Author: Editor web3

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.  ஆட்சிக் காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேபோல், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டம் தொடங்கிய நிலையில் பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று…

Read More

டெல்லியில் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கல் வாழ்த்தை தமிழில் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் டெல்லியில் உள்ள இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், பராசக்தி படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி பொங்கல்  நல்வாழ்த்துகள் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.  சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழாதான் இந்த பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில்…

Read More

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தமட்டில், ஒரே நாளில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.307க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.15,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் அதிகரித்துள்ளது. பலர் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்வதால் தட்டுப்பாடும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் தற்போது ரூ.300-ஐ கடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இனி சாமானிய மக்கள் வெள்ளியும் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

Read More

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில், “மதிப்பிற்குரியவர்களுக்கு, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது. குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது.…

Read More

ஒவ்வொரு நாய் கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, நாய் தாக்குதல்களுக்கு இனி அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல், அவற்றுக்கு உணவளிப்பவர்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினர். மேலும்,  கடந்த ஐந்து ஆண்டுகளாக தெருநாய்கள் தொடர்பான விதிமுறைகள் செயல்படுத்தப்படாதது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ’நாய்க் கடி சம்பவங்களுக்கு மாநிலங்கள் பெரும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்கப் போவதாக கூறியது. மேலும், ’கடந்த ஐந்து ஆண்டுகளாக விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் எதுவும் செய்யாததால், ஒவ்வொரு நாய்க்கடி மூலம், குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் மரணம் அல்லது காயங்களுக்கு, மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்கப் போவதாக தெரிவித்த நீதிபதிகள், ’விலங்குகளை (நாய்கள்)…

Read More

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் மணமக்கள் உட்பட 8 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்  செக்டார் ஜி-7/2 பகுதியில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென சிலிண்டர் வெடித்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் திருமண வீடு முழுவதும் எரிந்து சேதமானது. . இடிபாடுகளுக்குள் சிக்கிய 19 பேரை மீட்புப் படையினர் மீட்டனர். இதில் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 4 வீடுகள் சேதமடைந்தன. உயிரிழப்புக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டில் கல்வி ஒருபோதும் தனியார் மயமாகக் கூடாது. தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்றும் அதற்கான நிதியை ஒதுக்கிடு செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றினார். அப்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் அன்றாட புரட்சி ஏற்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றி வருகிறது. மாணவர்கள் தாங்கள் பயின்ற அறிவுத்திறனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளியில் கல்வி பயில சிறந்த சுற்றுச்சூழல் அவசியப்படுகிறது. வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்ட ஒருவருக்கு ஒருவர் மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். 20 ஆண்டுகள் எனது அரசியல் பயணத்தில் நான் அறிந்து கொள்வது பிறரை மதித்து நடப்பது. நான்…

Read More

உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ரஷ்யா ஒரு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில்( Kuril Islands ) தீவுகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயுள்ள குரில் தீவுகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) மாலை 6:34 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடக்கு 44.6 டிகிரி மற்றும் கிழக்கு 149.1 டிகிரி அட்சரேகையில், ஜப்பானின் அசஹிகாவாவிலிருந்து சுமார் 545 கி.மீ. கிழக்கே ஏற்பட்டது. இதன் மையப்பகுதி பூமியின் மேற்பரப்பிலிருந்து 45 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. குரில் தீவுகள் ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் நில அதிர்வு மிகுந்த ஒரு பகுதியில் அமைந்துள்ளன. அங்கு டெக்டோனிக் தட்டுகளின் அசைவு காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இந்த…

Read More

ஜனநாயகன் சர்ச்சைக்கு மத்தியில் பொங்கலுக்கு தெறி படம் ரீரிலிஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், அதுவும் ஒத்திவைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 9ம் தேதி ஜனநாயகன் படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனையால் ரிலிஸ் ஆவதில் தாமதமாகி கொண்டே செல்கிறது. அதாவது, சென்சார் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது வரும் 21ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. மேலும் சென்சார் வழங்கவேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் படக்குழுவும் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பட்டியலில் இருப்பதால் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜனநாயகன் படம் தள்ளிப்போனதால் தெறி படம் பொங்கல் நாளி (ஜன.15) ரீ ரிலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டரை திருவிழாவாக்க ரசிகர்கள் தயாராகி வந்தனர். இந்த நிலையில், ரி ரீலிஸாகவுள்ள பட (ஜன நாயகன்) தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி பட ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.…

Read More

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதனிடையே, நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்துள்ளனர். மேலும், படகில் இருந்த ஜார்ஜ், சுதன், கனகராஜ், சுமித், பரலோக ராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகிய 10 மீனவர்களை இன்று (செவ்வாய்கிழமை)…

Read More