Author: Editor web3

சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சி தங்களுடைய அரசியல் வேலைகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு மக்களை நேரில் சென்று பொதுக் கூட்டம் நடத்தி சந்திக்காமல் இருந்த விஜய் டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தார். ஈரோட்டை தொடர்ந்து விஜய் அடுத்ததாக டிசம்பர் 28 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நடத்த விருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் ஒருப்பகுதியாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இப்படியான சுழலில் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்த்…

Read More

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமைக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையே ஒரு முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் நாளை (சனிக்கிழமை, ஜனவரி 17) மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் நடைபெறும். தகவல்களின்படி, நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை முறைப்படி கோரவுள்ளது. மாநில அரசில் காங்கிரஸுக்குக் குறைந்தபட்சம் ஆறு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கோரி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய இடப் பங்கீட்டை விட கட்சிக்கு…

Read More

பயங்கர எதிர்ப்புக்கு மத்தியில் வெனிசுலா எதிர்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை டொனால்ட் டிரம்பிற்கு வழங்கினார்.  வெனிசுலாவில் அதிகாரத்திற்காக வெளிப்படையாக ஆதரிக்க டிரம்ப் சமீபத்தில் மறுத்ததைக் கருத்தில் கொண்டு, இது மச்சாடோவின் ஒரு பெரிய அரசியல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு, டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எழுதினார், “அவர் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை வழங்கினார், இது எனக்கு ஒரு பெரிய மரியாதை.” டிரம்ப் மச்சாடோவைப் பாராட்டினார், அவரை “மிகவும் நல்ல பெண்” என்றும், அவர் தனது வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பு, நோபல் பரிசு பெற்ற ஒருவர் தனது விருதை வேறு ஒருவருக்கு வழங்க முடியுமா என்பது குறித்து சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையில், நோபல் நிறுவனம் விதிகளை தெளிவுபடுத்தியுள்ளது. நோபல் பரிசு பதக்கம் 6.6 சென்டிமீட்டர்…

Read More

அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும் என்பதால், திமுக அரசின் கொள்ளை திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மாலை நேர மின் தேவையை சமாளிப்பதற்காக 1553 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாகவும், அந்த அளவு மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.8.50 முதல் ரூ.9.50 வரை விலை கொடுத்து வாங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறையவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி மாநிலத்தின்…

Read More

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்! அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் – வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்! அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள். இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள். இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாட்டின் அறுவடை திருநாளான, தைப் பொங்கல் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகையும், நாளை காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகின்றன. மாட்டுப் பொங்கல் தினமான இன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் மாடுகள், கால்நடைகளை குளிப்பாட்டி, வழிபாடு செய்வார்கள். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் சொத்தமாக கருதப்படும் மாடுகளை போற்றிப் பாதுகாக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் தினம் உள்ளது. மாடுகள் இல்லாதவர்கள் கூட இன்று மாடுகளை தேடிச் சென்று உணவளித்து மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில், நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. 22 காளைகளை பிடித்து வலையங்குளம் பாலமுருகன் முதலிடத்தை பிடித்தார், இவருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை பிடித்த அவனியாபுரம் கார்த்தி…

Read More

குஜராத்தில் மாஞ்சா நூல் அறுத்ததில் 8 வயது சிறுவன் உட்பட இதுவரை 9 பேர்உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.  எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தநிலையில், தடைசெய்யப்பட்ட சீன மாஞ்சா நூல் மூலம் இதுவரை குஜராத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் ஒரு தீயணைப்பு வீரரும், வதோதராவில் 33 வயது நபரும் காத்தாடி தொடர்பான விபத்துகளில் மின்சாரம் தாக்கி இறந்தனர். சூரத்தில், ஒரு தம்பதியினரும் அவர்களது மகளும் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சந்திரசேகர் ஆசாத் மேம்பாலத்தில் இருந்து சுமார் 60 அடி கீழே விழுந்தது. மேம்பாலத்தின் குறுக்கே தொங்கிக்கொண்டிருந்த மாஞ்சா நூலைத் தவிர்க்க முயன்றபோது, ​​34 வயதான ரெஹான் ஷேக் தனது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதாகவும், இதில் மூவரும்…

Read More

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, டெல்லி தலைமைக்கு அடுக்கடுக்கான புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரான செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு அடுத்ததாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய அவர், புதிய பாரதம், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இதற்கு முன்பு இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவருக்கு, மாநில பட்டியலினப் பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில், செல்வப் பெருந்தகையின் செயல்பாடுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சிலர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவரது தலைமையின் கீழ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், கட்சியில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாகவும், தனது நலன் சார்ந்தே முடிவுகளை எடுப்பதாகவும் புகார்…

Read More

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 7 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஆசிரியர் கண்ணன் என்பவர் (ஜனவரி 13) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணனின் உயிரிழப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர  ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.  ஆசிரியர் ஒருவர்…

Read More

ஈரானில் பணவீக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை வாய்ப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் அந்நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி அந்நாட்டு அரசு எதிராக போராட தொடங்கினர்கள். கடந்த மாதம் 28ம் தேதி துவங்கிய போராட்டம் தற்போது வரை நீடித்து வருகிறது. ஒருபக்கம் போராடும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. நீங்கள் அரசுக்கு எதிராக போராடுங்கள்.. அரசு அமைப்புகளை கைப்பற்றுங்கள்.. உங்களை தாக்குபவர்களின் பெயர்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. அவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள்.. உங்களை நோக்கி உதவி வந்து கொண்டிருக்கிறது’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதன் காரணமாக அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளுமோ என்கிற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின் ‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. மத்திய கிழக்கிற்கு மட்டுமல்ல.. உலகளாவிய…

Read More