கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தமட்டில், ஒரே நாளில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.307க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.15,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 11 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் அதிகரித்துள்ளது. பலர் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்வதால் தட்டுப்பாடும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் தற்போது ரூ.300-ஐ கடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இனி சாமானிய மக்கள் வெள்ளியும் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
