Author: Editor web3
மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டோர் பயணித்த Bombardier Learjet 45 என்ற விமானம் 100% பாதுகாப்பானது என்று வி.எஸ்.ஆர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த பாம்பார்டியர் லியர்ஜெட் 45 என்ற வணிக ஜெட் விமானம், புதன்கிழமை பாராமதி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகி தரையிறங்கியதில், அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. VSR Ventures பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானதும், VT-SSK எனப் பதிவு செய்யப்பட்டதுமான அந்த விமானம், தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. அந்த ஜெட் விமானம் பாராமதியில் விபத்துக்குள்ளாகி தரையிறங்கியதாகவும், அதில் பயணம் செய்த எவரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Learjet 45 என்பது இரட்டை எஞ்சின்கள் கொண்ட ஒரு லைட் பிசினஸ் ஜெட் விமானமாகும். இது பெரும்பாலும் கார்ப்பரேட் மற்றும் விஐபி பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் சிறிய அளவும், அதிக வேகமும் காரணமாக,…
புதிய யுஜிசி விதிமுறைகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்கவுள்ளது. ஜனவரி 28, புதன்கிழமை அன்று, இரண்டு மனுதாரர்கள் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரினர். இதற்கு ஒப்புக்கொண்ட தலைமை நீதிபதி, “நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். உங்கள் மனுவில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்யுங்கள். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்,” என்று கூறினார். என்ன பிரச்சனை? ஜனவரி 13 அன்று, உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. இந்த விதிமுறைகளின் கீழ், அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சமத்துவக் குழுக்களை அமைத்து, பாகுபாட்டிற்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யுஜிசி முன்வைக்கும் வாதம் என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் சாதிப் பாகுபாடு குறித்த புகார்கள் 118 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த விதிமுறைகள் வளாகங்களில் சாதி, மதம், பாலினம், பிறந்த இடம்…
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக சார்பில் இன்று முதல் தீவிர பிரச்சாரம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” என ஊழலில் ஊறித் திளைத்துள்ள திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணத்தினாலும், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச் சுமையாலும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, திமுக ஆட்சிக்கு எதிராக, “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, ஜெயலலிதாவின் நல்லாசியோடு எனது தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சிக் காலத்தையும்; தற்போது…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையை நிகழ்த்தினார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. சமூக நீதி, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை அவர் கோடிட்டுக் காட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, “இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகிறது. தற்சார்பு வாழ்க்கை இல்லாமல் சுதந்திரம் முழுமையடையாது. கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார நிலை கணிசமாக வலுப்பெற்றுள்ளது. பணவீக்கத்தைக் குறைவாகப் பேணியதில் நாங்கள் ஒரு சாதனையைப் படைத்துள்ளோம். இது நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் நேரடியாகப் பயனளித்துள்ளது,” என்று கூறினார். ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு சரித்திர நிகழ்வு. இதன் மூலமாக சேமிப்பு என்பது நடுத்தர குடும்பத்தில் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு என்பது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அருணாச்சல்…
தமிழகத்தில் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் அன்புமணியின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக இணைந்த நிலையில் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவந்த டிடிவி தினகரன், இபிஎஸ்ஸுடன் உள்ள கருத்து மோதலை பொருட்படுத்தாது என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்பு கூட்டணி முடிவை தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து போடி புறப்படுவதற்காக சென்றார். அப்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலத்தில் ஓபிஎஸ், நாளை…
விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், அஜித் பவாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: அஜித் பவார் உள்ளிட்ட பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். அமித் ஷா: அஜித் பவார் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும்…
மராட்டிய மாநிலம் பரமாதியில் தரையிறங்கிய போது அஜித் பவாரின் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட அஜித் பவார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அஜித் பவாருடன் பயணித்தவர்கள் யார்? வெளியான விவரம்: அஜித் பவாருடன் விதிப் யாதவ், பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், சம்பவி பதக் ஆகியோர் அகால மரணமடைந்தனர். அவர்களது உடல்கள் பாராமதியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்த பிறகே, என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது தெரியவரும். இந்த கருப்புப்பெட்டியில்…
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு என்ற தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விபத்தில், உடன் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்திருப்பதும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று (28.01.2026) காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அஜித் பவார், இன்று புனேவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான தொடர் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பாராமதிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது இன்று காலை 8.45 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அஜித் பவார் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்…
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நடைபெற இருந்த கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானதில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாரமதிக்கு ஒரு சார்ட்டர்ட் விமானத்தில் (சிறிய ரக விமானம்) சென்றுக்கொண்டிருந்தார். அவருடன் உதவியாளர்கள் இருவர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், அவர் சென்ற விமானம் இன்று (ஜன.28) காலை சரியாக 8.45 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராமதியில் விமானம் தரையிரங்க முயற்சித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஆபத்தான நிலையில் மீட்கபட்ட அஜித் பவார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். https://x.com/narendramodi/status/2016377755471118758 இந்தநிலையில், இவரது மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் பவாருடன் எடுத்து புகைப்படங்களையும் மோடி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அஜித் பவார் அவர்கள் அடித்தட்டு மக்களுடன்…
இந்திய கிரிக்கெட்டில் அபாரத் திறமை கொண்ட பல வீரர்கள் இருந்தபோதிலும், அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சைகளில் சிக்கியது. அத்தகைய ஒரு பெயர் தான் ஜேக்கப் மார்ட்டின். செவ்வாயன்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின், மதுபோதையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் வதோதரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மீண்டும் அவரது பெயரைச் செய்திகளில் இடம்பிடிக்கச் செய்துள்ளது, மேலும் ஜேக்கப் மார்ட்டின் யார், அவரது கிரிக்கெட் பயணம் எப்படி இருந்தது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். காவல்துறையின்படி, ஜனவரி 27 ஆம் தேதி அதிகாலை 2:30 மணியளவில், வதோதராவின் அகோடா பகுதியில் உள்ள பூனி நகர் சொசைட்டி அருகே, ஜேக்கப் மார்ட்டின் தனது சொகுசு எஸ்யூவி காரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் மீது மோதியுள்ளார். அவர் வாகனம் ஓட்டும்போது மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அவரை காவலில் எடுத்தது, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு…