Author: Editor web3
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி தொடரைச் சிறப்பாகத் தொடங்கியது. டாஸ் தோற்று முதலில் பேட் செய்த இந்திய அணி, அதிரடியாக 239 ரன்கள் குவித்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் விளைவாக, இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் ஐந்து இந்திய வீரர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். அபிஷேக் ஷர்மா இந்திய இன்னிங்ஸைத் தொடங்கிய விதம் போட்டிக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. 240 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அபிஷேக், வெறும் 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். அபிஷேக் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அதிரடி பேட்டிங் இந்தியாவின்…
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, நட்சத்திர வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த டிசம்பர் 27, 2025 முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://x.com/Space_Station/status/2013768834994315329? இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார். ஃப்ளோரிடாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் மேலாண்மைப் படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ், 1998ம் ஆண்டில் நாசாவில் வேலைக்கு சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு முதல்முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்ட அவர், தனது பதவிக் காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்காக (ISS) மூன்று வெற்றிகரமான பயணங்களை முடித்துள்ளார். கடந்த 2024 ஆம்…
வைத்திலிங்கத்தின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்று சசிகலா விமர்சித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவைஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு,…
ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளது. இதனால் ஓபிஎஸ் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் விரைவில் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்றும் அதாவது திமுகவில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிலும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் இழக்கவேண்டும் என்று ஓபிஎஸிடம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இன்று காலை டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இந்துவிட்டார். திமுகவை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற ஒற்றை முயற்சியிலேயே டிடிவி தினகரனை கூட்டணியில் இணைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் ஓபிஎஸை இணைத்துக்கொள்ளவும் பழனிசாமி ஒத்துக்கொண்டுவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே மீண்டும் ஓபிஎஸிடம் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது, அப்படி கூட்டணியில் இந்துவிட்டால் ஓபிஎஸுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஓபிஎஸ் மகனுக்கு ஒரு தொகுதியும், அவரது…
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் காரணமாக எழுந்த சர்ச்சையால், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 2026 ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் சர்ச்சை தீவிரமானது. இதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து இன்றுக்குள் முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்து இருந்தது. இந்தியாவில் விளையாட மறுக்கும் பட்சத்தில் தரவரிசை அடிப்படையில் வங்கதேசத்துக்கு பதிலாக மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என்றும் எச்சரித்தது. இந்தநிலையில், ஊடக அறிக்கைகளின்படி, புதன்கிழமை இன்று ஐசிசி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் பங்கேற்குமா என்பது குறித்த முடிவு மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்தியாவில் விளையாட வேண்டாம் என்ற வங்கதேசத்தின் முடிவுக்கு பாகிஸ்தான்…
கடந்த வாரம் ஐசிசி தரவரிசையில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆனார், ஆனால் இன்று அவர் அந்தப் பட்டத்தை இழந்துவிட்டார். ஐசிசி தனது சமீபத்திய ஒருநாள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் புதிய நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாகியுள்ளார். ரோஹித் சர்மாவும் ஒரு இடம் பின்தங்கியுள்ளார். கே.எல். ராகுல் ஒரு இடம் முன்னேறி, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 93 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து, கோலி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேன் ஆனார். ஒரே வாரத்தில் அவர் இந்த நிலையை இழந்தாலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 124 ரன்கள் எடுத்தார், இருப்பினும் அந்தப்…
ஐபிஎல் 2026 மார்ச் 26 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இறுதிப் போட்டி மே 31 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, இருப்பினும் முழுமையான போட்டிப் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. செவ்வாயன்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டத்தில், ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரே அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. Dainik Jagran-ல் ல் வெளியான செய்தியின்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்த மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட 18 இடங்களை பிசிசிஐ முன்மொழிந்துள்ளது. இருப்பினும், தேர்தல் ஆணையம் இன்னும்…
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியை விரிவாக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணி தரப்பில் கூட்டணியை பேசி முடித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அதேபோல், இன்று டிடிவி தினகரனின் அமமுகவும் தனது கூட்டணியை என்.டி.ஏ.வுடன் இணைத்துக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஒருபுறம், தேமுதிகவும் கூட்டணிக்கு வந்தால், வடமாவட்டங்களில் அதிமுக கூடுதல் வலிமைபெறும். இதனை கணக்கில் கொண்டே என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், என்.டி.ஏ.கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை என்றும் பிரேமலதா கூறியுள்ளார். இந்தநிலையில், அதிமுக கூட்டணி சார்பாக அமமுகவுக்கு 15 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, பாபநாசம்(தஞ்சை), சோளிங்கர், சைதாப்பேட்டை, திருவாடானை, சாத்தூர், முதுகுளத்தூர், திருப்பூர்,…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று (21.01.2026) சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதல்மைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும், மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர…
தங்களை என்டிஏ கூட்டணிக்கு வருமாறு யாரும் அழைக்கவில்லை எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது. அதற்காக மத்திய அமைச்சரும் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். இப்படியிருக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இன்று இணைந்துள்ளது. இது தமிழக அரசியலிலும் திமுக கூட்டணியிலும் சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பாஜக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக கூறப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி தொண்டர்களைவிட பத்திரிகையாளர்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. யாரும் நேரிலோ, தொலைபேசியிலோ எங்களை தொடர்புகொள்ளவில்லை. மத்திய…