Close Menu
    What's Hot

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»அஜித் பவார் விமான விபத்தில் மரணம்! நடந்தது என்ன? வெளியான தகவல்!
    இந்தியா

    அஜித் பவார் விமான விபத்தில் மரணம்! நடந்தது என்ன? வெளியான தகவல்!

    Editor web3By Editor web3January 28, 2026Updated:January 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajit pawar dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு என்ற தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விபத்தில், உடன் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்திருப்பதும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று (28.01.2026) காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அஜித் பவார், இன்று புனேவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான தொடர் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பாராமதிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது இன்று காலை 8.45 மணிக்கு ​​இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் அஜித் பவார் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருடன் பயணித்த உதவியாளர்கள், கட்சி நிர்வாகி மற்றும் விமானி உள்பட 5 பேரும் உயிரிழந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதாக கொற்றப்படுகிறது.

    தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்த சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். மாநிலத்தின் நீண்டகால துணை முதல்வர் பதவி வகித்த பெருமைக்குரியவர். முதன் முதலில் 1991இல் 10வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு மாதங்களுக்குள் அந்த பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு 8 முறை பாரமதி சட்டமன்றத் தொகுதியில் இருந்து MLA ஆக தேர்வு செய்யப்பட்டார். பல துறைகளுக்கு அமைச்சராகவும் செயல்பட்டிருக்கிறார். 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். தற்போதும் துணை முதல்வராக இருந்துள்ளார். இடையில் குடும்பம் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியை முழுமையாக அபகரிக்க நினைத்த அஜித், பாஜகவின் துணையோடு சரத் பவார் கட்சியை இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். அதோடு அதிகபட்ச எம்எல்ஏக்களின் ஆதரவோடு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கி தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிமான விபத்தில் அஜித் பவார் மரணம்!. பிரதமர் மோடி இரங்கல்!
    Next Article அஜித் பவார் விமான விபத்திற்கான காரணம் என்ன?. கருப்புப் பெட்டி மீட்பு!. 
    Editor web3
    • Website

    Related Posts

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    July 7, 2026

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    July 7, 2026

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    ”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.