Author: Editor web3
டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி-பாக்டோக்ரா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரவலான பீதி ஏற்பட்டுள்ளது. ஜனவரி 18, 2026 அன்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் எண் 6E6650 டெல்லியில் இருந்து பாக்டோக்ராவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தில் விமானிகள் மற்றும் பணியாளர்களுடன் 238 பயணிகள் இருந்தனர். “விமானத்தின் கழிப்பறையில் ஒரு டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்ட ஒரு செய்தி கண்டுபிடிக்கப்பட்டது.விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. லக்னோ விமான நிலையத்தை அடைந்ததும், பாதுகாப்புப் பணியாளர்கள் விமானத்தை சுற்றி வளைத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் CISF குழுக்கள் விசாரணையைத் தொடங்கினர். அனைத்து பயணிகளும் ஸ்கேன் செய்யப்பட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி ஆட்சி உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். கூட்டணி ஆட்சி என தவெக தலைவர் விஜய் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தமிழக காங்கிரஸில் வலுத்துள்ளது. இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்ற போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால், மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்ரவர்த்தி கட்சியில் இருந்து விலகப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. https://x.com/manickamtagore/status/2012752060211707950 இந்தநிலையில், அந்த தகவலை தனது எக்ஸ் தளத்தில் டேக் செய்து பதிலளித்துள்ள மாணிக்கம் தாக்கூர், அல்றசில்ற ITwing கனவு பலிக்காத கண்ணா . நான் உண்மையான காங்கிரஸ்காரன் என்று வதந்திகளுக்கு…
நாளை நடைபெறவுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தல் ஆயத்த பணிகளில் டெல்லியில் இருப்பதால் நாளை நடைபெறவிருந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயம் என்று டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பாராசிட்டமாலுக்கும் ஆட்டிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் (அசெட்டமினோஃபென்) என்ற வலி நிவாரணிக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறியது, மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில், தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், லட்சக்கணக்கான பெண்களை உள்ளடக்கிய 43 மிக முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டன. பாராசிட்டமால் எடுப்பதற்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என லண்டன் செயின்ட் ஜோர்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்மா கலீல் தலைமையிலான குழு உறுதிப்படுத்தியுள்ளது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது கடுமையான வலி ஏற்படும் போது பாராசிட்டமால் எடுக்காமல் இருப்பது, கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம்…
காசாவை நிர்வகிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள அமைதி வாரியத்துக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி 2025 வரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வந்தது. இந்த போரில், இதுவரை 60,000 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், காஸா அமைதி வாரியம்(board of peace gaza) என்ற அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உருவாக்கினார். இந்த அமைப்பு, குறிப்பிட்ட காலத்திற்கு காசாவின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், காசாவில் இருந்து பாலஸ்தீன ராணுவம் முற்றிலுமாக வெளியேற வேண்டும், போரில் உருக்குலைந்துள்ள காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், ராணுவம் அல்லாத எந்த அமைப்பும் ஆயுதம் ஏந்தக்…
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 7 ஆம் தேதி அன்புமணி தரப்பு பாமக இணைந்த நிலையில், அன்றைய தினமே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் தமிழகம் வரும் வரவேற்பு அழைப்பிதழிலும் டிடிவி தினகரனு புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்படும் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அறிவித்திருந்தார். இந்தநிலையில், 2 நாள் பயணமாக இன்று அவர் சென்னை வருகிறார். என் டி ஏ கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள அவர், இன்றே அதிமுகவுடனான, தொகுதி பங்கீட்டை…
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி இந்து செய்தி கூற்றுப்படி, கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடிதத்தில், இப்பகுதியில் உள்ள வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனத்திற்கு தேவைப்படுவதால், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெங்களூரு அருகே இருக்கும் தொழில்துறை நகரமான ஓசூரில், சர்வதேச ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. ஓசூர் சர்வதேச ஓசூர் விமான நிலையத்திற்கு தள அனுமதி கிடைத்தவுடன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ – TIDCO) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொள்கை அளவிலான அங்கீகாரத்தைப் பெறும். இந்நிலையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து முதன்மையான…
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என சமனில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில்…
பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 25 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் சென்றுள்ளனர். இந்தநிலையில் கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்ததால் லாரி ஓட்டுநர் உள்ளூர் சாலை வழியாக சென்றுள்ளார். பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் சென்றக்கொண்டிருந்தபோது இன்று அதிகாலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்…
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சித் தாவல்கள் நிறைய நடைபெறுகின்றன. அந்த வகையில் அதிமுகவில் இருந்து திமுக, தவெகவுக்கும், திமுகவில் இருந்து அதிமுக, தவெகவுக்கும், தவெகவில் இருந்து அதிமுக, திமுகவுக்கும் மாறி மாறி கட்சித் தாவல்கள் நடக்கின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின்முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பிச்சை, எம்.முத்துராமன், நகர அம்மா பேரவை தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில் திமுகவில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். அவர் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களுடன் பேசி அவர்களை தவெக பக்கம் கொண்டு வருகிறார். இவர்தான் ஜேசிடி பிரபாகரனை அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொங்கல் முடிந்ததும் நிறைய…