷண், 13 பேருக்கு பத்மபூஷண் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு மொத்தம் 131…

Read More

அபிஷேக் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வரலாறு படைத்தார். இந்தியாவுக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் வெறும் 14 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். தனது இன்னிங்ஸில் ஐந்து பவுண்டரிகளையும் நான்கு சிக்ஸர்களையும் அடித்தார். இதன் மூலம், இந்தியாவுக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது வீரராகவும், உலக அளவில் மூன்றாவது அதிவேக வீரராகவும் அவர் திகழ்கிறார். இந்தியாவுக்காக இரண்டாவது அதிவேக அரை சதம்:  சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிவேக அரை சதம் அடித்த சாதனை யுவராஜ் சிங்கிடம் உள்ளது. அவர் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளிடையே அதிவேக அரை சதத்திற்கான உலக சாதனையாக இது இன்றும் நீடிக்கிறது. 12 பந்துகள் – யுவராஜ் சிங் 14 பந்துகள்…

Read More

2026ஆம் ஆண்டுக்கான நமது நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதில் மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்,  நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன், சேலத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் காலியப்ப கவுண்டர், திருவாரூரைச்…

Read More

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அணி வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே-1, சைபெர்ட்-12, ரச்சின் -4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் பிலிப்ஸ் -48, சாப்மேன் -…

Read More