Author: Editor web3

கடந்த வாரம் அமெரிக்கா – இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வத் தகவலறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. இதில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை அமெரிக்கா செய்துள்ளது. முந்தைய அறிக்கையில், குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா இறக்குமதி வரியைக் குறைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய அறிக்கையில் இந்தப் பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர் என்பதால், இதற்கு வரி குறைப்பது இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது. தற்போது திருத்தப்பட்ட அறிக்கை மூலம் அந்த அச்சம் விலகி உள்ளது. முந்தைய அறிக்கையில் விவசாயப் பொருட்கள் என்ற சொல் பல இடங்களில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, தொழில்துறை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று மாற்றப்பட்டுள்ளன. இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளது என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போது அது…

Read More

கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த, சில மணி நேரம் கழித்து, தாய்லாந்திலும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களள் பிணைக் கைதிகளாக கடத்திச்செல்லப்பட்டனர். தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லாவின் படோங் துணை மாவட்டத்தில் உள்ள படோங் பிரதான் கிரிவிட் பள்ளியில் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். உள்ளூர் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தினர். மேலும் மாணவர்களும் ஆசிரியர்களும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாய்லாந்தின் உள்ளூர் ஊடகங்களின்படி, துப்பாக்கிதாரி ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதில் ஒரு ஆசிரியர் காயமடைந்தார், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சில தகவல்கள் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்ததாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பல மாணவர்களும் ஆசிரியர்களும் இன்னும் பள்ளிக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். துங் லுங் காவல் நிலையம்…

Read More

லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா, காம்பியா, செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் சிறிய ரப்பர் படகில் இத்தாலியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். படகு புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தத்தளித்துள்ளது. அப்போது ஏற்பட்ட ராட்சத அலைகள் படகை மோதி கவிழ்த்தன. இதில் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 40 பேரை உயிருடன் மீட்டனர். ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கிறார்கள் என கூறப்படுகிறது. பாதுகாப்பு வசதி இல்லாத சிறிய படகுகளில் அதிக நபர்கள் பயணிப்பதால் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று…

Read More

சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வருகின்ற சட்டசபை தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது. மேலாண்மைக் குழு அமைப்பாளர் – பொன். இராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்) இணை அமைப்பாளர் – எஸ்.ஆர்.சேகர் (மாநில பொருளாளர்) இணை அமைப்பாளர் – ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்) இணை அமைப்பாளர் – மா. வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்) இணை…

Read More

திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே பிரச்சனை இருக்குமா விரிசல் வருமா என்று நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கட்சிக்கு ஒரு கருத்து ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கருத்து. எங்கள் கட்சித் தலைவர்கள் அவர்களுடைய கருத்தை சொல்வார்கள் முதலமைச்சர் அவருடைய கருத்தையும் கட்சியின் கருத்தையும் தமிழ்நாட்டு நாட்டு நடப்பு சொல்லி இருக்கிறார். எல்லாவற்றையும் சேர்த்து அமர்ந்து பேசி எங்கள் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள் இதில் அவர் இப்படி சொல்லிவிட்டார் இவர் இப்படி சொல்லிவிட்டார் இதனால் கூட்டணிக்குள் பிணக்கு இருக்குமா பிரச்சனை இருக்குமா விரிசல் வருமா என்று நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு வாய்ப்பில்லை என்றார். ஒரு போதும் பாரதிய ஜனதா கட்சியும், அதனுடைய அங்கமாக இருக்கின்ற அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள்…

Read More

இந்தியாவுடன் வர்த்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அமெரிக்கா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்த டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரி விதித்தார். அத்துடன் நிறுத்தாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக கூடுதலாக 25 சதவீத வரி என அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அந்த ஒப்பந்தத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாடாளுமன்றத்தில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான்…

Read More

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் (ஓய்வுபெற்ற) வெளியிடப்படாத சுயசரிதையான “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி” கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் வேகமெடுத்து வருகிறது. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் டெல்லி காவல்துறை இப்போது குற்றச் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளைச் சேர்த்துள்ளது. இதற்கிடையில், சில கேள்விகளுக்கு பதில்களைக் கோரி சிறப்புப் பிரிவு பென்குயின் இந்தியா பதிப்பகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், எஃப்.ஐ.ஆரில் குற்றச் சதி தொடர்பான பிரிவுகளைச் சேர்த்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், புத்தகம் தற்போது எங்கு இருக்கிறது, மற்றும் உரிமை பெறாமலே எந்தவொரு பகுதியும் வெளியிடப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் ஜெனரல் நரவனே எழுதியதாக கூறப்படும் புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன ஆக்கிரமிப்பு குறித்து ஒரு கருத்தை முன்வைக்க முயன்றபோது சர்ச்சை வெடித்தது. ஆளும் கட்சி உறுப்பினர்கள்…

Read More

தந்தை – மகன் இருவருக்கும் இடையேயான பிரச்சனையின் காரணமாக பிளவுபட்ட பாமக இப்போது அன்புமணி வசம் உள்ளது. இந்நிலையில் மாம்பழம் சின்னத்திற்காக போட்டியின் முடிவும் அன்புமணிக்கே சாதகமாகியுள்ளது. இத்தகைய நிலையில் PLAN ‘B’ ஆக தனது ஆதரவாளர் மூலம் புதுக்கட்சி துவங்கியுள்ளார் ராமதாஸ். பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் ஆதரவாளரான, தலைமை நிலையைச் செயலர் அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற பெயரில் புதுக்கட்சியை உருவாக்கி உள்ளார். தற்போது இருக்கும் பாமக கொடியில் நடுவில் ராமதாஸ் படத்தை வைத்தது கொடி தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கட்சியை பதிவு செய்ய தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மகன் அன்புமணியால் கட்சி பிளவுபட்டது; பின் மகனிடம் கட்சி சென்றது; மாம்பழ சின்னம் அன்புமணிக்கு தான் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் கூறிய நிலையில் கடுங்கோபத்தில் இருக்கும் ராமதாஸ், அன்புமணி&கோவிற்கு எதிராக தனது ஆதரவாளர்களை…

Read More

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் சென்ற நிலையில், போராடி ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் சுவாரசியம் பெற்றுவருகிறது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற 13வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் சென்று ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு சென்றது இதுவே முதல் முறை. இரட்டை சூப்பர் ஓவர் கொண்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 84…

Read More

தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய… Click Here https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0 புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More