Author: Editor web3
இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது வெறும் சுற்றுச்சூழல் கவலை மட்டுமல்ல; இது நாட்டிற்கு ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது. மாசுபட்ட காற்று ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்று வருவதாகவும், அதன் தாக்கம் பொருளாதாரத்தை அமைதியாக பலவீனப்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஜெனீவாவில் சமீபத்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் போது பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் இந்த பிரச்சினை குறித்து கடுமையான கவலை தெரிவித்தார். காற்று மாசுபாடு இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகிறது என்று அவர் கூறினார். இதன் பொருள் நாட்டில் ஐந்தில் ஒரு இறப்பு மாசுபட்ட காற்றால் ஏற்படுகிறது. இந்தத் தரவை நாம் தினசரி அடிப்படையில் பார்த்தால், நிலைமை இன்னும் பயமுறுத்துகிறது, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4,657 பேர் நச்சுக் காற்றால் உயிர் இழக்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, காற்று மாசுபாடு தொடர்பான நோய்கள் மருத்துவமனைகளுக்கு மட்டுமல்ல; அவை நாட்டின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து 3 நாள்கள் அவை செயல்பட்ட நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போது ஆட்சியின் தொடக்கத்தில் கவலையில் இருந்ததாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. இன்னொரு பக்கம் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்ததாக கூறிய முதலமைச்சர், இந்த 2 நெருக்கடிகளையும் எதிர்கொள்வது தான் கவலைக்கு காரணம் என்றார். ஆனால் 5 ஆண்டுகள் கழித்து தற்போது மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இந்த ஆட்சியில் மக்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0…
தமிழகத்தை பொறுத்தவரை, சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு மாதம், 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 3,000 முதல் 5,000 ரூபாய் அரசு வழங்கும் நிலையில், குழந்தைகளுக்காக சமைத்த தங்களுக்கு, வெறும் 2,000 ரூபாய் மட்டுமே வழங்குவது சரியா என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியபடி வந்தனர். அதுமட்டுமல்ல, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, திமுகவினர் சட்டசபை தேர்தலின்போது வாக்குறுதி அளித்தனர். திமுக வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளாகியும், வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளனர். இதனை நினைவூட்டவே, சத்துணவு மற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபடியே உள்ளனர். இந்தநிலையில், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சிறப்பு…
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்த நிலையில் இன்று(ஜன.24) மேலும் ரூ.560 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை (ஜன.23)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.14,550-க்கும், சவரன் ரூ.1,16,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் (ஜன.24)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,620க்கும், ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.3,55,000க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.355க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்து ஓபிஎஸுக்கு அதிர்ச்சிக் கொடுத்த நிலையில், மற்றொரு ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்கி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறையும் வரை கட்சியில் எந்தவித சிக்கலும் இல்லை. 2016ஆம் ஆண்டிற்கு பின்னர் உட்கட்சி பூசல் வெடித்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு அணிகளாக பிளவுபடும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் ஓரங்கட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு ஒற்றை தலைமைக்கான நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டினார். கட்சியில் தனது அதிகாரம் ஓங்கும் வகையில் ஓபிஎஸ்சை ஓரம்கட்டினார். அப்போது ஓபிஎஸ்சின் ஆதரவாளராக வைத்திலிங்கமும் வெளியேறும் நிலை உருவானது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓபிஎஸ் தலைமையில் செயல்பட தொடங்கினார். ஓபிஎஸ் உடன் இருந்த பலர் நம்பிக்கை இழந்து வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலரை சொல்லலாம். ஆனால் வைத்திலிங்கம்…
பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், பிஹார் மாநில அமைச்சராக இருந்த 45 வயது நிதின் நபின், கட்சியின் செயல் தலைவராக டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 12-வது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நிதின் நபின் ஒருமனதாக பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இவரது பதவியேற்புக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அரசியலில் அனுபவமே இல்லை;…
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியால் இந்தியாவே இன்று மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தமிழகம் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டிவதைக்கும் அரசு தேவையா? ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? நான்கே முக்கால் ஆண்டுகளில் திமுக கொடுத்தது துன்பம், வேதனைதான். இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் ஸ்டாலின் செய்தது ஒன்றே ஒன்றுதான் ஊழல். முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு பிறகு முதல்வராக உதயநிதி வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் திமுகவிற்காக உழைத்தவர்கள் தெருவில் இருக்கிறார்கள். எந்தவொரு தகுதியும் இல்லாத உதயநிதிக்கு முதலில் எம்எல்ஏ, அமைச்சர், தொடர்ந்து துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள். இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. தீய சக்தி திமுகவை வீழ்த்தி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். தேர்தல்…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மக்களாட்சியை உருவாக்க வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்திருக்கிறோம். எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக NDA கூட்டணியில் இணைந்துள்ளது; இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லி கொள்கிறேன். நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்; ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும் அமமுகவின் நலனை கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதிலே இருந்த கோப, தாபங்களை விட்டுவிட்டு எந்த அழுத்தமும்…
இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பாஜக – தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜன நாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாஜக – தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்” என பேசியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ”பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பாஜக அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட,…
2026 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாமக, அமமுக,தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்களான, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ,அன்புமணி, டிடிவி தினகரன் , ஜி.கே. வாசன், சண்முகம், ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி, பாரி வேந்தர் உள்ளிட்ட கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரமரின் உரை முக்கியமாக பார்க்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, பொங்கலுக்கு பிறகு மக்களிடையே ஆனந்தம் நிறைந்திருக்கிறது. சில நாட்களுக்கு பின்னர் தான்,பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி,ஆர் பிறந்த நாளை கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து ஏறிக் காத்த ராமனின் திருவடிகளை தலைவணக்குகிறேன் என்றார். அதுமட்டும் இல்லை, அனைவரின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்காக வேண்டிக்கொள்வதாக தெரிவித்தார். ”2026 ஆம் ஆண்டின் முதல் தமிழக வருகை…