Author: Editor web3

உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி, உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று விமர்சித்துள்ளார். கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறவழியில் போராடிய கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10 நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. உரிமைக்காக போராடிய விவசாயிகளை திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. கறிக்கோழி வளர்ப்பை பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்காக கறிக்கோழிகளை வளர்த்து தருபவர்கள் உழவர்கள் தான். இதற்காக அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள்…

Read More

முதலமைச்சர் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை கழிவறையில் வைத்து வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது  செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மற்ற பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் கழிவறை பயன்படுத்திய போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு நடைபெற்றிருக்கும் இந்த அவலச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய காவல்…

Read More

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் முழு ஈரானுக்கும் எதிரான ஒரு வெளிப்படையான போராகக் கருதப்படும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட ஒரு காரசாரமான வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பெசெஷ்கியான் கூறியதாவது, “எங்கள் மாபெரும் தலைவர் மீதான தாக்குதல், ஈரானுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போரைப் போன்றது” என்று எழுதியுள்ளார். ஈரானுக்கு ஒரு புதிய தலைமை தேவை என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறியதிலிருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு  அமெரிக்காவைக் குற்றம் சாட்டிய அவர், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விதித்துவரும் நீண்டகால பகைமை மற்றும் மனிதாபிமானமற்ற தடைகளால் ஈரானிய மக்கள் கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு முன்,…

Read More

பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், பாஜக வரலாற்றில் முதல்முறையாக, நிறுவன உறுப்பினர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) அன்று பாஜக-வுக்கு ஒரு புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஆனால், பாஜக-வின் நிறுவன உறுப்பினர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது பாஜக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பாஜகவின் முடிவெடுக்கும் அமைப்பின் உறுப்பினர்களான லால் கிருஷ்ண அத்வானி மற்றும் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு, கட்சி சார்ந்த அமைப்பு ரீதியான நடைமுறைகளே காரணம் என்று கூறப்படுகிறது. பாஜகவின் அரசியலமைப்பின்படி, ஒரு தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, வாக்குச்சாவடி நிலை முதல் மாநில நிலை வரையிலான அனைத்து அமைப்புத் தேர்தல்களும் 50 சதவீத மாநிலங்களில் நிறைவடைந்திருக்க…

Read More

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் தனியரசை சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். முன்னதாக, நவம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசி இருந்தார் தனியரசு. இருப்பினும், திமுக கூட்டணியில் அவருக்கு…

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இருந்தனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு இருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாதவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் (டிசம்பர்) 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய…

Read More

தமிழகம் 2026 தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தாண்டிற்கான சட்டப்பேரவை  முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. ஆண்டுதோறும் சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்க உள்ளது. இதில் உரையாற்றுவதற்காக காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்துக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. இருப்பினும், நாளை பேரவையில் கவர்னர் உரையாற்றுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், கடந்த 2021ல் ஆளுநராக  ரவி பொறுப்பேற்ற பிறகு 2022ல் மட்டும் உரையை முழுமையாக வாசித்தார். இதையடுத்து 2023ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் பாதியிலேயே வெளியேறினார்.  இதேபோல், 2024, 2025-லும் தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி உரையை வசிக்காமலேயே வெளியேறினார். இந்தநிலையில், நாளைகூடும் சட்டப்பேரவை கூட்டத்திலாவது ஆளுநர் ரவி உரையாற்றுவாரா என்ற…

Read More

தமிழ்நாடு காங்கிரஸில் அதிரடி மாற்றம் செய்து தேசிய தலைமை அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்களை தமிழக மேலிட பார்வையாளர்களாக கடந்த சில வாரங்களுக்கு முன் நியமித்தது. இந்நிலையில், நேற்று இரவு 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைவர்களை மாற்றினால் தேர்தல் பணிகள் பாதிக்கும் என மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு அறிவுறுத்திய நிலையில் பெரும்பாலான மாவட்ட தலைவர்களை நீக்கி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட தலைவர்கள் விவரம்: ஆவடி – அப்துல் அமீத், மத்திய சென்னை கிழக்கு – கராத்தே செல்வம்,…

Read More

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜன.19) ரூ.1,360 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன் தினம் ஞாயிற்றுகிழமை (ஜன.18)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.13,280-க்கும், சவரன் ரூ.1,106,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் (ஜன.19)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,450க்கும், ரூ.1,360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.8,000 அதிகரித்து ரூ.3,18,000க்கும், கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ஒரு கிராம் ரூ.318க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More

2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பழனிசாமி ஏன் பதறுகிறார்? என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, அவர் இன்று (ஜன.19) கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை பார்த்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றப்படுவதை அவரது பேட்டிகளும் அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போது ​​’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது பற்றி சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசு ஊழியர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்வது…

Read More