Author: Editor web3

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத குளிர்காலப் புயலைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நியூ ஜெர்சியின் நெவார்க்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. பயணிகளின் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி, குறிப்பாக நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) காலை முதல் திங்கட்கிழமை (ஜனவரி 26) வரை கனமழை மற்றும் கடுமையான குளிர் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏர் இந்தியா ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் விமானங்கள் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் வாடிக்கையாளர் சேவையுடன்…

Read More

வடமேற்கு பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மலைப்பாங்கான மாவட்டத்தில் ஒரு வீட்டை பனிச்சரிவு தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்த ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் (PMD) தென்மேற்கு பாகிஸ்தானுடன் சேர்ந்து அப்பகுதியில் மேலும் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. இது குறித்து  லோயர் சித்ரல் ராவ் துணை ஆணையர் ஹாஷிம் அசீம் கூறுகையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பனிச்சரிவில் சிக்கினர், இதில் ஒன்பது பேர் இறந்து கிடந்தனர், ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது,” பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்கள் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுவதாகவும், போலீஸார் கூறுகின்றனர்.…

Read More

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. தமிழகத்ததில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. மேலும் இத் திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்…

Read More

கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து எகிறி வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,720 சரிந்து, சற்று ஆறுதலை கொடுத்து, நேற்று மீண்டும் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலையில் அதிகரித்த தங்கம் விலையை தொடர்ந்து, மாலையும் அதிரடியாக 2 மடங்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் சவரனுக்கு இன்று காலை ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1040 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.10…

Read More

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெற்றது. இந்திய அணி ஒரு சாதனை இலக்கை விரட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இந்திய அணி 15.2 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 10 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், டி20 போட்டிகளில் இந்தியா துரத்தி வென்ற அதிகபட்ச ரன் இதுவாகும். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ​​மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றால், இந்திய அணி தொடரை வென்றுவிடும். போட்டிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில், இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு ரன்கள் எடுத்தால் போதுமானது என்று சான்ட்னரிடம் கேட்கப்பட்டது. அதற்கு…

Read More

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை எனவும், குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன் எனவும் அவர் தெரிவித்தார். ஒருபுறம் என்.டி.ஏ. கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸும் இணைந்துவிடுவார் என்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கூட்டணி குறித்து அறிவிக்க தாமதம் செய்துவருகிறார். இதனால் அதிருப்தியில் உள்ள மற்ற ஆதரவாளர்களும் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவ முயன்று…

Read More

வேலூர் குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாததை கண்டித்து  27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. தற்போதுள்ள பழைய மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள்; மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும்; போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தாலும், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க முடியாமலும், அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதேபோல், குடியாத்தம் நகராட்சி வாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து தராமலும், சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யாமலும், நகராட்சி நிர்வாகம் முற்றிலுமாக…

Read More

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாது என்றும், அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் திசம்பர் மாதங்களில் தான் வழக்கமான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்று கூறி வந்த திமுக அரசு, இதன்மூலம் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல், அவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2026&ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த 18&ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பயனாக 2026&ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இப்போது வெளியிட்டுள்ளது. அதில் மே மாதத்திற்கு முன்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்று…

Read More

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடப்பாண்டுக்கான சட்டசபை கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் அவர் உரையை வாசிக்காமல் வெளியேறிவிட்டார். தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி அவர் வெளியேறினார். மேலும் ஆளுநர் உரையானது நேரலையாகவும் ஒளிபரப்பப்படவில்லை . தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். இருப்பினும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், “5 ஆண்டுகள் கடந்த நிலையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் மன நிறைவு அளிக்கும் வகையில் ஆட்சி அமைத்து உள்ளோம். விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ. 60 ஆயிரம் சேமித்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில ஒவ்வொரு பெண்களுக்கும்…

Read More

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி கணக்குகள் ஒருபுறம் சென்று கொண்டு இருக்கின்றன. மறுபுறம் பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை? என்ற விவாதமும் நடந்து வருகின்றன. ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முதல் தேர்தலாக 2026 தேர்தல் அமைந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் அவரது பெயரின் முதல் எழுத்தான வி என்ற எழுத்தில் வரும் தொகுதியில்தான் அவர் முதல் தேர்தலை சந்திப்பார் என பேசப்பட்டது. அந்த வகையில் தென்மாவட்டங்களில் விருதுநகர் தொகுதியும் விவாதப்பொருளாக இருந்தது. இருப்பினும், மதுரையில் வென்றால், அரசியல் களத்தில் ஒரு வரலாறாக பேசப்படும் என்பதால் அவர் மதுரையில் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது. ஏனென்றால், சென்டிமென்ட் ஆக எம்.ஜி.ஆர்.  போட்டியிட்டு வென்ற மதுரை மேற்கு தொகுதியில் அவர் களம் இறங்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரை கிழக்கு தொகுதி…

Read More