நேற்றுவரை வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் ரூ.600 குறைந்து ரூ.16,200-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று சற்று சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 9 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 34ஆயிரத்து 400ரூபாய்க்கும், ஒரு கிராம் 16 ஆயிரத்து 800க்கு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.4,15,000-க்கு விற்பனையாகிறது.
வல்லுநர்கள் அடுத்த சில நாட்களில் விலை மீண்டும் ஏறலாம் அல்லது நிலைத்து நிற்கலாம் என்று கணித்துள்ளனர். நகை வாங்க திட்டமிட்டவர்கள் இப்போது சந்தை நிலவரத்தை கவனித்து வாங்குவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் குறைவு நகை வியாபாரிகளுக்கும் சற்று நம்பிக்கையை அளித்துள்ளது.
