Author: Editor web3
ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான விசா செயலாக்கத்தை டிரம்ப் நிர்வாகம் முழுமையாக நிறுத்தியது. டிரம்ப் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட நாடுகளில் ஈரான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகியவை அடங்கும். இந்தத் தடைகள் ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் காலவரையின்றி அமலில் இருக்கும். ஃபாக்ஸ் நியூஸின் கூற்றுப்படி, இந்த குறிப்பு அமெரிக்க தூதரகங்கள் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் விசாக்களை மறுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. டிரம்ப் நிர்வாகம் சோமாலியா, எகிப்து, தாய்லாந்து மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதித்துள்ளது. சோமாலியா ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தானும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொதுமக்களைச் சுரண்டி, நலத்திட்ட உதவிகளைச் சார்ந்து வாழ்பவர்களைத் தடுப்பதற்காக, அமெரிக்கா தனது நீண்டகால அதிகாரங்களைப் பயன்படுத்தும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி…
பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானின் வான்வெளி மூடப்பட்டதால் சர்வதேச விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறை தீவிரமடைந்து வருகிறது. மனித உரிமை அமைப்புகளின்படி, இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலைக்குப் பதிலடியாக சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது, மேலும் இந்தியாவும் தனது குடிமக்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. நோர்வேயைத் தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம், ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறையின் போது இதுவரை குறைந்தது 3,428 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. IHR-இன் படி, இந்த மரணங்களில் 3,379 ஜனவரி 8 முதல் 12 வரை, போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது நிகழ்ந்தன. புதன்கிழமை, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, இந்திய வெளியுறவுத்துறை…
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் UP வாரியர்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கடைசி பந்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. இது WPL 2026 தொடரில் டெல்லியின் முதல் வெற்றியாகும், அதே சமயம் யுபி அணிக்கு இது மூன்றாவது தொடர் தோல்வியாகும். நவி மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட் செய்த யுபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு, ஷஃபாலி வர்மா மற்றும் லிசெல் லீ ஆகியோர் இணைந்து 94 ரன்கள் சேர்த்த தொடக்க ஜோடி மூலம் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஷஃபாலி வர்மா 36 ரன்களும், லீ 67 ரன்களும் எடுத்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் 13 ரன்கள் தேவைப்பட்டன. டெல்லிக்கு வெற்றி உறுதியாகிவிட்டதாகத்…
2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று (ஜனவரி 15 ஆம் தேதி வியாழக்கிழமை ) தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் நடைபெறும் இந்த தொடரின் முதல் நாளில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்காக மொத்தம் 16 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை உள்ளடக்கிய குழு B இல் உள்ளது. அதன்படி இன்றைய முதல் போட்டியில் இந்தியாவும் – அமெரிக்காவும் மோதுகின்றன. இதுதவிர ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து, டான்ஸானியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளும் மோதுகின்றன. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இதுவரை 5 முறை உலக சாம்பியன் பட்டம் இந்தியா, 6வது முறையாக தொடரை வெல்லுமான என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்தியா அண்டர்-19 vs யுஎஸ்ஏ அண்டர்-19 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில்…
பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு ‘பொங்கி வழிதல், பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசி இட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு பொங்கல் 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிராமப்புறங்களில் மக்கள் இந்த தைப்பொங்கலைத் திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில் பொங்கலைச் செய்வார்கள். அந்தப் பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும். எனவே இந்த நன்னாளில் இந்த…
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரத்தில் வருகிற 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. அதன்படி, தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (ஜன.15) அன்று மதுரை மாநகரில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகள் எல்.இ.டி. திரையில் வெளியிடப்பட உள்ளது. இதில் காளைகளைப் பிடித்த வீரர்களின் விவரங்கள் வெளியிடப்படும். இதையொட்டி, ஆயிரக்கணக்கானோர் கூடுவதை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் காளைகளை கொண்டுவருபவர்கள் ஒத்துழைப்பு வழங்கி விழாவை சிறப்பாக நடத்திட மதுரை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜன., 15) விசாரணைக்கு வருகிறது. கடந்த 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் டிசம்பர் 18 அன்று திரைப்படத்தை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) சமர்ப்பித்தனர். அந்த வாரியம் சில காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்து, ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டது. தயாரிப்பாளர்கள் தேவையான மாற்றங்களைச் செய்தனர், ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. வாரியம் அந்தப் படத்தை ஒரு மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைத்தது, இதைத் தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். ஜனவரி 9 அன்று, உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷாவின் ஒற்றை நீதிபதி அமர்வு, தணிக்கை வாரியம் உடனடியாக ‘யு/ஏ’ சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மீண்டும் மீண்டும் புகார்களைப் பரிசீலிப்பது ஒரு கவலைக்குரிய போக்கை உருவாக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.…
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களை விளையாடுவதற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.ஓடிஐ தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டாவது ஓடிஐ போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. வதோதரா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்திாயசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 5 ஓடிஐ இன்னிங்ஸில் விராட் கோலி சிறப்பான பார்மை வெளிக்காட்டி வருகிறார். 74*, 135, 102, 65*, 93 என 469 ரன்களை குவித்துள்ளார். அதேநேரத்தில், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் முறையே 131, 77 ரன்களை அடித்தார். விராட் கோலி டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், ஓடிஐ போட்டிகளில் மட்டும்…
கே.எல்.ராகுலின் அதிரடி சதத்தால் நியூசிலாந்து வெற்றிபெற 285 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இந்தியா – நியூசிலாந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 24 ரன்களில் ஆட்டமிழக்க, ஒருபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். இருப்பினும் 56 ரன்களுக்கு கில் அவுட்டானர். பின்னர் களமிறங்கிய விராட் கோலி(23), ஸ்ரேயாஸ் ஐயர்(8), ஜடேஜா (27) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதிவரை களத்தில் இருந்த ராகுல் 92 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள்…
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று போகி பண்டிகையுடன் தொடங்கியது. நாளை (15.1.2026) தைப்பொங்கல், நாளை மறுநாள் (16.1.2026) மாட்டுப் பொங்கல், 17.1.2026 அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளில் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடும் நேரம் குறித்து பார்ப்போம். காலை 6 மணிக்கு முன் சூரிய பொங்கல் வைப்பவர்கள் நேரம் பார்க்க தேவையில்லை. பிறகு வைப்பவர்கள் காலை 7.45 முதல் 8.45 மணி வரை, அல்லது 10.35 முதல் 1 மணி வரை பொங்கல் வைக்கலாம். மாட்டுப் பொங்கல் தினத்தில் படையிலிடும் பழக்கம் இருப்பவர்கள் காலை 9:10 மணி முதல் 10:20 வரை படையல் போடலாம் அல்லது 12:00 மணி முதல் 1:30 மணி வரை போடலாம். மாலையில் படையல் போடும் பழக்கம் இருப்பவர்கள் ஆறு மணிக்கு மேல் படையல் போடலாம். மாலையில் இடும் படையலுக்கு…