Author: Editor web3
திருச்சியில் மார்ச் 8ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “ஓய்வை மறந்திடு; முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு! அடுத்த 3 மாதங்களும் அமைச்சர் முதல் கிளைக் கழக நிர்வாகி வரை கண்துஞ்சாது களத்தில் சுழல வேண்டும்! இளைஞரணி நிர்வாகிகள் மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், மண்டல அளவிலான ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டங்கள், திருச்சியில் மாபெரும் மாநில மாநாடு என இனி ஒவ்வொரு நாளும் நமது செயல்பாடுகளும் பரப்புரைகளும் தமிழ்நாட்டை நிறைக்கப் போகின்றன. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்: பிப்-1 முதல் மார்ச்-8 வரை வாக்குச்சாவடி தோறும் 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களை வீடு…
நாட்டின் பல பகுதிகளில், மக்கள் வாழை இலைகளில் உணவை உண்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வாழை இலைகளில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். வாழை இலை என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உணவு பரிமாற நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் பாரம்பரியமாகும். இது தட்டிற்கு ஒரு பாரம்பரியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாகக் கருதப்படுகிறது. அதன் மீது சூடான உணவு வைக்கும்போது, அது ஒரு லேசான நறுமணத்தை வெளியிடுகிறது, இது உணவின் சுவையை மேம்படுத்துகிறது. வாழை இலையில் காணப்படும் பாலிஃபீனால்கள்(polyphenols) இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். இவை பச்சை தேநீர் மற்றும் சில பழங்களிலும் காணப்படுகின்றன. சூடான உணவு இலையில் பரிமாறப்படும்போது, இந்தச் சேர்மங்கள் உணவில் கரையக்கூடும். இது உடலுக்குள் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, மேலும் புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். வாழை இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு…
மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பறவைகள் மற்றும் விலங்குகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் நோய்த் தொற்றாகும். பழங்களை உண்ணும் வௌவால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் இந்த வைரஸ் மனிதா்களுக்குப் பரவி வருகிறது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருப்பகுதியாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், பதநீர் அருந்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நிபா தொற்று பரவல் இல்லை என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, சுவாச சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை…
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து, அத்தொடரை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் இலங்கைக்கு மாற்றும்படி வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கான போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுவது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் (BCB) விவாதிப்பதற்காக ஐசிசி அதிகாரிகள் கடந்த வாரம் வங்கதேசத்திற்கு சென்றனர். இந்த விவகாரத்தில் தற்போது வெளியாகியுள்ள சமீபத்திய தகவல் வங்கதேசத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அணிக்கு இந்தியாவில் ஆபத்து இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறுகிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஐசிசி அதிகாரிகள் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை சந்தித்தனர். போட்டி நடைபெறும் இடத்தை மாற்றாவிட்டால், 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக வங்கதேசம் அச்சுறுத்தியது. இப்போது, இந்த விவகாரம் ஒரு…
திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை பட்டியலிட்டு சொல்லலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. சென்னையின் 6-வது நீர்த்தேக்கமான மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறோம். நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர். இயற்கையோடு இணைந்ததுதான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது. 1967 – 2011 திமுக ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம். ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு…
தலைமைத்துவத்தில் ‘பழைய தலைமுறையினர் விலகி புதிய தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும் என்று தலைமை மாற்றத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார். அரசியல், தொழில் மற்றும் அமைப்புகளில் இளைஞர்களை முன்னிறுத்துவது குறித்து நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விதர்பா-காஸ்தார் தொழில்துறை விழா தொடர்பாக நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேச்சிய கட்கரி, ஒரு அமைப்பு சீராகச் செயல்படும்போது, மூத்த தலைமுறையினர் பின்வாங்கி, அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இளம் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கு ஆதரவளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒவ்வொரு துறையிலும் படிப்படியான தலைமுறை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறினார். புதிய தலைமுறை பொறுப்பேற்று, அமைப்பு சீராகச் செயல்படத் தொடங்கும் போது, மூத்தவர்கள் மரியாதையுடன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். கட்கரியின் கூற்றுப்படி, இந்த மாற்றம் எந்தவித அழுத்தத்தின் கீழும் நடக்காமல், ஒரு இயல்பான செயல்முறையாக நிகழ வேண்டும் என்பதையே…
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார், ஆனால் இந்தியா தொடரை இழந்தது. போட்டிக்குப் பிறகு, நியூசிலாந்து அணிக்காக வெற்றி இன்னிங்ஸை விளையாடிய டேரில் மிட்செலுக்கு விராட் தனது ஜெர்சியை பரிசளித்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி, ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஒரு சிறப்பான சதத்தை அடித்தபோதிலும், இந்திய அணி தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் இந்தியா தனது சொந்த மண்ணில் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு நியூசிலாந்து அணி இந்தச் சாதனையை நிகழ்த்தியதில்லை. தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு,தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்த டேரில் மிட்செலுக்கு, கையொப்பமிட்ட ஜெர்சியைப் பரிசளித்து அவரை ஆரத்தழுவினார். இதற்கு பலரும் பாராட்டுகளை…
சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ள மையங்களில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதேபோல், காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313ஐ நிறைவேற்றக்கோரி ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுடன் பணியாற்றி வரும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால், நாளை முதல் பெரும்பாலான சத்துணவு மையங்கள் செயல்பட வாய்ப்பில்லை என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா நகரில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கோர்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த ரயில் அடாமுஸ் அருகில் சென்ற போது திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த தடம் புரண்ட ரயில் மற்றொரு தண்டவாளத்தில் மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசு ரயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள், ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து, ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, பயணிகள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 73 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக…
பாமகவில் தந்தை மகன் மோதல் நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமக உட்கட்சி பூசல், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான மோதலால் தீவிரமடைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் நிலைமை மற்றும் கூட்டணி விவாதங்கள் கேள்விக்குறியாக உள்ளன. ஒவ்வொரு தேர்தல் களத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பாமக தொடர்பான பேச்சு அதிக அளவில் அடிபடும். நீண்ட காலம் பேச்சுவார்த்தை நடத்தி தனக்கான இடங்களை, தான் இடம்பெறப்போகும் கூட்டணியிடம் பேசிப் பேசியே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உறுதி செய்துவிடுவார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் உட்கட்சி பூசல் காரணமாக அன்புமணி தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ராமதாஸ் தரப்பினர் திமுகவுடன் இணக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், கடந்த டிசம்பர் இறுதியில் சேலத்தில் நடைபெற்ற…