Author: Editor web3

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.3) சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.15,200 வரை தங்கம் விலை சரிந்தது. சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19,200-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து 11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனை ஆகிறது.

Read More

இந்தியாவில் உணவுப் பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான, கலாச்சார மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன. சைவ உணவுப் பழக்கமே மிகவும் பொதுவானது என்று அடிக்கடி விவரிக்கப்படுகிறது, அதே சமயம் அசைவ உணவுப் பழக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவோ அல்லது பிராந்திய ரீதியிலானதாகவோ கருதப்படுகிறது. இருப்பினும், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவுகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரத்தை முன்வைக்கின்றன. இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை அந்தத் தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் எத்தனை சதவீதம் பேர் அசைவ உணவு உண்பவர்கள் என்பதைப் பார்ப்போம். தரவுகளின்படி, இந்தியாவின் மூன்று மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும், பெரும்பான்மையான மக்கள் அசைவ உணவை உட்கொள்கின்றனர். கிழக்கு, வடகிழக்கு, தெற்கு மற்றும் கடலோர இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அசைவ உணவு உண்பவர்களின் விகிதம் 90% முதல் 100% வரை உள்ளது. நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில், கிட்டத்தட்ட அனைத்து மக்களும்…

Read More

ஐஸ்கிரீம் ஒரு நவீன கண்டுபிடிப்பு போலத் தோன்றினாலும், அதன் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. அது ஒரே நேரத்திலோ அல்லது ஒரே  நபராலோ கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக, இதை உறைய வைக்கும் யோசனை படிப்படியாக வளர்ந்தது. ஐஸ்கிரீம் முதன்முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். கிமு 200 ஆம் ஆண்டு வாக்கில், பண்டைய சீனாவில் மக்கள் பால் மற்றும் அரிசி கலந்த ஒரு உறைந்த கலவையை, பனிக்கட்டியால் குளிரூட்டி உட்கொண்டனர். இதுவே ஐஸ்கிரீமின் ஆரம்ப வடிவம் என்று நம்பப்படுகிறது. கிமு 400-ஆம் ஆண்டு வாக்கில், பண்டைய இந்தியாவில் “யக்சால் (Yakhchal)” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு அதிநவீன பனிக்கட்டி சேமிப்புக் கட்டமைப்பாகும். இந்த அமைப்பை பயன்படுத்தி, பாரசீகர்கள் ஐஸ்ஸுடன் குங்குமப்பூ, பழங்கள் மற்றும் ஃபலூடா போன்ற நூடுல்ஸ் சேர்த்து குளிர்ந்த இனிப்புகளை பரிமாறியதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஐஸ் பயன்படுத்திய இனிப்புகள் மற்றும் ஐஸ் சார்ந்த உணவுகளின் வளர்ச்சியில்…

Read More

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு மற்றும் எடை குறைவு. என்ன செய்தாலும் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைப்பதில்லை. ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கறிவேப்பிலை சாற்றை குடித்து வந்தால், முடி உதிர்வு குறைவதுடன், உங்களின் அடம்பிடிக்கும் தொப்பையையும் குறைக்கலாம். அதுமட்டும் அல்ல, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவும். அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கறிவேப்பிலை ஜூஸ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 2. கறிவேப்பிலை – 1 கைப்பிடி. இஞ்சி – 2 இன்ச் அளவு. மஞ்சள் துண்டு – 2. எலுமிச்சை – 1. உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை : முதலில் ஜூஸ் செய்ய எடுத்துக்கொண்ட நெல்லிக்காய், இஞ்சி, மஞ்சள் துண்டு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தயாராக…

Read More

இந்தியா மீதான வரிகளை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது. பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய சிறிது நேரத்திலேயே டொனால்ட் டிரம்ப் இதை அறிவித்தார். இந்த வரி குறைப்பு ஜூலை 31, 2025 முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதுடன், இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது என்றும் கூறினார். இந்தியா இனி அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் டிரம்ப் தெரிவித்தது, இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு பெருமையாக இருந்தது. அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர்; தனது நாட்டில் சக்திவாய்ந்ததும், மதிப்புமிக்கதும் ஆன தலைவரும் ஆவார். வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும், ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் நாம் விவாதித்தோம்.…

Read More

இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் திடீரென அமளி ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுந்தபோது இந்த அமளி தொடங்கியது. அவர், முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் வெளியிடப்படாத புத்தகம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டார். அந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியிலிருந்து சில பகுதிகளைக் கொண்டிருந்த ஒரு பத்திரிகைக் கட்டுரையை அவர் மேற்கோள் காட்டினார். ஜெனரல் நரவானே இந்திய ராணுவத்தின் 28-வது தலைமைத் தளபதியாக (Chief of the Army Staff) நியமிக்கப்பட்டார். 2019 டிசம்பர் 31-ஆம் தேதி, ஜெனரல் பிபின் ராவத்திடமிருந்து அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், 2021 டிசம்பர் 15 முதல் 2022 ஏப்ரல் 30 வரை, தலைமை தளபதிகள் குழுவின் (Chiefs of Staff Committee) இடைக்கால தலைவராகவும் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனரல் நரவனே யார்? ஜெனரல்…

Read More

ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. என்று சூளுரைத்த பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து சென்னையில் நாளை (பிப்ரவரி 3) அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியில் நிகழ்ந்த ரத யாத்திரையில் பேசிய பிரேமலதா, ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. 2026-ல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். கூட்டணி குறித்து சென்னையில் பிப்ரவரி 3-ந் தேதி (நாளை) அறிவிப்பேன் என்றார். கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளம் ஆகும். தே.மு.தி.க. இடம் பெறும் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும்.  தோவாளை மலர் சந்தையில் சென்ட்…

Read More

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர்  ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று தமிழகம் வருகை தந்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து இன்று காலை திமுக எம்.பி கனிமொழி அவர்கள் இடம் தொலைபேசியில் பேசினேன். இன்னும் இரு தினங்களில் திமுகவுடன் கூட்டணி குறித்த பேச உள்ளோம் என்றார். முதலமைச்சரே விசிலுக்கு வாக்களிப்பார் என்று தவெக தவைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, இதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தை திமுகவுடன் மேற்கொள்ள உள்ளோம் என்று கூறிய அவர், ஆட்சியில் பங்கு குறித்து பேசப்பட்டுள்ளதா என்று…

Read More

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற முன்னேற்பாடுகளை செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தரப்பு பதில்மனுவில், “நீதிமன்ற உத்தரவை மீற வேண்டுமென்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. அப்போதிருந்த சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையினரை தவறான வார்த்தைகளில்…

Read More

3500 ஆண்டுகள் பழமையான என் தமிழ் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாகத்தான், மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை தரமணியில் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச்சுற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடந்தது. இறுதிச்சுற்று போட்டிக்கு பிறகு நடந்த நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன், ராகேஷ் சட்ட அறக்கட்டளை…

Read More