Author: Editor web3
கனடாவில் பள்ளியில் நடத்தப்பட்ட அதிபயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்ளர் ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளியில் அதிபயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் துப்பாக்கிச்சூடு நடந்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது, மேலும் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன், யார் மீதான தாக்குதல் இது, இறந்தவர்கள் அனைவரும் மாணவர்களா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. காவல்துறையினரின் கூற்றுப்படி, பிப்ரவரி 10 ஆம் தேதி, பிற்பகல் 1:20 மணியளவில், டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் குறித்து டம்ளர் ரிட்ஜ் ஆர்.சி.எம்.பி.க்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர், மேலும் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேக நபர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், ஆரம்பத்தில் இது…
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதிரடியான உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. பாமகவில் நிலவி வரும் மோதல் போக்கு எப்போது முடியும் என்று அக்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான அதிகார மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக ராமதாஸ் அவர்களின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு இளைஞரணியில் முக்கிய பொறுப்பு கொடுத்தது மோதலின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பொது மேடையிலேயே அன்புமணி தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இரு தலைவர்களும் தங்கள் ஆதரவு நிர்வாகிகளை நியமிப்பது, மற்றவர்களை நீக்குவது என நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் அன்புமணி மீது காட்டமான விமர்சனங்களை ராமதாஸ் முன்வைத்து வருகிறார். ஆனால் மறுபுறம் ராமதாஸ் அவர்கள் தான் தன்னுடைய வழிகாட்டி. அவருடைய லட்சியத்தை, கனவை நிறைவேற்றுவேன் என்று அன்புமணி கூறி வருகிறார். தற்போதைய சூழலில்…
தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், ஆளும் கட்சி அவரைத் தூண்டி, தங்களுக்கு எதிராக “பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான” குற்றச்சாட்டுகளைக் கூற வைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக கடந்த வியாழக்கிழமை அன்று சில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமரின் இருக்கைக்கு வந்து “முன்னெப்போதும் இல்லாத ஒரு சம்பவத்தில் ஈடுபடக்கூடும்” என்று தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதனால் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தடுக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருந்தார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தொடர்ச்சியாக நான்கு…
மூத்த என்சிபி தலைவர் சரத் பவார் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, அவர் புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரத் பவாரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 83 வயதான சரத் பவாருக்கு இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவர்கள் அவரது நிலையை மதிப்பிட்டு, மேல் சிகிச்சைக்காக புனேவுக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். பின்னர் அவர் பாராமதியின் கோவிந்த்பாக்கில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புனேவுக்கு கொண்டு செல்லப்பட்டார். புனேவின் ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான பரிசோதனைகளை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை சரத் பவார் தவிர்த்து வந்தார். இருப்பினும், சமீபத்தில், அவரது மருமகன் அஜித் பவாரின் திடீர் மரணத்திற்குப் பிறகு, இறுதிச் சடங்குகளின் போது பலரைச் சந்திக்க நேரிட்டது. கடந்த வாரம், அவர் தொடர்ச்சியாக பல நாட்கள்…
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், 23 வயதுப் பெண் ஒருவர் தனது தாயின் அந்தரங்கப் புகைப்படங்களைத் தனது காதலனுக்கு பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை கூற்றுபடி, அந்தப் பெண் தனது படிப்புக்காக போன் பயன்படுத்தி வந்துள்ளார், மேலும் தனது காதலனுடன் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு, அந்தத் தாய் தனது மகள் காதலனுடன் பேசுவதைப் பார்த்து, அவளிடமிருந்து செல்போனை பறித்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, மகளின் செல்போனை சோதித்தபோது, அதில் உள்ள புகைப்படத் தொகுப்பில் தன்னுடைய மற்றும் ஒரு பெண் உறவினரின் ஆபாசமான புகைப்படங்களை பார்த்து அந்த தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். இளம்பெண் தனது தாய்க்குத் தெரியாமல் இந்தப் புகைப்படங்களைத் தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான தாய், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொண்டு புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அந்த இளம்பெண் மற்றும்…
தான் எழுப்பிய கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகளுக்குப் பயந்துதான் பிரதமர் மோடி மக்களவைக்கு வர அஞ்சுகிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும் புத்தகத்தை மேற்கோள் காட்டி, 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து தான் பேசியதால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரப் பயப்படுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை அச்சுறுத்துகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ராகுல், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தான் எழுப்பக்கூடாது என்பதற்காகவே அரசு அவையை ஒத்திவைத்தது என்றும் குற்றம் சாட்டினார். நரவணேவின் குறிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டன, அதன் நகல் தன்னிடம் உள்ளது என்றும் கூறிய ராகுல் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பொய் சொல்லியிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, அந்த…
ஐசிசி அட்டவணையின்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் அரசாங்கம் போட்டி தொடங்குவதற்கு முன்பே, தங்கள் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக களமிறங்காது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த போட்டி குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பிசிசிஐ-யின் நிலைப்பாடு என்ன என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, லாகூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிபி) இந்த போட்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் பிசிசிஐ-யின் நிலைப்பாடு என்ன என்று…
உலக நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது. பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். டாடா நிறுவனம்…
அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த செங்கோட்டையன், சமீபத்தில் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அன்று முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் விஜய்தான் அடுத்த முதல்வர் என்றும் சூளுரைத்து வருகிறார். இருப்பினும், தாய் கழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு, தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை “செல்லாத நோட்டு” என்று எடப்பாடியும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் குறித்து பேசுகையில்,“நான் ஏற்கனவே ‘செல்லாத நோட்டு’ என்று சொல்லிவிட்டேன். எங்கள் பொதுச் செயலாளரும் சொல்லிவிட்டார். செல்லாத நோட்டு ஆயிரம் பேசி என்ன செய்ய? அது ஒன்றும் ஆகப்போவதில்லை. விடுங்கள்” என்றார். விஜயை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்று செங்கோட்டையன் சூளுரை என்பது குறித்த கேள்விக்கு,“எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்கப் போகிறார்? கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வராக்கலாம். இந்தச் செங்கோட்டையனுக்கு வயது என்னங்க? இனிமேல் இவர் எந்த நாட்டில் போய் என்னத்தைப் போராடி,…
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது. இதனை தொடர்ந்து விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க எங்களுக்கு…