Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»‘விசிலை’ எதிரிக்காக ஊதிய பாஜக? பின்னணியில் இப்படி ஒரு திட்டமா?
    அரசியல்

    ‘விசிலை’ எதிரிக்காக ஊதிய பாஜக? பின்னணியில் இப்படி ஒரு திட்டமா?

    Editor web3By Editor web3January 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக்கழகத்திற்கு விசில் சின்னத்தை வழங்கியதன் பின்னணியில் ஒரு கணக்கை போட்டிருக்கிறதாம் டெல்லி. தனது எதிரிக்கு தமிழ்நாட்டில் சரிவை கொடுக்க போடப்பட்ட அந்த கணக்கு என்ன? அது நிறைவேற வேண்டுமென்றால் நடக்க வேண்டிய ஒரு முக்கிய நகர்வு என்ன? என்பதை பார்க்கலாம்.

    ‘ஜனநாயகன்’ படத்துக்கு தடை, கரூர் விவகாரத்தில் சிபிஐ தரும் நெருக்கடிகள் என இரு முக்கிய நிகழ்வுகள் தமிழக வெற்றிக்கழகத்தினரை சோர்வடைய செய்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னதாய் ஒதுக்கியிருப்பது அக்கட்சியினருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. சின்னம் கிடைத்ததையடுத்து அடுத்தடுத்த தேர்தல் வேளைகளில் மும்முரமாக இறங்கத் தொடங்கியிருக்கிறது அக்கட்சி. மத்திய பாஜகவுக்கு எதிரான மாநிலமான தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்ப்பதால் விசிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு சின்னம் கொடுப்பதில் இழுத்தடித்து, நீதிமன்றம் வரை சென்று சின்னத்தை பெற வைக்கும் தேர்தல் ஆணையம் பாஜகவை கொள்கை எதிரி என எதிர்க்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கேட்ட சின்னத்தை இத்துணை சுலபமாக வழங்கியது எப்படி? என்ற கேள்வியின் பின்னணியில் இருக்கிறது இரு தகவல்கள்.

    வழிக்கு கொண்டுவரப்பட்ட தவெக: பாஜகவை எதிரியாக முன்னிருந்து களமாட வந்த விஜய், கரூர் விவகாரத்திற்கு பின்பாகவே பாஜக எதிர்ப்பில் இருந்து பின்வாங்க ஆரம்பித்திருக்கிறார். கூடவே ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கை பிரச்சனையும் சேர்ந்துகொள்ள வசமாக சிக்கிய விஜய்யை தனது கைப்பாவையாக மாற்றியிருக்கிறது பாஜக என்கிறது டெல்லி வட்டார தகவல். அதன் வெளிப்பாடாகவே, கட்சித்தலைவர் விஜய்யாக இருக்கட்டும், அக்கட்சியின் நிர்வாகிகளாக இருக்கட்டும் அனைவரும், ஏதோ ஓரளவிற்காவது பேசி வந்த பாஜக எதிர்ப்பை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது கண்கூடாக தெரியும். சில கிடுக்குப்பிடிகளுக்கு பின்பாக ஏதோ ஒரு வகையில் க்ரீன் சிக்கினால் கிடைத்ததன் பிறகாகவே ‘தவெக’வினர் தங்களது சின்னப்பட்டியலில் முதலாவதாக கேட்ட ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது திமுகவால் கிளப்படும் பொய் செய்தி என தமிழக வெற்றிக்கழகத்தினர் சொன்னாலும், அந்த புரளிக்கு வழிவகை செய்வதே அவர்களின் பாஜக எதிர்ப்பில் நேர்ந்த பின்வாங்கல் தான். ஆக, பாஜகவிடம் விஜய் சிக்கியுள்ளார் என்பது முதல் தகவலாக கூறப்படுவதை ஒட்டி, ‘அப்படியென்றால் அவர் என்.டி.ஏவில் சேரப்போகிறாரா?’ என்ற கேள்வி எழுமேயானால் அதற்கான பதிலாக தற்போதுவரை இருப்பது ‘இல்லை’ எனும் பதில் தான். ஏனெனில், அதன் மூலம் பாஜகவை போட்டு வைத்திருக்கும் வாக்குகளை பிரிக்கும் கணக்குகள் அதில் அடிபட்டுப்போகும். கூட்டணிக்கு வெளியிலிருந்து மறைமுக ஆதரவு அளிக்கவே வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

    ‘விசில்’ எதிரியை பலவீனப்படுத்த ஊதப்பட்டது: இரண்டாவதாக கூறப்படும் தகவலே சற்று புதியது. அதாவது, ‘தவெக’வுக்கு பொதுச்சின்னத்தை ஒதுக்கி காங்கிரசுடன் துணிந்து வலுவாக கூட்டணி பேச வழிவகுத்துள்ளதாம் டெல்லி. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் ‘தவெக’வுக்கு தயக்கத்தை கொடுத்த விஷயம் என்பது, “பொதுச்சின்னம் கொடுக்கப்படாவிட்டால் காங்கிரசின் ‘கை’ சின்னத்தில் நில்லுங்கள் என காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் அடுத்த அடியை எடுத்து வைக்க தயங்கிய ‘தவெக’ தங்களுக்கான பொதுச்சின்னமாக விசில் கிடைத்ததால் விட்ட இடத்திலிருந்து தொடங்கி காங்கிரசை தங்கள் பக்கம் கொண்டுவரப்பார்க்கும் என்கிறது அத்தகவல். அதன் ஒரு வெளிப்பாடாகவே, தவெக தரப்பிலிருந்து, “காங்கிரசில் சிலர் எங்களோடு கூட்டணி வைக்க விரும்புகின்றனர்” என வெளிப்படையாக முதல் பந்தை செங்கோட்டையன் வீசியிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் தமிழக வெற்றிக்கழகம் நிற்காத தொகுதிகளில் சுயேட்சைகளுக்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்குவதன் மூலம் அங்கும் காங்கிரஸின் ‘கை’ சினத்திற்கான வாக்குகளை மடைமாற்ற திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதாம். ஆனால், இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் முதலில் தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணி வைக்க வேண்டும். ஆனால், அது நடக்குமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

    “எது வேண்டுமானாலும் நடக்கலாம்?” என கூறப்படும் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசொந்த கோட்டையிலேயே EPS-க்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுகவினர்!. குஷியில் திமுக!
    Next Article பாஜகவிடம் சரண்டர்.. எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்? விஜய் பரபரப்பு பேச்சு!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    June 17, 2026

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    June 17, 2026

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.