Author: Editor web3

சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும். குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல. குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும். அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதை குறைத்தால், வெளியேற வேண்டிய கழிவுகள் சிறுநீரகத்திலேயே தேங்கிவிடும். ஆற்றில் தண்ணீர் வறண்டு போனால் மணல் திட்டுக்கள் உருவாகுவது போல, தண்ணீர் குறைந்தால் இந்த…

Read More

ஈரானில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறவும், மறு அறிவிப்பு வரும் வரை தெஹ்ரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் வெளியுறவு அமைச்சகம் தனது ஆலோசனையில் வலியுறுத்தியுள்ளது. “ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், போராட்டங்கள் அல்லது பேரணிகள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள் மற்றும் ஏதேனும் முன்னேற்றங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்கள் வணிக விமானங்கள் அல்லது கிடைக்கக்கூடிய எந்தவொரு போக்குவரத்து வழியிலும் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  ஈரானில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்கள் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்கள், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகள் உட்பட அனைத்தையும் தயாராக வைத்திருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.…

Read More

தெலங்கானாவில் கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக 500 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில்200 தெருநாய்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்ட நாய்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது, தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காக, சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தல்களின் போது “கிராம மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக”, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த சம்பவத்தை செய்ய உத்தரவிட்டதாக கிராம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அனுமக்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களை கொன்றதாக கூறப்படும் சம்பவத்தில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள் உட்பட மொத்தம்…

Read More

பரபரப்பான சூழலில் நகர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அதில் உணவு பழக்கங்களும் முக்கியமான ஒன்றாகும். தலை வாழை இலை போட்டு அறுசுவைகளும் பரிமாறப்பட்டு சாப்பிடப்பட்ட நம்முடைய பாரம்பரியமான உணவு பழக்க வழக்கங்கள் மாறி தற்போது மெல்ல மெல்ல துரித உணவுகளின் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டங்களில் சாப்பிடுவதற்கும் உரிய நேரம் கொடுக்காததும் ஒரு மிகப்பெரிய சிக்கலாகவே இருக்கிறது. அதிகம் சாப்பிடுதல்: ஒருவர் சாப்பிட்ட உணவை பதிவு செய்வதற்கு மூளையானது பொதுவாக 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இப்படி இருக்கும்போது குறைவான நேரத்தில் சாப்பிட்டு முடித்து விட்டால் வயிறு நிறைந்துவிட்டது என்ற சிக்னலை மூளை கொடுக்காது. அதனால் இன்னும் அதிகமாக சாப்பிட நேரலாம். செரிமான கோளாறு: விரைவாக சாப்பிடுபவர்கள் உணவை நன்றாக மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் வயிற்றுக்குள் செல்லும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு வயிறு உப்புசம், வாயு…

Read More

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால், விஜய் – சீமானை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அண்ணாமலை பேசியுள்ளது பேசுப்பொருளாகியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் தற்போதைய தேர்தல் களம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், நாங்கள் எந்த கட்சியையும் இழிவு படுத்த வில்லை, திமுக வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம் எனப்பேசினார். தொடர்ந்து அவரிடம் விஜய் NDA கூட்டணிக்குள் வருவாரா என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அண்ணன் சீமான் திராவிட கட்சிகளே வேண்டாம் என நினைக்கிறார் எனவே அவர் எந்த கூட்டணிக்குள்ளும் வரப்போவது இல்லை. திமுகவை காத்திரமாக எதிர்க்கும் விஜய் எங்கு சென்று சேரவேண்டும் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என பேசினார். அடிப்படையில் எங்களுக்கும் அதிமுகவுக்கும் சித்தாந்த முரண்கள் இருந்தாலும் திமுகவை வீழ்த்தவேண்டும் என்ற…

Read More

வடகிழக்கு தாய்லாந்தில் கட்டுமானத்தில் உள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு சொந்தமான கிரேன் ரயில் மீது விழுந்த விபத்தில் 22 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 80 பேர் காயமடைந்தனர். வடகிழக்கு தாய்லாந்தில்  இன்று காலை நடந்த ஒரு கோரமான ரயில் விபத்து நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிக்கியோ மாவட்டத்தில் நிகழ்ந்தது. அந்த ரயில் பாங்காக்கிலிருந்து உபோன் ராட்சதானி மாகாணத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுமானத்தில் இருந்த அதிவேக ரயில் திட்டத்தி பயனபடுத்தப்பட்ட கிரேன், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்த ரயில் தடம் புரண்ட துயரச் சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சுமார் 80 பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சில உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, மேலும்…

Read More

நடிகர் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜனவரி 15, 2026) விசாரிக்கவுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்கவுள்ளது. இந்த வழக்கு திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பானது. ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சில புகார்களுக்குப் பிறகு ஒரு சர்ச்சை எழுந்தது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் டிசம்பர் 18 அன்று திரைப்படத்தை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) சமர்ப்பித்தனர். அந்த வாரியம் சில காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்து, ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டது. தயாரிப்பாளர்கள் தேவையான மாற்றங்களைச் செய்தனர், ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. வாரியம் அந்தப் படத்தை ஒரு மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைத்தது, இதைத்…

Read More

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.சுப்மன் கில் தலைமை யிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ஸ்கோர் கொண்ட…

Read More

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கர்லாம்பாக்கம் காலனி கிராமத்தில் கடந்த திசம்பர் 27-ஆம் தேதி இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கும், 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் அப்பகுதியில் வினியோகிக்கப்பட்ட பாக்டீரியா கலந்த குடிநீரைக் குடித்தது தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படைத் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. கர்லாம்பாக்கம் காலனியில் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த ஏழுமலை, சுதா ஆகிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவத்திற்குப் பிறகு உடல் நலம் தேறியுள்ளனர். இந்த சோகத்தின் சுவடுகள் கர்லாம்பாக்கம் காலனியில் இன்னும் அகலவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகளை எடுத்து சென்னை கிண்டியில் உள்ள மாநில…

Read More

ஈரானில் நடந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது. கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில் ஈரானில் நிலைமை படிப்படியாக மோசமடைந்து வருகிறது. மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுப்படி, இதுவரை 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், சில அறிக்கைகள் இந்த எண்ணிக்கையை 2,500 க்கும் மேற்பட்டோர் எனக் கூறுகின்றன. இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானிய அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார், போராட்டக்காரர்களைக் கொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், உதவி வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார். ஈரானிய அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை ஓரளவு நீக்கியுள்ள நிலையில், பல நாட்களுக்குப் பிறகு மக்கள் வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் அதே வேளையில், டிரம்ப் ஈரானியர்களை தங்கள் போராட்டங்களைத் தொடர வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் தொடர்ந்து முடக்கத்தில் உள்ளன, இதனால் நாட்டிற்குள் தொடர்பு கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக்…

Read More