Author: Editor web3

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த சூழலில் கூட்டணி கணக்குகளை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னம் ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று அதே சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம்…

Read More

NDA கூட்டணியில் இணைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில்  தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கூட்டாக சந்தித்து என்.டி.ஏ.கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டின் மக்கள் விரும்பும் பலமான கூட்டணியாக அமைத்துள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்னும் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றாக திரண்டு வரவேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவித்தார். புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது மிகப்பெரிய சக்தியாக தேர்தலில் பணியாற்றும், தமிழ்நாடு மத்திய…

Read More

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம். இந்த திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தியது. அதாவது கிராமப்புறங்களில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதியாண்டில் உறுதியாக 100 நாள் வேலையும், உத்தரவாதமான ஊதியமும் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்த திட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை தற்போதைய மத்திய அரசு செய்ததுடன், இந்திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ராம் ஜி திட்டம்’ என மாற்றியது. மேலும் 100 நாட்களுக்கு பதிலாக 125 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் “G-RAM-G” திட்டம் தொடர்பாக நாளை பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரக வேலைவாய்ப்பு தொடர்பாக பேரவையில் திமுக…

Read More

வரும் 25-ம் தேதி விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை தொடர்ந்து பொதுவெளியில் வராமல் இருந்து விஜய், ஈரோட்டில் பெரும் பொதுக்கூட்டம் நடத்தி மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை காட்டினார். செங்கோட்டையனை பயன்படுத்திக்கொண்டு கொங்கு மண்டலத்தை பிடிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடத்து வருகிறது. இருப்பினும், கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனைகளால் தவெகவில் சற்று அமைதி நிலவி வருகிறது. ஆனாலும் மற்ற கட்சிகள் கூட்டணிகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள்…

Read More

விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல், தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி புறப்பட்டு விட்டார். தொடர்ந்து முதலமைச்சரும், சபாநாயகர் அப்பாவும் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கி வைத்தனர். மேலும், வரும் சனிக்கிழமை வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2வது நாளான நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இரங்கல் தீர்மானம் மற்றும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று 3வது நாளாக சட்டப்பேரவை கூடியது. அப்போது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.  அதாவது, விவசாயிகள் பிரச்சனை குறித்து ஜீரோ நேரத்தில் பேச…

Read More

என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெற இன்னும் 24 மணிநேரம் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் கூட்டணி குறித்த முடிவை பிரேமலதா வெளியிடாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப்பெரிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை, அதாவது ஜனவரி 23ஆம் தேதி, தமிழகம் வருகை தர உள்ளார். இந்த வருகை தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெற இன்னும் 24 மணிநேரம் மட்டுமே இருக்கிறது. ஏனென்றால், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற அதிமுக-பாஜக மும்முரமாக உள்ளது. ஆனால், தற்போதுவரை தேமுதிகவும், புதிய தமிழகமும் தங்களது முடிவை அறிவிக்காமலேயே களத்திற்கு வெளியே உள்ளனர்.…

Read More

வரும் 26ம் தேதி திமுகவில் இணையவுள்ளதாக நேற்று கூறிய ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குன்னம் ராமச்சந்திரன் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் உறுப்பினரான குன்னம் ராமச்சந்திரன் அதிமுகவில் அணிகள் பிரிந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியுமான வைத்திலிங்கம் புதன் கிழமை தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். மேலும் தஞ்சையில் இணைப்புவிழா வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவதாக வைத்திலிங்கம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரன், வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ள இணைப்பு விழாவில் தாம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைப்போவதாக அறிவித்தார். மேலும்…

Read More

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு காலை விருந்தளித்தார். இதனை தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பியூஸ் கோயல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அவர்களுடன் காலை உணவை அருந்தினோம். பழனிச்சாமி என்னுடைய நல்ல நண்பர் அவருடைய தலைமையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. ஊழலில் நிறைந்து இருக்கக்கூடிய திமுக அரசை அகற்றுவதற்கு நாங்கள் வியூகம் அமைத்து வருகிறோம் தமிழகத்தில் உள்ள சகோதர சகோதரிகள் இளைஞர்கள் ஆகியோர் திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளனர். குடும்ப ஆட்சி மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் தயாராகி விட்டார்கள். உதயநிதி அவதூறு பேச்சுகளை பேசி வருகிறார். அவரை அரசியல் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். நாளை நடைபெற இருக்கக்கூடிய மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் நாளை பிரதமர் வருகிறார் எங்களுக்கு மகிழ்ச்சியாக…

Read More

தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.350 அதிகரித்து ரூ.14,250-க்கும், சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3,40,000-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.22) குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.340க்கும், கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ரூ.3,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தமிழக சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி தரப்பு, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன. இந்தநிலையில், கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். அதற்குள் கூட்டணி இறுதி செய்யவேண்டும் என்று தமிழகம் வந்துள்ள தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஸ் கோயல் பல கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். https://x.com/ANI/status/2014185110984167516 அந்தவகையில் தற்போது, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திப்பு நடைபெற்றுள்ளது. NDA கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஆலோசிப்பதாகவும், பிரதமர் மோடி தலைமையில் நாளை NDA தலைவர்கள் அறிமுக கூட்டம்…

Read More