Author: Editor web3

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தொடர்ந்து, “தி.மு.க. அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறீர்கள். ஏற்கெனவே கடன்சுமை அதிகமாக உள்ளது. நீங்கள் சொல்வதை எப்படிச் சமாளிக்க முடியும்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அவர்களுக்கு (தி.மு.க.) திறமை இல்லை; எங்களுக்குத் திறமை இருந்தது. நாங்கள் ஆட்சி செய்யும்போது 5 லட்சத்து 18 ஆயிரம் கோடிதான் கடன் இருந்தது. எந்தச் சூழ்நிலையில்? ஓராண்டுக் கொரோனா காலத்தில் கூட அரசுக்கு வரி, வருவாய் இல்லாத நேரத்தில் கூட, கொரோனா தடுப்புக்கு ரூ.40 கோடி செலவு செய்தோம். நாங்கள் திறமையாக நிதியைக் கையாண்டு, நிதிச்சுமை இல்லாமல், நிதிச்சுமை குறைவாக உள்ள சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம். ஆனால், தி.மு.க. அரசு…

Read More

பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அன்புமணி, பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை செய்துள்ளது என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும், மேலும் குடிகாரர்களாக்கி மது வணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இது சாதனை அல்ல…. வேதனை. போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகிருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10% அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19% அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை…

Read More

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டு ரசித்து வருகிறார். தொடர்ந்து 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை பிடித்து வெற்றிபெறும் மாடுபிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக, பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர்,  அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். நம்முடைய தமிழ் மண்ணிற்கு பெருமைக்குரிய விஷயமாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது என்றார்.

Read More

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 2026-க்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதற்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியில், மகளிர் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் இலவச வீடு, மகளிர் போல ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அம்மா இருச்சக்கர வாகனத் திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்படும், கிராமப்புறங்களில் வீடு இல்லாதோருக்கு…

Read More

பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக பாமக தலைவர் அன்புமணி – நிறுவனர் ராமதாஸ் இடையேயான முரண்பாடு, தேர்தலுக்குள் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இருதரப்புமே தேர்தல் முடிவை நான்தான் எடுப்பேன் என உறுதியாக இருப்பதே மோதல் நீடிப்பதற்கு காரணம். இந்தச் சூழலில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அந்த வகையில் அன்புமணியை பாஜக- அதிமுக கூட்டணி தேர்வு செய்துள்ளது. இதனால், கொதிப்படைந்து போய் உள்ள ராமதாஸை திமுக கூட்டணியில் இணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாமகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் களம், இரு தரப்புக்குமே, கட்சி யார் கையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்,  விசிக உள்ளே இருப்பதால் திமுக கூட்டணிக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்குமா எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே சமயத்தில், தவெக தரப்பிலிருந்தும் பாமகவுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் தனித்துச் செல்வதைக்…

Read More

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது என்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 109வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நான் எந்த ஒரு தனிக்கட்சியையும் தொடங்க போவது இல்லை என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 109ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளிய மக்களுக்காகவும் அடிதட்டில் இருக்கின்ற தொண்டர்களுக்காகவும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் தொண்டர்களுக்கான இயக்கமாக யாராலும் வெல்ல முடியாது இயக்கமாக உருவாக்கினர். தமிழகத்தில் மூன்று முறை யாராலும் அசைக்க முடியாத முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் அளித்தார். ஜெயலலிதா அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகாலம் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கி வளர்த்தெடுத்தார் என்பதுதான் அதிமுகவின் வரலாறு.…

Read More

நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜன நாயகன். இப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிற்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது தணிக்கை வாரியம். இந்தசூழலில் ஜனநாயகன் பட நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவால் படம் பொங்கலை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தது தயாரிப்பு நிறுவனம். இதனை தொடர்ந்து விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில்…

Read More

தை அமாவாசை அன்று செய்யப்படும் தானங்களை நம்முடைய முன்னோர்களே வந்து ஏற்பதாக ஐதீகம். அதனால் அன்னதானம் வழங்குவதுடன் யாருக்கு எந்தெந்த பொருட்களை கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும், என்ன செய்தால் முன்னோர்களின் மனம் மகிழ்ச்சி அடையும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, தானம் அளிப்பது ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய கர்மாக்கள் குறைவதற்கும் இவைகள் மிக மிக அவசியமானவையாகு. தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டுடன், சிவ பெருமானையும் வழிபடுவது நல்லது. தை அமாவாசையில் நீர் நிலைகளுக்கு சென்று, சூரிய உதயத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். தர்ப்பணம், தானம் இரண்டும் முக்கியமானவை என்றாலும் யார் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை பொருத்து தான் நமக்கு கிடைக்கும் நன்மைகளும், தீமைகளும் அமையும். தை அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு,…

Read More

தமிழகத்தில் ”Almont Kid” என்ற குழந்தைகளுக்கான சளி மருந்துக்கு தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து இருமல் மருந்துகள் மீதான கவனிப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், ஆல்மாண்ட்-கிட் சிரப் மருந்தில் எத்திலீன் கிளைக்கால் (EG) கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், அதன் பயன்பாடு, விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்தும்படி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசும் மேலும் சில மாநிலங்களும் ஏற்கனவே இந்த சிரப் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தன. சமீபத்தில் வெளியிடப்பட்ட தனது பொது எச்சரிக்கை அறிவிப்பில், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கூறியிருப்பதாவது, பீகாரைச் சேர்ந்த ட்ரைடஸ் ரெமெடீஸ் நிறுவனம் தயாரித்த, ஆல்மாண்ட்-கிட் சிரப் (லெவோசெடிரிசின் டைஹைட்ரோகுளோரைடு மற்றும் மான்டெலுகாஸ்ட் சோடியம் சிரப்) பேட்ச் எண் AL-24002-ல், நச்சுத்தன்மை வாய்ந்த எத்திலீன் கிளைக்கால் (EG) கலப்படம் செய்யப்பட்டிருப்பது ஆய்வக அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருளை உட்கொண்டால், அது…

Read More