Author: Editor web3

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2026) வரவிருக்கும் சீசனுக்கு முன்னதாக, கர்நாடக அரசு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அந்த அணியின் சொந்த மைதானமான எம். சின்னசாமி ஸ்டேடியத்தின் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. இந்த பிரச்னையில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த குடும்பத்திற்கு…

Read More

`பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வாறு திடீர் கரிசனம் காட்டுவதற்காக கம்பி கட்டும் கதைகளையெல்லாம் முதலமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப் படுவதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் தான் திமுக…

Read More

திராவிடமாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில், தவெக தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு…

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் ஆட்சியை தக்கவைக்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிக்க அதிமுக, பாஜக கூட்டணியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற உத்தேச பட்டியல் கூட வெளியாகாத நிலையில், 234 தொகுதிகளுக்கு 72 தேர்தல் பொறுப்பாளர்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்தார். இதில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம், காரைக்குடி ஆகிய 6 தொகுதிகளின் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. அதிமுகவுடனான கூட்டணி உள்பட பாஜக தேசிய மற்றும் மாநிலத் தலைமையின் பல்வேறு முடிவுகளால் அண்ணாமலை தொடர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் பரவிய நிலையில், 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமித்தது அவரை அதிருப்தியில் உச்சத்திற்கு தள்ளியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தொடக்கம் முதலே மோதல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், மாநிலத் தலைவராக…

Read More

தூய்மை பணியாளர்கள் இனி ‘விசில்’ பயன்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை திடீர் தடை விதித்துள்ளது. இதன் பின்னணியில் பேசப்படும் தகவல்கள் பற்றி பார்க்கலாம். தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பையை சேகரிக்கின்றனர். இதில் பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகளில் வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் பணியை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை போன்ற மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் குப்பைகளை சேகரிக்கும் பணி கையாளப்பட்டு வருகிறது. இதில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணிகளை செய்யும் போது தூய்மை பணியாளர்கள் தாங்கள் வந்திருப்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விசில் பயன்படுத்துவர். தூய்மை பணியாளர்களின் விசில் சத்தம் கேட்டு பொது மக்கள் குப்பையை எடுத்து வந்து குப்பை வண்டியில் கொட்டுவது வழக்கம். இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தவெகவுக்கு தேர்தல் ஆணையத்தால் விசில்…

Read More

நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதன் மூலம், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி பல குறிப்பிடத்தக்க சாதனைகளையும் படைத்தது. 2026 டி20 உலகக் கோப்பையில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது மட்டுமல்லாமல், சாதனை புத்தகங்களில் பல புதிய அத்தியாயங்களையும் சேர்த்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 209 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது. பதிலுக்கு, நமீபியா 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. போட்டி வரலாற்றில் வேகமான அணி சதம்: இந்தியா அதிரடியான தொடக்கத்தை எடுத்து, வெறும் 6.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. டி20 உலகக் கோப்பையில் எந்தவொரு அணியும் அடித்த வேகமான அணி சதம் இதுவாகும். பவர்பிளேயில் தொடர்ச்சியான பவுண்டரிகள் மற்றும் பயமற்ற ஸ்ட்ரோக்-பிளே எதிரணியை ஆரம்பத்திலேயே அழுத்தத்தில் வைத்தது.…

Read More

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெற்ற மகத்தான வெற்றிக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சுமார் 18 மாதத்துக்கு பிறகு நேற்று அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல்…

Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2026 புதன் கிழமை முதல் 27.2.2026 வெள்ளிக் கிழமை வரை மூன்று நாட்கள், ‘இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள் மாவட்டக்…

Read More

10வது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த மைதானத்தில் இன்று (பிப்ரவரி 12) இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், முன்னதாக இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியின் நிகழ்ந்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது கடந்த 10ம் தேதி நடந்த நெதர்லாந்து – நமீபியா போட்டிக்குப் பிறகு, மைதான வளாகத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள ஊழியர் ஒருவர் பேப்பர் கப்பில் இருந்து கூல்ட்ரிங்க்ஸை பாட்டில்களில் நிரப்புவதை அந்த வீடியோவில் காணலாம். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், https://x.com/IPL2025Auction/status/2021848190379765840? இருப்பினும், வைரலாகப் பரவும் அந்த வீடியோவில், பணியாளர்கள் பாட்டில்களை மீண்டும் நிரப்பி அடுத்த போட்டியில் விற்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை. போட்டி முடிந்த பிறகு, கண்ணாடி கோப்பைகளிலோ அல்லது பாட்டில்களிலோ இருக்கும்…

Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ மு ச, ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி, உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் பொதுவேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய போது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, பாஜக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து வருகிறது.. அதானி, அம்பானி ஆதரவாக இருக்கக்கூடிய பாஜக அரசு அவர்களின் தொழில் நிறுவனங்கள் செழிப்பதற்காக தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி ஆள வேண்டும் என்று 44 சட்டங்களாக…

Read More