Author: Editor web3
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக தலைமை கழகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் எங்கள் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க, அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம், திரை ஆளுமையாக தத்துவங்களையும், முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும் அள்ளித் தந்த பொன்மனச் செம்மல், இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளில், கூறிய மக்களாட்சியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்! வாழ்க புரட்சித்தலைவர் நாமம்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் Vehicle-to-Vehicle (V2V) எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை வாகனத்தில் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். Vehicle-to-Vehicle எனப்படும் V2V தொழில்நுட்பம் என்பதை வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை விடுக்கும். இந்த தொழில்நுட்பம் சாலையில் வாகனம் ஓட்டும்போது, வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்ப வழிவகை செய்யும். இதனால் வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ளாமல் விபத்துகளைத் தடுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் முறையாக செயல்படுத்தப்பட்ட பின்னர், விமானத்தை இயக்கும் விமானிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இடையே வான்வழியாக நடைபெறும் தகவல் தொடர்பை போன்று, சாலையிலும் வாகனங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்ள முடியும் என்று நிதின் கட்கரி இந்த தொழில்நுட்பம் குறித்து விளக்கி பேசினார். ஒவ்வொரு வாகனத்திலும் On-Board Unit (OBU) என்ற அமைப்பு பொருத்தப்படும். இதை பொருத்த…
ஈரானில் கொலைகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அந்நாட்டு அரசுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டினார். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என வெளியான தகவலுக்கு அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஈரானில் கொலைகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அந்நாட்டு அரசுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நேற்று முன் தினம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட இருந்த 800 மரண தண்டனைகள் நிறுத்தப்பட்டதை அதிபர் டிரம்ப் புரிந்து கொள்கிறார். அதிபருக்கு அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன.…
வங்கதேசத்தில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், சில்ஹெட் மாவட்டத்தின் கோயின்ஹாட் துணை மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து ஆசிரியரின் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் மேலும் அதிகரித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான வீடு, அப்பகுதியில் ‘ஜுனு சார்’ என்று அழைக்கப்படும் பிரேந்திர குமார் டே என்ற ஆசிரியருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் இரவில் அவரது வீட்டிற்குத் தீ வைத்ததாகவும், இதனால் வீடு முழுவதும் எரிந்து நாசமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://x.com/amitmalviya/status/2012010767957311600? தீ மிகவும் வேகமாகப் பரவியதால், வீட்டிற்குள் இருந்த குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், வீடும் அதிலிருந்த பொருட்களும் முழுமையாக எரிந்து நாசமாகின. இந்தத் தீ விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் சதி…
நடிகர் அஜித் குறித்த பேச்சுக்களில் மிகவும் முக்கியமான பேச்சு, அவர் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதுதான். ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் அவர் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். அப்படி இருக்கையில் அவர் மீண்டும் விளம்பரத்தில் நடிக்க களமிறங்கியுள்ளார். அதாவது, நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாவார். இவருக்கு சிறுவயதிலிருந்தே பைக், கார் பந்தயங்கள் மீது பிரியம். இந்த ஆர்வத்தால் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற அணியை இவர் நடத்தி வருகிறார். இதுவரை திரைப்படங்களில் நடித்து சம்பாதித்த மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்துள்ளார். மேலும் வெளிநாட்டு வீரர்களும் இந்த அணியில் களமிறங்குவதால் அதற்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படுவதால் நடிகர் அஜித் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான ‘கேம்பா எனர்ஜி’ (campa energy) விளம்பரத்தில் நடித்துள்ளார். கேம்பா எனர்ஜி பானத்தை அவர் அருந்துவது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த விளம்பரத்திற்கு அஜித்குமார் மிகப்பெரிய அளவில்…
ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் தவறில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” எனும் குரல் தமிழக காங்கிரஸுக்குள் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகைக்குப் பின் இந்த கோரிக்கை மேலும் கவனம் பெற்றுள்ளது. ஆனாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பே அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். இதற்கு பெருமளவில் எதிர்ப்பு காட்டாத தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த புகைச்சலை சமாளிக்கும் வகையில், ஐ.பெரியசாமி கூறியது அவரது கருத்து, ஆட்சி அதிகாரம் குறித்து ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என்று கூறியிருந்தார். மேலும் இதுதொடரபாக நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கென்று தனித்துவமான வாக்கு வங்கி…
அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்களி தீட்டினாலும் அதை தவிடுபொடியாக்கி அதிமுக வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளையொட்டி (ஜன.17) தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்… சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் விழாவாக, எல்லோர் இதயங்களிலும், இல்லங்களிலும் எழுச்சி தரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை தமிழ் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. திரை உலகில் தனக்கென ஒரு தனி…
தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211 ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தேசியத் தலைநகரில் 2023-ல் 8,801 ஆக இருந்த சுவாச நோய்களால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை, 2024-ல் 9,211 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படும் ஒரு தொடர்ச்சியான உயர்வுப் போக்கைக் காட்டுகிறது. ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் மற்றும் காசநோய் ஆகியவை பொதுவான சுவாச நோய்களில் அடங்கும். இவை பெரும்பாலும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. 2024-ல் இறப்புகளுக்கு மிக முக்கியக் காரணமாக இரத்த ஓட்ட மண்டல நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன; இதற்கு அடுத்தபடியாகத் தொற்று மற்றும் ஒட்டுண்ணி நோய்கள் உள்ளன. தேசியத் தலைநகரில் ஒட்டுமொத்த இறப்பு விகிதமும் அதிகரிப்பைக் காட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் டெல்லியில் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,39,480 ஆக உயர்ந்தது,…
22வது நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தியதால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என அறிவித்தனர். அதன்படி, இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் 22-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்…
என்.டி.ஏ. கூட்டணியில் அமமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக வரும் ஜன.23ம் தேதி மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான பேனரில் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்த தேர்தல்களில் வாக்குகள் சிதறியதால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, பிரிந்து கிடக்கும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளை ஓரணியில் திரட்ட பாஜக மேலிடம் விரும்புகிறதாக தெரிகிறது. இருப்பினும், கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இப்படியிருக்கையில், வரும் 23ம் தேதி சென்னை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி…