Author: Editor web3
பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் டி20 உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இரண்டு விருப்பங்களைக் கருத்தில் கொண்டுள்ளதாகத் தெரிகிறது: 2026 டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிப்பது மற்றும் பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஐசிசி, டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை சேர்த்துள்ளது. பாகிஸ்தானிய சேனலான ஜியோ டிவியின்படி, ஐசிசியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பிசிபி புறக்கணிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்வையாளர்கள் மற்றும் வணிக ரீதியாக, இந்தியா-பாகிஸ்தான் போட்டிதான் 2026 டி20 உலகக் கோப்பையின் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அதே அறிக்கை, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி இன்று…
“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்” என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார். இருப்பினும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாற்றுக்கட்சிகளில் இணைந்து வரும் நிலையில், அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு உற்று நோக்கப்படுகிறது. இந்தநிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓபிஎஸை அம்மாவின் உண்மை தொண்டர் என குறிப்பிட்ட டிடிவி தினகரன், தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் ஓபிஎஸுக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன்” என்றார் டிடிவி தினகரன். ”நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடன் இருப்பவர்களை…
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. தொடர்ச்சியான மோசமான ஆட்டங்கள் மற்றும் திலக் வர்மாவின் சாத்தியமான வருகை ஆகியவை ஆடும் லெவனில் அவரது எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு, 3-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு தன்னை நிரூபிக்க இந்தத் தொடர் ஒரு முக்கிய வாய்ப்பாக இருந்தது, ஆனால் அது இப்போது கைநழுவிச் செல்வது போல் தெரிகிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர் தொடர்ந்து சொதப்பி வருவதால், சஞ்சு ஆடும் லெவனில் நீடிப்பதற்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளன. குறிப்பாக, திலக் வர்மா அணிக்குத் திரும்புவது குறித்த யூகங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன, ஆனால் அவர் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறினார். முதல் டி20 போட்டியில் அவரால் 10…
மத்திய மெக்சிகோ மாநிலமான குவானாஜுவாடோவின் சலமன்கா நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ, “ உள்ளூர் கால்பந்து போட்டிக்குப் பிறகு மக்கள் கூடியிருந்தபோது, ஆயுதம் ஏந்திய ஒரு குழு மைதானத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. சம்பவ இடத்திலேயே பத்து பேர் கொல்லப்பட்டனர், மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட சுமார் 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் குற்றவியல் வன்முறை அதிகரித்துள்ளது. சில குழுக்கள் மாகாண அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. அதிகாரிகளை அடிபணியச் செய்ய சில குற்றக் குழுக்கள் முயற்சிக்கின்றன. அதை அவர்களால் ஒருபோதும் சாதிக்க முடியாது” என எச்சரித்தார். மேலும், “இன்று நாம் ஒரு கடுமையான…
இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் ஆட்சி திமுக ஆட்சி தான் என்று அன்புமணி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத சாலைத் திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு பட்ஜெட் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி டெண்டர் விடுவதற்கு திமுக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் நிதி இல்லாத நிலையில், பல பணிகளுக்கு இப்போதே டெண்டர் விட்டு கையூட்டு வசூலிக்கும் நோக்குடன் திமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஜனவரி 14ஆம் தேதியிட்ட அரசாணை எண் 6இன்படி, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 312.48 கி.மீ நீளத்திற்கான 80 சாலைப் பணிகளை ரூ.2000 கோடி செலவில் மேற்கொள்வதற்கான சிறப்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அல்ல. மாறாக,…
கடந்த சில நாட்களுக்கு முன், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், இவரது ஆதரவாளர்கள் 10,000 பேர் இன்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி, அதே இடத்தில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பங்கேற்றார். அவர் கலந்து கொண்டு புதியதாக இணைந்தவர்களை வரவேற்றதுடன், தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவிற்கு தாமதமா வந்தாலும் லேட்டஸ்டா வந்து வைத்திலிங்கம் பணியாற்றப் போகிறார். இது என்ன இணைப்பு விழா வா அல்லது இணைப்பு விழா மாநாடு என்றும் சொல்லும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் நான் பேசாமல்…
2026 ஜனவரி 26 இன்று நாட்டின் 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வோரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்காரா ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இந்தநிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அதில், தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் தமிழ்நாடு அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களின் வடிவமைப்புடனான வாகனத்திற்கு பக்கவாட்டில் பெண்கள் மயிலாட்டம் போட கம்பீரமாக தமிழகத்தின் வாகனம் கடந்து சென்றது. கடந்த 2024-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி…
அதிகரித்து வரும் கடன், இந்திய மாநிலங்களுக்கு மிகவும் கடுமையான சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது, 2025-26 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகள் வளர்ந்து வரும் நிதி அழுத்தத்தை எடுத்துக்காட்டுகின்றன. ரிசர்வ் வங்கியின் தரவு மற்றும் மாநில பட்ஜெட் ஆவணங்களின்படி, அதிகரித்து வரும் கடன்கள் இப்போது வளர்ச்சி செலவுகள், நிதி நிலைத்தன்மை மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை பாதிக்கின்றன. 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டங்கள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிக்கை, மாநிலங்களின் மொத்த நிதிப் பற்றாக்குறையில் (GFD) சுமார் 76 சதவீதம் சந்தைக் கடன் மூலம் ஈடுசெய்யப்படும் என்று கூறுகிறது. பல மாநிலங்களின் கடன் நிலைகள் கவலைக்குரியதாகவே உள்ளன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மார்ச் 2024-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.1 சதவீதமாகக் குறைந்திருந்த மாநிலக் கடன், மார்ச் 2026-ல் தற்போதைய நிதியாண்டின் முடிவில் மீண்டும் சுமார் 29.2 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது,…
அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயல் நாட்டின் பெரும்பகுதிகளில் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. தேசிய வானிலை சேவையின்படி, கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக சுமார் 180 மில்லியன் மக்களை பாதிக்கப்பட்டுள்ளனர். இது அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி ஆகும். தெற்கு ராக்கி மலைகளிலிருந்து நியூ இங்கிலாந்து வரை பரவிய இந்த புயல், வழுக்கும் சாலைகளை ஏற்படுத்தியது, மின்சார விநியோகத்தை பாதித்தது மற்றும் வெப்பநிலையில் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் அவசரநிலை போன்ற நிலைமைகள் எழுந்தன, இதனால் நிர்வாகம் எச்சரிக்கைகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அசோசியேட்டட் பிரஸ்ஸின் கூற்றுப்படி, சனிக்கிழமை முதல் 14,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான கண்காணிப்பு வலைத்தளமான FlightAware இன் படி, வானிலை விமான நடவடிக்கைகளை பாதுகாப்பற்றதாக மாற்றியது. டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த், சார்லோட், பிலடெல்பியா, அட்லாண்டா மற்றும் நியூயார்க்கின் ஜான்…
77-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள் ஆகியோா் வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படையைச்…