Author: Editor web3
சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிகள் அமைப்பதில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், பாஜக- அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பினர் இணைந்துவிட்டனர். மேலும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் முன்னிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது. பிறகு அமைச்சர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பியூஸ் கோயல், “பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது மகிழ்ச்சி. ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. திமுகவின் ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும். தமிழ் கலாசாரம் மக்களுக்கு எதிராக திமுக உள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நல்லாட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். டிடிவி தினகரனின் வருகை தேசிய ஜனநாயக…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 2026 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என்று அக்கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. தேர்தல் கமிஷன் விதிகளின்படி பதிவு செய்துள்ள புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு 5 முதல் 10 சின்னங்களை தாங்கள் விரும்பும் வகையில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருந்தது. அதன்படி இந்தக் கட்சி ஆட்டோ, விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட சின்னங்களை ஒதுக்க கேட்டிருந்தது. சமீபத்தில் ஆட்டோ சின்னதை கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு ஒதுக்கியதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மோதிரம்…
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திடும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை_மீட்போம் என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மக்கள் நலனை மையமாகக் கொண்டு…
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. அதேபோல், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்த வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை அளித்தார். 4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த வைத்தியலிங்கம், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஒ.பி.எஸ் கூடாரம் காலியாகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்துவிட்டது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம் அதிருப்தியடைந்து விஜய் கட்சியில் சேர்ந்த செங்கோட்டையனும், தவெகவிற்கு இழுக்க பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கு மசியாத வைத்தியலிங்கம், செந்தில் பாலாஜியின் காய்நகர்த்தலின்படி, திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது, அதாவது, இவருடைய இந்த முடிவுக்கு திரைமறைவில் நடந்த டீலிங் தான் காரணம் என்று தகவல் கசிந்துள்ளது. அதாவது வரும் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியின் சீட்டை வைத்தியலிங்கம்…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு பிப்ரவரி 3ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இக்கட்சி 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனையொட்டி விஜய் தமிழ் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். தேசிய அளவில் அதிவலைகளை ஏற்படுத்து இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகளின் விசாரணையானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா…
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாத்திரமல்ல தமிழ்நாட்டிற்கு நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகின்ற நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக புறப்பட்டு செல்கிறோம் விட்டுக் கொடுத்துப் போனவர்கள் என்றைக்கும் கெட்டுப் போனதில்லை என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் பங்காளி சண்டை தான் “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்” என பொதுக் குழுவில் சொல்லிவிட்டேன். நான் பழசையே நினைத்து விட்டு கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்பதற்காக பொதுநோக்கத்தோடு நாங்கள் விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில்…
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும், சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.8அதிகரித்து. ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடிபிடித்துள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், ஏற்கனவே, அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துவிட்டது. மேலும் பல கட்சிகளை இணைத்து பிரதமர் மோடி தமிழகம் வருகையின்போது கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்வது குறித்து இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது இந்த ஆலோசனையை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேசிய ஜன நாயக கூட்டணியில் தேமுதிகவை இணைக்கவேண்டும் என்பதில், தொடர் பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், பல்வேறு நிபந்தனைகளை தேமுதிக வைப்பதாக தகவல் வருகிறது.…
இன்றைய பேரவை கூட்டம் தொடங்கியதும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன. அதேபோல், நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று (20.1.26) தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர்…
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டா அதிமுக-வில் வலம் வந்தவர். சோழமண்டல தளபதி என்றே இவரை அதிமுகவினர் அழைத்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உருவானது. தினகரன் தரப்பு, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெல்லமண்டி நடராஜன் உட்பட பத்துக்கு மேற்பட்டவர்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வராமல் அரணாக இருந்தார். இதைதொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைந்தது. அதிமுகவிற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த…