Author: Editor web3

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பல முக்கியமான சட்டங்களும் ஒரு முக்கியமான மசோதாவும் நாடாளுமன்றத்தில் விவாதம் மற்றும் நிறைவேற்றத்திற்காக அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த கூட்டத்தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் அமர்வில் செய்தது போல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினால், அது இறுதியில் அவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று கிரண் ரிஜிஜு கூறினார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த தகவலின்படி, “மார்ச் 9 ஆம் தேதி, மக்களவையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிப்போம். முதல் நாளிலேயே அதை எழுப்புவதே விதி.…

Read More

சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியை அறிவித்துள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள்  அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை…

Read More

சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதையொட்டி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். இதில், சிறப்பு தீவிர திருத்த பணியின்போது உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனையடுத்து, வரைவு வாக்​காளர் பட்​டியல் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை(நேற்று) காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய கோரி…

Read More

ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்றத் தவறியதும், வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்த துரோகத்தை ஒப்புக்கொள்வதும் கண்டிக்கத்தக்கவை. அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘‘திமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 45,126 பேர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 24,927 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 12,894 பேர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக…

Read More

முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவளம், பசுவந்தரை, தன்பாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் (Shipyard) அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முல்லைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களின் முக்கியமான மற்றும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அங்குள்ள உப்பளங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதும், தொழிலாளர்களின் உரிமைகளை காப்பதும் அரசின் அடிப்படை கடமையாகும். எனவே, முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக…

Read More

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடு செய்யப்படுகின்றன. நடப்பு டி20 உலகக்கோப்பையின் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும், இன்று தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இலங்கை, கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 13-3 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது. டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, 8 போட்டிகளில் விளையாடி இந்தியா 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. https://x.com/ANI/status/2022893023282200837? இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும்…

Read More

புராணங்களின்படி, பிரளய காலத்தின் போது உலகைக் காக்க உமையன்னை சிவபெருமானை வழிபட்ட இரவே மகா சிவராத்திரி. எனவே இன்று ஒரு நாள் விரதம் இருப்பது ஓராண்டு முழுவதும் சிவனை வழிபட்ட பலனைத் தரும். அந்தவகையில், இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன,  மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானுக்கு நீர் அர்ப்பணிப்பது அனைத்து துன்பங்களையும் நீக்கி உலக மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்து மதத்தில் விரதங்கள் கடினமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற, பக்தர்கள் தங்கள் தெய்வத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பிரார்த்தனை செய்து, எந்த தடையும் இல்லாமல் தங்கள் நிறைவேற்றத்தைப் பெற வேண்டும். எனவே, மகாசிவராத்திரி விரதத்தை யார் கடைப்பிடிக்க வேண்டும், யார் கடைப்பிடிக்கக்கூடாது என்பதற்கான விதிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். மகாசிவராத்திரி விரதத்தை யார் கடைப்பிடிக்கக்கூடாது? சிவனை வழிபடும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் இந்த விதிகள் விளக்குகின்றன. மகாசிவராத்திரி விரதம் உணவு மற்றும் பழங்கள் இல்லாமல்…

Read More

பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ‘தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது’ எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில்…

Read More

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என சூளுரைத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே திமுவிடம் தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, “ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இருப்பினும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 150-160 தொகுதிகள் வரை வெற்றி பெறும். உதய சூரியன் சின்னம் என்றால் ஒரு மாதிரி…. மற்ற சின்னம் என்றால் ஒரு மாதிரி….” என்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்துக்கு கடும் அதிருப்தியில் இருக்கும் மாணிக்கம் தாகூர் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறிவருகிறார். இந்தநிலையில், இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைச்சரவையில்…

Read More

இந்தியாவை “மிகவும் வெற்றிகரமான” வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றும், உலக விவகாரங்களில் அதன் செல்வாக்கு விரிவடைந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் நடைபெற உள்ள India–AI Impact மாநாடு குறித்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த முக்கியமான உலகளாவிய விவாதத்தை நடத்த இந்தியா சரியான நாடாகும் என்று குறிப்பிட்டார். ஐ.நா. தலைமையகத்தில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துடனான ஒரு உரையாடலில், இந்த மாநாடு நடத்த ஏற்பாடு செய்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலம் முழுவதற்கும் பயன்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். AI, வல்லரசு நாடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்படக் கூடாது: செயற்கை நுண்ணறிவு (AI) மிக முன்னேறிய நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும் கருவியாக மாறக் கூடாது என்பதாகும். உலகின் இரண்டு பெரிய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் உருவாகக் கூடாது என்று…

Read More