Author: Editor web3

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். கடந்த செப். 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நவ.25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களுடன், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள்…

Read More

இந்தியாவில் டேரில் மிட்செலின் பேட்டிங் அவரது புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அவர் முதலில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார், இப்போது இந்தூரில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்துள்ளார். இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்தின் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை மிட்செல் பெற்றுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த சாதனையை டேரில் மிட்செல் இப்போது படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தற்போதைய ஒருநாள் தொடரில் அவர் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன் 352 ரன்களைக் குவித்துள்ளார். அவர் வதோதராவில் 84 ரன்களும், ராஜ்கோட்டில் 131 ரன்களும், இப்போது இந்தூரில் இந்திய அணிக்கு எதிராக 137 ரன்களும் எடுத்தார். கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் கூட இந்தச் சாதனையை இதுவரை நிகழ்த்தியதில்லை.…

Read More

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத் தளங்களில் தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஆந்திர அரசைக் கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம், என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற செய்தியைப் பரப்புகிறார்கள். கைதுக்கு பயந்து நான் அரசியலை விட்டு விலகப் போவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் தான் நான் அரசியலுக்கு வந்தேன். தான் மீண்டும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “அமைச்சர் பதவியில் இருந்தபோது நடிப்பைத் தவிர்த்தேன். இப்போது கட்சிப் பதவியில் மட்டுமே இருப்பதால் தொடர்ந்து நடிக்கிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை” என்றார். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணைச் சுட்டிக்காட்டி ரோஜா எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது:”துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அரசியலில் இருந்துகொண்டே சினிமாவிலும் நடிக்கிறார்.…

Read More

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்திய அளவில் உயர்ந்த விருது என அறியப்படுவது ஞான பீடம். இது அரசு சாரா அமைப்பால், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 8ம் தேதி, எழுத்தாளர்கள் கலைஞர்கள் அமைப்புகளை சார்ந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப்படும் விருதை விட உயரிய கௌரவத்தை இந்திய அளவில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசால், வழங்க முடியும். தமிழ் பீடம் விருது என்ற பெயரில் அல்லது முதலமைச்சர் விரும்பும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும் என்றும் இந்த விருது வழங்குவது வரலாற்றின் தேவையாக, காலத்தின் தேவையாக உள்ளது என்பதால் இந்த தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர்…

Read More

திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கஞ்சா போதைக் கும்பல் கற்களை போட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்ததால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் இன்னும் விலகாத நிலையில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் அதே மாவட்டத்தில் மேலும் இரு இடங்களில் கஞ்சா போதைக் கும்பல் அடுத்தடுத்து வெறியாட்டங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கஞ்சா போதையில் நடைபெறும் வன்முறைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா சீரழிவைக் கட்டுப்படுத்துவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. திருத்தணியை அடுத்த தாழவேடு இருளர் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கஞ்சா போதையில், இரு சக்கர ஊர்திகளில் நுழைந்த 6 இளைஞர்கள் அங்குள்ள வீடுகள், மின் விளக்குகள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை உடைத்து…

Read More

தவெக, தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் திமுக, அதிமுகவை அடுத்து தவெக சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அருண்ராஜ், ராஜ்மோகன் என மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தவெக பொதுச்செயளாலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்தக் குழு, வருகின்ற 20ஆம் தேதி (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை…

Read More

தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றது. அண்மை காலமாகவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கோரிக்கை திமுக கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வெளிப்படையாகவே முன்வைத்தார். செல்வப்பெருந்தகை, எம்.பி ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதற்கு திமுகவின் மூத்த அமைச்சரான திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி கட்சிகளின் உரிமை. ஆனால் பங்கும் இல்லை. கூட்டணி ஆட்சியும் இல்லை என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார். இருப்பினும்,  தவெகவின் ஆட்சியில் பங்கு அளிப்போம் என்ற வாக்குறுதி காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.  காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் விஜயின் தவெக பக்கம் செல்ல ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக, ஜனநாயகன் பட சர்ச்சையில் ராகுல்…

Read More

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) அசாமின் நாகோன் மாவட்டத்தில் 6,957 கோடி ரூபாய் மதிப்பிலான காசிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைக் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அசாமிற்கான தனது இரண்டு நாள் பயணத்தின் இறுதிப் பகுதியாக குவஹாத்தியில் இருந்து அங்கு சென்ற பிரதமர் மோடி, காசிரங்கா திட்டத்தின் ‘பூமி பூஜை’ (அடிக்கல் நாட்டு விழா) நிகழ்ச்சியில் பங்கேற்றார். காசிரங்கா மேம்பாலத்தின் மாதிரியையும் பார்வையிட்ட பிரதமர் மோடி, திப்ருகர்-கோம்தி நகர் (லக்னோ) மற்றும் காமாக்யா-ரோஹ்தக் ஆகிய இரண்டு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் அசாம் மற்றும் மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட தூர ரயில் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், பயண நேரத்தைக்…

Read More

நாட்டின் 77வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கொண்டாடுவதை ஒட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி. சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு வரும், 30 ஆம் தேதி நள்ளிரவு வரை, அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 24,25,26 ஆகிய 3 நாட்கள், உச்சக்கட்ட பாதுகாப்பாக, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி,சந்தேகப்படும் வாகனங்களை, பாதுகாப்பு படையினா், மோப்ப நாய் உதவியுடன், சோதனையிடுகின்றனா்.அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமானநிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசாா், ரோந்து வந்து, தொடர்ந்து கண்காணிக்கின்றனா். மேலும் விமானநிலைய மல்டி லெவல் காா் பாா்க்கிங்கிற்குள், நீண்ட நேரமாக நிற்கும் காா்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை,வெடிகுண்டு நிபுணா்கள் திவீரமாக சோதனையிட்டு, கண்காணிக்கின்றனர். அதைப்போல் மத்திய தொழில்…

Read More

கலை, இலக்கிய விருதுகளில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026 – 4 ஆம் பதிப்பு, (CIBF 2026) நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு, விழாவில் உரையாற்றினார். இந்நிகழ்வில் கர்நாடக எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளருமான பானு முஷ்டக் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை யின் கூடுதல் தலைமை செயலாரும், சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றது. சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பாக 44 நூல்களும்…

Read More