Author: Editor web3
ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஜப்பானின் அமோர் நகரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து, 2 மீட்டர் உயரத்துக்கு பனி கட்டிகள் படிந்துள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் இருந்து சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் ஊழியர்களுடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். பனிப்பொழிவால் ஹொக்கைடோவின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும் தாமதமாகியுள்ள நிலையில் முக்கிய சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் தரை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஜப்பானில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பனிப்பொழிவு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பனிகளை அகற்றும்போது பனிக்கட்டிகள் விழுந்து சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். கூரைகளில் இருந்து விழும் பனிக்கட்டிகளாலும் மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது. மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும். ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, இந்த பேச்சு வார்த்தையில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி மற்றும் காங்கிரஸ் மேலிட பெறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் சார்பில் 39 தொகுதி மற்றும் 6 அமைச்சர்கள் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது, இதற்கு திமுக சார்பில் 30 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடதந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் 36 தொகுதி மற்றும் 3 அமைச்சர்கள் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கனிமொழியிடம் காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சேடங்கர் தெரிவித்ததாக தெரிகிறது.
மெல்போர்னின் ரோவில்லில் உள்ள ஆஸ்திரேலிய இந்திய சமூக மையத்திலிருந்து மகாத்மா காந்தியின் வெண்கல சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் இந்திய சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெறும் திருட்டு மட்டுமல்ல, ஒரு கலாச்சார சின்னத்தின் மீதான தாக்குதலாகவும் கருதப்படுகிறது. இந்தச் சிலையை புது தில்லியில் உள்ள ICCR (இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில்) நன்கொடையாக வழங்கியது. இது நவம்பர் 12, 2021 அன்று அப்போதைய ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த ஸ்காட் மோரிசனால் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகள், அகிம்சை மற்றும் அமைதியின் அடையாளமாகக் கருதப்பட்டது. https://x.com/AdityaRajKaul/status/2018592648546988465? திருட்டு எப்போது, எப்படி நடந்தது? காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி,, ஜனவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை திருட்டு நடந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அந்த மையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், திருடர்களால் அந்த பிரம்மாண்டமான வெண்கலச் சிலையைத் திருட முடிந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் விக்டோரியா காவல்துறை நாக்ஸ் குற்றப்…
ஐபிஎல் என்றாலே CSK தான் என்ற காலம் உண்டு. தல தோனிக்கு பெரிய ரசிகர் பட்டளாமே தமிழ்நாட்டில் உண்டு. இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாகவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளங்கிவருகிறது. தல தோனி தலைமையில், பல ஆண்டுகளாக பல ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே மஞ்சள் அணி வெற்றி வாகை சூடிக்கொண்டே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பின் தங்கிவிட்டது. ஆனாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையவே இல்லை. இப்படியிருக்கும் சூழலில், ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் கடந்த சில ஐபிஎல் சீசன்கள் தொடங்குவதற்கு முன்னர் ‘தோனி விளையாடுவாரா?’ என்ற கேள்வியும் சேர்ந்து…
இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த ரஷ்யா இலக்கு வைத்துள்ள நிலையில், எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறினார். இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை அமெரிக்கா உடனடியாக 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும் என்று அவர் கூறினார். இது எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் புவிசார் அரசியல் இலக்குகளுடன் தொடர்புடைய இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு பெரிய மாற்றம் என்று அவர் விவரித்தார். இதற்கிடையில், ரஷ்ய எண்ணெய் தொடர்பான டிரம்பின் கூற்றுகளுக்கு கிரெம்ளின் பதிலளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர்…
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றுமுதல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சீன ஆக்கிரமிப்பு குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதியதாக கூறப்படும் வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டிய ராகுல் காந்தியின் பேச்சால் நேற்று நாடளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று காலை 11 மணி மக்களவை கூடியது. அப்போது அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும், அதனால்தான் அவர் அமெரிக்காவுடன் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த ஒப்பந்தத்தின்…
பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளில் மக்களவையில் எதிர்க்கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டனர் . எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனேவின் புத்தகம் குறித்த பிரச்சினையை எழுப்பி டோக்லாம் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப முயன்றார். இருப்பினும், அவருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. எட்டு எம்.பி.க்களும் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அமளியின் போது இருக்கை மீது காகிதங்களை வீசிய எட்டு எம்.பி.க்கள் முழு கூட்டத்தொடருக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் ஏழு காங்கிரஸ் எம்.பி.க்கள்: அமரீந்தர் சிங் ராஜா வாரிங், பிரசாந்த் பரோல், ஹிபி ஈடன், குர்ஜீத் அவுஜ்லா, டீன் கோரியாகோஸ், மாணிக்கம் தாகூர், கிரண் குமார் ரெட்டி, மற்றும் மதுரையை சேர்ந்த ஒரு சிபிஐ(எம்) எம்.பி.: எஸ். வெங்கடேசன் ஆகியோர் அடங்குவர். எம்.பி.க்களின் இடைநீக்கம் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும்…
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கவனிக்க வேண்டியுள்ளதால் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருந்தார். இருப்பினும், இதன் பின்னணியில், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் அண்ணாமலைக்கு மோதல் போக்கு நிலவி வருவதாக கூறுகின்றனர். இது வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் இருவருக்கும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு யூகங்களுக்கிடையில் அண்ணாமலை விலகல் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். தந்தை உடல்நிலை காரணம் என அண்ணாமலையே சொல்லிவிட்டப்பின், ஏன் இதுபோன்ற பொய்யான தகவல் வெளியானது என்று எனக்கு தெரியவில்லை. பாஜகவை பொறுத்தவரை தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பல மாதங்களாக முடங்கிக் கிடந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென இந்தியப் பொருட்களுக்கான வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைப்பதாக அறிவித்தார். முந்தைய பேச்சுவார்த்தைகள் முடிவில்லாதவையாகவும், அமெரிக்கா தொடர்ந்து இந்தியா மீது அழுத்தம் கொடுத்து வந்ததாலும் இந்த முடிவு ஆச்சரியமாக இருந்தது. கேள்வி என்னவென்றால்: டிரம்ப் ஏன் திடீரென்று மனம் மாறினார்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் சில காலமாக நடைபெற்று வந்தன, ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 50% வரியை விதித்தது. டிரம்ப் நிர்வாகத்தின் நிபந்தனைகள் தெளிவாக இருந்தன: இந்தியாவுக்கு வர்த்தக ஒப்பந்தம் வேண்டுமென்றால், அது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் இப்போது…