Author: Editor web3
விஜய்யின் விமர்சாத்துக்கு பனையூர் பண்ணையார் என தலைப்பிட்டு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. ‘மத்திய அரசிற்கு அடிமை’ என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…! தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர்…
தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய பேச்சில் கவனிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி பார்ப்போம். தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியதன் பின் தவெகவினரின் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3000 நிர்வாகிகள் பங்கேற்ற அந்நிகஸ்வில் ‘தவெக’வின் தலைவர் விஜய் அவர்கள் பேசிய பேச்சின் முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ளன. நிர்வாகிகளிடையே பேசிய விஜய், “நமது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்படி சொல்வதல்ல அழுத்தம் ஏதாவது இருக்கும் என நினைக்கிறீர்களா? அழுத்தம் இருக்கிறது. ஆனால் அது மக்களுக்கு. அழுத்தமா? நமக்கா? நமக்கு அழுத்தம் கொடுத்தால் அடங்கிப்போகும் ஆட்களா நாம்?” என நேரடியாகவே விஷயத்திற்கு வந்து உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “இது முக்கியமான காலகட்டம் என இதை ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன்…
தமிழக வெற்றிக்கழகத்திற்கு விசில் சின்னத்தை வழங்கியதன் பின்னணியில் ஒரு கணக்கை போட்டிருக்கிறதாம் டெல்லி. தனது எதிரிக்கு தமிழ்நாட்டில் சரிவை கொடுக்க போடப்பட்ட அந்த கணக்கு என்ன? அது நிறைவேற வேண்டுமென்றால் நடக்க வேண்டிய ஒரு முக்கிய நகர்வு என்ன? என்பதை பார்க்கலாம். ‘ஜனநாயகன்’ படத்துக்கு தடை, கரூர் விவகாரத்தில் சிபிஐ தரும் நெருக்கடிகள் என இரு முக்கிய நிகழ்வுகள் தமிழக வெற்றிக்கழகத்தினரை சோர்வடைய செய்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னதாய் ஒதுக்கியிருப்பது அக்கட்சியினருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. சின்னம் கிடைத்ததையடுத்து அடுத்தடுத்த தேர்தல் வேளைகளில் மும்முரமாக இறங்கத் தொடங்கியிருக்கிறது அக்கட்சி. மத்திய பாஜகவுக்கு எதிரான மாநிலமான தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்ப்பதால் விசிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு சின்னம் கொடுப்பதில் இழுத்தடித்து, நீதிமன்றம் வரை சென்று சின்னத்தை பெற வைக்கும் தேர்தல் ஆணையம் பாஜகவை கொள்கை எதிரி என எதிர்க்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கேட்ட சின்னத்தை இத்துணை சுலபமாக வழங்கியது…
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்பமனு விநியோகம், வேட்பாளர்களை தேர்வு செய்வது, களப்பணிகளுக்கான குழுக்களை அமைப்பது தொடர்பான பணிகள் முழு வேகமெடுத்துள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்பமனு விநியோகம், வேட்பாளர்களை தேர்வு செய்வது, களப்பணிகளுக்கான குழுக்களை அமைப்பது தொடர்பான பணிகள் முழு வேகமெடுத்துள்ளன. கொங்கு மண்டலம் என்பது தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திண்டுக்கல் போன்ற 10 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டங்கள் தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாகவே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என…
தீவிர ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மாநிலங்களவை எம்.பி.., தர்மர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்ததன் பின்னணியில் கூறப்படும் காரணங்கள் பற்றி பார்க்கலாம். ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முயற்சியால் ஒன்றிய செயலாளரில் இருந்து மாநிலங்களை உறுப்பினர் ஆனவர் தர்மர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பிரிவினையிலிருந்தே ஓ.பி.எஸ் தரப்பில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இதையடுத்து சமீப நாட்களாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுகவில், தவெகவில் என இனைந்து வந்த நிலையில் எம்.பி., தர்மரோ எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இதன் பின்னணியில் இருப்பது ஓ.பன்னீர்செல்வத்தின் சமீபத்திய செயல்பாடுகள் தான் என்கிறது தகவல்கள். அதாவது, அதிமுகவை ஒன்றிணைத்து விடலாம் எனும் நம்பிக்கைகொண்டு அதே நம்பிக்கையை தன்னை சுற்றியிருப்பவர்களுக்கும் கொடுத்து வந்த ஓ.பி.எஸ், அந்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்காத நிலையில் தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப்போயுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியாக கூற…
சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனப் பொருட்கள் அமெரிக்க சந்தைகளில் நுழைய கனடா ஒரு வழித்தடமாக பயன்படுத்தப்பட அனுமதிக்கிறது என்ற டிரம்ப் நம்புவதால் இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மார்க் கார்னி கனடாவை சீனாவுக்கான “ட்ராப்-ஆஃப் போர்ட்” (drop-off port) ஆக மாற்றினால், அது மிகப்பெரிய தவறு ஆகும் என்று டிரம்ப் வெளிப்படையாக எச்சரித்துள்ளார். ட்ருத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது, இத்தகைய எந்த ஒப்பந்தமும் அமெரிக்காவுக்குள் நுழையும் அனைத்து கனடா பொருட்களுக்கும் கடும் சுங்கவரி விதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக டிரம்ப்பிற்கும் கனடாவிற்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கிரீன்லாந்தில் முன்மொழியப்பட்ட “கோல்டன் டோம்” ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை நிராகரித்ததற்காக டிரம்ப் கனடாவை விமர்சித்துள்ளார். இந்தத் திட்டம் கனடாவைப் பாதுகாக்கும் என்று டிரம்ப் கூறுகிறார், ஆனால் கனடாவோ அமெரிக்கப் பாதுகாப்பில்…
வாக்களிப்பது என்பது ஒரு அரசியலமைப்பு உரிமை மட்டுமல்ல, அது பெருமைக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ஒரு இளைஞர் முதல் முறையாக வாக்காளராகும்போது, அந்தத் தருணத்தை சமூகத்தினருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ‘மை பாரத்’ அமைப்புடன் தொடர்புடைய தன்னார்வலர்களுக்கு அவர் ஒரு சிறப்புக் கடிதம் எழுதியுள்ளதாகவும், இளைஞர்களின் முதல் வாக்களிப்பு அனுபவத்தை மறக்க முடியாததாக மாற்றும்படி அவர்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் விளக்கினார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா தனது மக்கள் தொகை காரணமாக மட்டுமல்லாமல், அதன் ஆழமான ஜனநாயக மரபுகளாலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அறியப்படுகிறது என்றார். இந்தியா ஜனநாயகத்தின் தாய் நாடாகக் கருதப்படுகிறது என்றும், இங்கு உரையாடல், விவாதம் மற்றும்…
அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்” என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிந்த தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக ஒவ்வோரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “சங்கத்தில் வளர்ந்து, சரித்திரங்கள் பல படைத்து, சீரிளமை கொண்டு விளங்கும், நம் உயிருக்கு நேராம், செந்தமிழர் தாயாம், அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிந்த தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக ஒவ்வோரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை. மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்”என்று தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக எழுதியுள்ளது. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சபாநாயகர் அப்பாவுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.. இதனை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக பாஜக தவெக என மூன்று பேரும் நம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியதாகவும், பெரும்பாலான நிர்வாகிகள் திமுக வேண்டாம் அது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த முடிவை ஓ பன்னீர்செல்வம் கைவிட்டு விட்டதாக தெரிகிறது. இருப்பினும், பாஜகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வத்தை தங்கள் கட்சியில் இணைத்து தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திவிட்டு அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும்…