Author: Editor web3
2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு பெண்கள் விடுதி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல், பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் ”SheMart” என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுய உதவிக் குழுக்கள் பயன்படும் வகையில் அவர்களது உற்பத்தி பொருட்களை விற்கலாம். பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்: தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டமும், பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் சுற்றுச்சுழல் வளத்தையும் உலக மக்கள் அறிவார்கள் என கூறினார். இந்தியாவில் 3 இடங்களில் ஆயுர்வேத பயிற்சி மையம்: மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மருந்து தயாரிப்பு துறைக்காக 10000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதன் மூலமாக பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கான மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டை போலவே ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படும். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இயந்திரங்கள் தயாரிப்புக்க 10,000 கோடி ஒதுக்கீடு. சுரங்கங்கள் மெட்ரோ வழித்தடங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் புதிய திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர், இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் துறைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தார். காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை வலுப்படுத்தும் நோக்கில் ஜவுளித்துறையில் மகாத்மா காந்தி கிராம சுராஜ் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற கைவினை கலைஞர்கள், கைத்தறி…
நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, நிர்மலா சீதாராமன், முக்கிய நகரங்களுக்கு இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை இந்தியா உருவாக்கும் என்று கூறினார். இந்த வழித்தடங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணிகள் போக்குவரத்து அமைப்புகளை ஊக்குவிக்கும் ‘வளர்ச்சி இணைப்புகளாக’ (growth connectors) செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த அதிவேக வழித்தடங்கள் மும்பை–புனே, ஹைதராபாத்–புனே, ஹைதராபாத்–பெங்களூரு, ஹைதராபாத்–சென்னை, சென்னை–பெங்களூரு, டெல்லி–வாரணாசி,மற்றும் வாரணாசி–சிலிகுரி ஆகிய நகரங்களை இணைக்கும் என்று அவர் கூறினார். மேலும், கிழக்கில் உள்ள டாங்குனி (Dankuni) நகரத்தையும் மேற்கில் உள்ள சூரத் (Surat) நகரத்தையும் இணைக்கும் புதிய, தனிப்பட்ட கிழக்கு–மேற்கு சரக்கு வழித்தடம் (east–west freight corridor) அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், பல்வகை போக்குவரத்து முறைகளை ஊக்குவிக்கவும் தளவாடச் செலவுகளைக் குறைக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22 புதிய தேசிய நீர்வழித்தடங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் மூத்த பாஜக தலைவர் முன்மொழிந்தார். “இந்த…
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம் 3 முக்கிய கடமைகளை மத்திய அரசு செய்யவுள்ளதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன. இதனிடையே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு தயிர், சர்க்கரையை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் தாக்கல் செய்தார். தேர்தல்…
மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். நாட்டின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தனது ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். 9 வது முறையாக தன்னுடைய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் வரலாறு படைக்க உள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த ஆண்டு முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த முறையாவது நிதி ஒதுக்க முடியுமா என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான…
இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து வந்துள்ள புடவைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? தொடர்ந்து 9ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , பட்ஜெட் நாளில் அணிந்து வரும் புடவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மிகவும் ஆடம்பரமாக இல்லாமல், சிம்பிளாக அவர் அணிந்து வரும் புடவைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்ல; அந்தப் புடவைக்கு பின்னால் நிறைய விஷயங்களும் இருக்கும். அதாவது, அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது புடவை இருக்கும். முந்தைய பட்ஜெட்களிலும் அவர் அணிந்து வந்த புடவைகள் மற்றும் பட்ஜெட்டின் சாராம்சங்கள் நாட்டு மக்களுக்கு குளிர்ச்சியான இனிமை தரும் செய்திகளை வழங்கிய பட்ஜெட்டாகவும் புடவையாகவும் இருந்தது. ஒரு தரப்பினரிடையே விமர்சனங்கள் இருந்தாலும் பரவலாக நாட்டு மக்களுக்கு நன்மை தரும் பட்ஜெட்டாக இருந்தன. இந்நிலையில், இன்று 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன. இந்தநிலையில், மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் தயிர், சர்க்கரையை ஜனாதிபதி முர்மு நிர்மலா சீதாராமனுக்கு ஊட்டினார். இந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுகிறது தெரியுமா? இந்திய கலாச்சாரத்தின்படி, ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன் தயிர், சர்க்கரை சாப்பிட்டால் அக்காரியம் நல்லப்படியாக முடிவடையும் என நம்பப்படுகிறது. இந்த பட்ஜெட் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மென்மேலும் உயரவேண்டும் என எண்ணி…
இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-2027 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட் ஆகும். நாட்டின் பொருளாதாரத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகும் இந்த பட்ஜெட்டை விவசாயிகள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். வரி செலுத்துவோரும் சலுகைகளை எதிர்பார்த்துள்ளனர். நிதிச் சமநிலைக்கும் வளர்ச்சிக்கும் இடையே அரசாங்கம் எவ்வாறு சமநிலையை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் உலகளாவிய கொந்தளிப்பான சூழ்நிலையில் வருகிறது. அமெரிக்காவின் வரிக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) ‘வளர்ச்சி இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம்’ என்ற திட்டமாக மாற்ற அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தோராயமாக ரூ.95,000 கோடி செலவாகும் என…
சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இஷான் கிஷன் சதம் அடித்தார், மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் அதிரடியாக விளையாடி, இந்தியா 271 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை எட்ட உதவினர். நியூசிலாந்து அணி சிறப்பாக பேட் செய்தபோதிலும், 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது. ஐசிசி டி20 தரவரிசையின் மூன்று பிரிவுகளிலும் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் யார் யார், அவர்களில் எத்தனை பேர் இந்தியர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நம்பர் 1-ல் இரண்டு இந்திய வீரர்கள்: ஐசிசி ஒவ்வொரு புதன்கிழமையும் தனது தரவரிசைகளைப் புதுப்பிக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, ஐசிசி பிப்ரவரி 4ஆம் தேதி தரவரிசைகளைப் புதுப்பிக்கும். தற்போது, இரண்டு இந்திய வீரர்கள் தரவரிசையில் நம்பர்…
19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையின் குரூப் 6 இன் இறுதிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒவ்வொரு போட்டியும் உற்சாகமாக இருந்தாலும், இன்றைய கவனம் அரையிறுதியில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் 1 இல் இருந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் 2 இல் இருந்து இங்கிலாந்து தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது, இதனால் இறுதி இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மட்டுமே உள்ளன. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது , ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. குரூப் 1 இல் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து, 8 புள்ளிகளையும் +1.757 நிகர ரன் விகிதத்தையும் கொண்டுள்ளது. இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா , 6 புள்ளிகள் மற்றும் +3.337 நிகர ரன் விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் நான்கு…