Author: Editor web3
பாஜக மாநிலத் தலைவராக 2021ஆம் ஆண்டு முதல் இருந்த அண்ணாமலை யின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது. புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி வகித்து வருகிறார். மாநிலத் தலைவராக இருந்தபோது நாள்தோறும் பேட்டி, அறிக்கைகள் என்று தமிழக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அண்ணாமலை அதன்பிறகு சைலண்ட் மோடுக்குப் போனார். தற்போது தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் மட்டும் அண்ணாமலை இருந்து வருகிறார். அவருக்கு தேசிய அளவிலான பதவி வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்திருந்தாலும் இன்னும் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கோவையில் அண்ணாமலை களமிறங்கவுள்ளதாகவும் அண்மையில் பேசப்பட்டது. ஆனால், அதிமுக, டிடிவி தினகரனின் அமமுக என பாஜக கூட்டணி வலுவான நிலையில் உள்ளதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், 2026…
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவித்த டிடிவி தினகரன் திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை என விலகியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த டிச.24ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எந்தக் கூட்டணி அமைந்தாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்தான் போட்டியிடுவார்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்த டிடிவி, தற்போது அவர்கள் கூட்டணியிலேயே இணைந்துவிட்டார். இந்தநிலையில் திடீர் டுவிஸ்ட்டாக தான் தேர்தலில் போட்டியிடவில்லை என விலகியுள்ளார். தனியார் டிவிக்கு அளித்த நேர்காணலில் இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரித்தப்போது வரும் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் தனது மனைவி அனுராதாவை களமிறக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள்…
வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையை விட இந்த தேர்தலில் கூடுதல் சீட்களை தர எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த சில மாதங்களாவே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் புதிய வரவாக டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோரும் இணைந்து விட்டனர். திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக தலைமையில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற ஆலோசனையிலும் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளாராம். அதாவது, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு…
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரவேண்டும் என காங்கிரஸ் தலைவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ராகுல் காந்தி கூறியதாக மாணிக்கம் தாகூர் தகவல் அளித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் பலர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று திமுக திட்டவட்டமாக கூறிவிட்டது. எனினும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் அடிநாதமாக உள்ளது. அண்மையில் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இதையே வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில், ஆட்சியில் பங்கு என பொதுவெளியில் பேசக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் தனிப்பட்ட கருத்துக்களை…
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், இன்று தமிழ்நாடு அரசியலில் முக்கிய கவனம் பெற உள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தனது கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK)-இன் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். தனியார் அரங்கில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுமார் 3,000 கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தமிழக வெற்றி கழகத்தின் அணுகுமுறையை வடிவமைப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. கட்சி வட்டாரங்களின்படி, இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள், கட்சி அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பிரச்சாரத் திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். கூட்ட நடைபெறும் இடத்திற்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வைத்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கியூஆர்-கோட் சரிபார்ப்புக்குப் பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 18 அன்று ஈரோட்டில் நடந்த தனது பிரம்மாண்டமான பேரணிக்குப் பிறகு விஜய் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளிலிருந்து…
நேற்று அமைச்சர் சேகர் பாபு ஓபிஎஸ்-ஐ சந்தித்த நிலையில், கூட்டணி தொடர்பாக அவர் வைத்த கோரிக்கைகளுக்கு திமுக பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக தேர்தல் களம் பெரும் பரபரப்பாக உள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திம் ஆதரவாளர்கள் சிலர் அவரை தனிமரமாக்கிவிட்டு மற்ற கட்சிகளில் இணைந்துவிட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட திமுகவினரும், ஓ.பன்னீர் செல்வத்தையும் தங்கள் கூட்டணிக்கு இழுக்க பல பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகவும் தெரிகிறது. ஒருபுறம் பாஜக-அதிமுக கூட்டணியில் பிரேமலதாவை இழுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தென் மாவட்டங்களில் கூட்டணி பலப்படும் என கருதி திமுகவும் ஓ.பி.எஸ்.ஐ இழுக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இப்படியிருக்கையில் தான், நேற்று அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் சட்டமன்ற தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.…
முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக அதிமுக கூட்டணி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.க.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு பெயர் அ.தி.மு.க. கூட்டணியா ? தேசிய ஜனநாயக கூட்டணியா ? என்கிற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக இது அமைந்திருக்கிறது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே தனது உரையின் பெரும் பகுதியை செலவழித்திருக்கிறார். இந்தியாவிலேயே பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கிற ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் தொடர்ந்து எதிர்த்து வருவதற்கு நியாயமான காரணங்கள் நிறைய உள்ளன. இதனால் தான் 2019, 2024 மக்களவைத்…
இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி, வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) தொடருக்காகப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ள வீடியோவில், தோனி தனது பேட்களை அணிந்து, பின்னர் பேட்டை அதன் உறையிலிருந்து எடுக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. https://www.instagram.com/reel/DT4W6GVkolb/?utm_source=ig_web_copy_link அதில் சௌரப் திவாரியும் அவருடன் காணப்படுகிறார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரப் திவாரி தற்போது ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து விளையாடியுள்ளார். எம்.எஸ். தோனி தனது கேப்டன்ஷிப்பின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். அவர் இரண்டு முறை கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும், பல்வேறு காரணங்களால் மீண்டும் அப்பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. தற்போது ருதுராஜ்…
வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை மாமன்ற உறுப்பினர் அறிவுறுத்தல் பேரில் செய்திருக்கிறார்கள் மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, கடந்த 125 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் இங்கிருந்து வாங்கி சென்று சில்லறை விற்பனை கூடங்களில் விற்கும் அளவிற்கு பெரிய அளவிலான ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கூடமாக செயல்பட்டு வந்தது. முதலமைச்சர் ஆணைப்படி சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து இந்த ஸ்மார்ட் ஹவுஸ்…
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி செய்வதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை சட்ட விரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே, திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும், “நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது” என்று கூறி காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதால், மேச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக நிர்வாகிகள், சட்டத்தையும், காவல் துறையையும் அச்சுறுத்துவது சாதாரணமாகி விட்டது. திமுக ஆட்சியில், சட்டம், திமுகவினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கே துணை நிற்கிறது. திமுக கட்சியில் இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் நடவடிக்கை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம். குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே…