Author: Editor web3
பொங்கல் பரிசுத் தொகை பெறாத குடும்பங்கள் நாளை (ஜன.19) முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிகழாண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு, வேஷ்டி, சேவை ஆகியவற்றுடன் சோ்த்து ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு முழுவதும் முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரா்களும், 2-ஆம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் சுமாா் 50,000 கூட்டுறவுத் துறை பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இந்தநிலையில், விடுபட்டவர்களுக்கு விநியோகப் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல்…
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று இந்தூருக்கு வருகை தந்துள்ளார். அவர் முதலில் பம்பாய் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு நோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். பின்னர், அசுத்தமான நீரால் பாதிக்கப்பட்ட பகுதியான பகீரத்புராவிற்கு ராகுல் காந்தி சென்றார். எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்ஹார், மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி மற்றும் மாநிலப் பொறுப்பாளர் ஹரீஷ் சௌத்ரி ஆகியோரும் அவருடன் இருந்தனர். இந்தூரில் அசுத்தமான நீரைக் குடித்ததால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மத்திய அரசின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். ராகுல் காந்தி கூறியதாவது, “எங்களுக்கு ஒரு ஸ்மார்ட் சிட்டி வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது ஒரு புதிய ஸ்மார்ட் சிட்டி மாதிரி. இங்கு குடிநீர் இல்லை, மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இந்தூரில் அசுத்தமான நீரைக் குடித்ததால் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதான்…
ஈரானில் 800-க்கும் மேற்பட்டோரின் தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்நாட்டு நிர்வாகத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த முடிவுக்கு “மிகுந்த மரியாதை” தெரிவிப்பதாக கூறினார். இந்த முடிவு “பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக, ஈரானின் கடுமையான அடக்குமுறை தொடர்ந்தால் அமெரிக்க ராணுவ தலையீடு ஏற்படக்கூடும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அவரது இந்த பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது. ஈரான் 800-க்கும் மேற்பட்டோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற திட்டமிட்டிருந்ததாகவும், அதனை கடைசி நேரத்தில் ரத்து செய்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார். “நேற்று 800-க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட திட்டமிட்டனர். ஆனால் அதை அவர்கள் ரத்து செய்துள்ளனர். அந்த முடிவை நான் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறேன்,” என்று கூறினார். இதற்குப் பின்னர், தனது சமூக ஊடக தளத்தில் டிரம்ப்,…
அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று, அதன் நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியான கேள்விகளை எழுப்பி, விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை என்று கூறியதோடு, ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயோடு, இன்னொரு ஆயித்தை சேர்த்து வழங்குவதால், தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக மாறும் என்று கூறினார். மேலும், மகளிருக்கு இலவசம் என கூறிவிட்டு…
கூட்டணியில் சேர எனக்கு எந்த அழுத்தமும் யாராலும் கிடையாது என்றும் உரிய நேரத்தில் அமமுக எந்த கூட்டணியில் சேருகிறது என உரியவர்கள் அறிவிப்பார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவர்களின் 109ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுக்குழு முடிந்த பிறகு கட்சி வேலைகள் உள்ளது, பொங்கல் நேரம் என்பதால் கழக நிகழ்ச்சிகள் இல்லை. சொந்த வேலைகளுக்கு பல ஊர்களுக்கு செல்கிறேன், டெல்லிக்கு சென்றால் அரசியல் வேலைகளுக்காக தான் செல்கிறேன் என இல்லை. எனக்கு எந்த அழுத்தமும் யாராலும் கிடையாது..உரிய நேரத்தில் அமமுக எந்த கூட்டணியில் சேருகிறது என உரியவர்கள் அறிவிப்பார்கள் என்று கூறினார். பொதுக்கூட்டத்தில் தெரிவித்த படி, 2026 தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் எந்த கட்சியும்…
நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 17 இன்று மால்டா டவுன் ரயில் நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஹவுரா மற்றும் குவஹாத்தி (காமாக்யா) இடையே இயக்கப்படும், மேலும் ஜனவரி 18 முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும். இது நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்கும். வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் ஹவுரா மற்றும் காமாக்யா இடையே தினசரி இயக்கப்படும். இதில் ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி மூன்றாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இடம்பெற்றுள்ளன, இது பயணிகளுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்த ரயிலின் உட்புற வடிவமைப்பு இந்தியப் பண்பாட்டை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்டிகள் நவீன வசதிகள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள் மற்றும்…
அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் கூட, இந்த படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியின் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருப்பதாக சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து சிரஞ்சீவி கூறியதாவது,“கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டையில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்பது உண்மைதான். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியை தங்கள் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருக்கிறது. இப்போது அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். இந்தநிலையில், இப் படத்திற்கு புக்மைஷோ போன்ற டிக்கெட் முன்பதிவு தளங்களில் ரிவ்யூ மற்றும் விமர்சனங்களை தெரிவிக்க தடை செய்ய…
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பிசிசிஐ மாற்றங்களைச் செய்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 அணிக்குத் திரும்பியுள்ளனர். ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக இந்தத் தொடரின் ஐந்து போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவருக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து டி20 தொடர் ஜனவரி 21 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. திலக் வர்மாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் முதல் மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வர்மா நான்காவது டி20 போட்டியில் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை தொடங்க ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் காயங்கள் இந்திய அணிக்கு ஒரு பெரிய…
19 வயதுக்கு உள்பட்ட (யு-19) ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்ற ஆட்டத்தில், அமெரிக்காவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. குரூப் “ஏ’-வில் இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, அமெரிக்கா உள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 6 கட்டத்துக்கு வரும். அதில் அந்த 12 அணிகளும் தலா 6 அணிகளாக “குரூப் 1′, “குரூப் 2′ என பிரிக்கப்படும். அந்த அணிகள் தங்களுக்குள்ளாக மோத, முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதி ஆட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இன்றைய போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ்வென்ற வங்க தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங்…
2026 தேர்தலையொட்டி டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிக அர்ஜுனா கார்கே தலைமையில் தமிழ்நாடு எம் எல் ஏ மற்றும் எம் பிக்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை 4 மணி க்கு நடைபெறவுள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தமிழ் நாடு சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ்குமார், சூரஜ்ஹெகுடே,நிவேதித் ஆல்வா, ஆகியோர் முன்னிலையில் தமிழ் நாட்டின் காங்கிரஸ் எம் எல் ஏக்கள், எம் பிக்கள் உட்பட அனைவரும் கட்டாயம் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://x.com/manickamtagore/status/2012366600373141994 இந்த கூட்டத்திற்கு செல்வதற்கு முன் மாணிக்கம் தாக்கூர் போட்ட பதிவுதான் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அவரது எக்ஸ் தள பதிவில், இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்.. இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும்…