Close Menu
    What's Hot

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»சிரஞ்சீவியின் மன சங்கர வர பிரசாத் காரு படத்துக்கு ரிவ்யூ போட தடை!. நீதிமன்றம் உத்தரவு!
    சினிமா

    சிரஞ்சீவியின் மன சங்கர வர பிரசாத் காரு படத்துக்கு ரிவ்யூ போட தடை!. நீதிமன்றம் உத்தரவு!

    Editor web3By Editor web3January 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mana Shankara Vara Prasad Garu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், இரண்டாவது நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடித்துள்ளனர். கடந்த 12-ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அண்மையில் கூட, இந்த படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியின் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருப்பதாக சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து சிரஞ்சீவி கூறியதாவது,“கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டையில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்பது உண்மைதான். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியை தங்கள் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருக்கிறது. இப்போது அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

    இந்தநிலையில், இப் படத்திற்கு புக்மைஷோ போன்ற டிக்கெட் முன்பதிவு தளங்களில் ரிவ்யூ மற்றும் விமர்சனங்களை தெரிவிக்க தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படத்தின் வசூலை பாதிக்கக்கூடிய ஆன்லைன் தாக்குதல்கள் / திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, BookMyShow (BMS) தளத்தில்  திரைப்படத்திற்கான பக்கம் தற்போது ratings மற்றும் reviews முடக்கப்பட்டுள்ளன. “நீதிமன்ற உத்தரவின்படி மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    https://x.com/taran_adarsh/status/2010330103134425180?

    இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் கூறியதாவது, “பெரிய முன்னேற்றம் – தெலுங்கு திரைப்படத் துறை மிகப் பெரிய முயற்சியை எடுத்துள்ளது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, டிஜிட்டல் முறைகேடுகள் மற்றும் திட்டமிட்ட ஆன்லைன் துஷ்பிரயோகங்களிலிருந்து சினிமாவை பாதுகாக்க தெலுங்குத் திரையுலகம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது,” என்று பகிர்ந்துள்ளார்.

    அவர் மேலும் கூறியதாவது, “ஒருங்கிணைந்த முறையில் செய்யப்படும் நெகட்டிவ் டவுன்-ரேங்கிங் மற்றும் தீங்கிழைக்கும் விமர்சனத் தாக்குதல்களைத் தடுக்க, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த திரைப்படத்திற்காக டிக்கெட் முன்பதிவு தளங்களில் ratings மற்றும் reviews சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.” இந்த உத்தரவு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக வழங்கப்பட்டதாகும். இதன் மூலம்,
    நியாயமான டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் நெறிமுறையுடன் கூடிய பார்வையாளர் பங்கேற்பு ஆகியவற்றுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    https://x.com/TheDeverakonda/status/2010279655681749314?

    நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளித்த, நடிகர் விஜய் தேவரகொண்டா, “பலரின் கடின உழைப்பு, கனவுகள், முதலீடு ஆகியவை ஒருவிதத்தில் பாதுகாக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    ஆனால், நம்முடைய சொந்த மக்களே இப்படியான பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பது வருத்தமளிக்கிறது. ‘வாழவும் வாழவிடவும்’ என்ற எண்ணம் எங்கே போனது?
    ஒன்றாக வளர வேண்டும் என்ற மனநிலை என்ன ஆனது?”என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநியூசி. டி20 தொடர்!. ஷ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு!. திலக் வர்மா நீக்கம்!. 
    Next Article நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!. பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!.
    Editor web3
    • Website

    Related Posts

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    June 12, 2026

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    June 12, 2026

    நீங்க சொல்லுங்க.. வேண்டாம்னா நான் அரசியலுக்கு வர மாட்டேன்..!! மக்களிடம் முடிவை கொடுத்த ராகவா லாரன்ஸ்!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.