பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் மணமக்கள் உட்பட 8 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஜி-7/2 பகுதியில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென சிலிண்டர் வெடித்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் திருமண வீடு முழுவதும் எரிந்து சேதமானது. . இடிபாடுகளுக்குள் சிக்கிய 19 பேரை மீட்புப் படையினர் மீட்டனர். இதில் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 4 வீடுகள் சேதமடைந்தன. உயிரிழப்புக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
