Author: Editor web3
தன் மீது அவதூறு கருத்து தெரிவித்ததற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவை விட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் சர்ச்சையானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி தலைவர் இப்படி பேசலாமா என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சுதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது கட்சிக்காரரும், திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின்…
ராகுல்காந்தி, கார்கேவை விட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பெரிய ஆட்களா என செல்வப்பெருந்தகை காட்டமாக கூறியுள்ளது உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, இது திடீர் பயணம் அல்ல. காங்கிரஸ் கட்சி தலைவர் கார்க்கேவிடம் தமிழ்நாடு கட்சி குறித்து ஆலோசிக்க செல்கிறேன் என்றார். மதுரை மாவட்ட கூட்டம் நடந்தது எனக்கு தெரியாது என்று கூறிய செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தலைமை வழிகாட்டின் படி நடப்பது தான் செல்வ பெருந்தகை. கடந்த 17ந் தேதி காங்கிரஸ் கட்சி மேலிடம் யாரும் பொது வெளியில் கூட்டணி பற்றி பேசக்கூடாது. தெளிவாக ராகுல்காந்தி, கார்கே, வேணுகோபால் ஆகியோர் சொல்லி உள்ளனர். இவர்களை விட பெரியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார், கீரிஷ் சோடங்கர் தலைமையில் கமிட்டி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக அகில இந்திய தலைமை பேசும். பொது…
2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்கு வகித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி குறித்து பெரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், வைபவ் சூரியவன்ஷி 10 ஆம் வகுப்புத் தேர்வை எழுதுவார் என்ற செய்திகள் வெளிவந்தன, பீகாரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. இதற்காக வைபவுக்கு ஹால்டிக்கெட்டும் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. தகவல்களின்படி, வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு மையம் சமஸ்திபூரில் உள்ள போடார் சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. பள்ளி முதல்வர் நீல் கிஷோர் இதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் சமீபத்திய தகவலின்படி, வைபவ் சூரியவன்ஷி தேர்வு எழுத மாட்டார் என்று அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதால், வருகைப்பதிவு குறைந்துள்ளதாகவும், இருப்பினும் பள்ளி நிர்வாகம் தேர்வெழுத அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் சரியாக படிக்காததால் தேர்வு எழுத செல்லமாட்டார் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததை அடுத்து, பாகிஸ்தானில் மக்கள் கோபத்தில் உள்ளனர். தோல்வியால் மனமுடைந்த ஒரு ரசிகர், கோபத்தில் தனது டிவியை உடைக்கும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. நேற்று கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் மேலும் வலுவடைந்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். அந்தவகையில் போட்டிக்கு பின் நிகழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.instagram.com/reel/DUyYNQ3k8Ck/?utm_source=ig_web_copy_link பாகிஸ்தானின் தோல்வியால் வருத்தமடைந்த ஒரு ரசிகர், கோபத்தில் தனது டிவியை உடைப்பதைக் காட்டும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நீண்ட காலத்திற்குப் பிறகு நடைபெற்றதால், இரு நாடுகளின் ரசிகர்களின் உணர்ச்சிகள் உச்சத்தில் இருந்தன. இந்தியாவின் வெற்றியுடன், சில பாகிஸ்தான் ஆதரவாளர்களின் கோபம் இவ்வாறாக வெளிப்பட்டது. தோல்வியைத் தொடர்ந்து, குழு A இல் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது,…
அனுபவமற்ற அல்லது தகுதியற்ற ஒருவர் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டால், அது முழு நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்று அக்தர் விமர்சித்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியை முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், வாரியத்தின் கொள்கைகளே இதற்குக் காரணம் என்றும் கூறினார். வலுவான தலைமை இல்லாமல், அணியின் செயல்திறன் பாதிக்கப்படும் என்று பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி குறித்து விமர்சித்துள்ளார். மேலும், நீண்ட காலமாக அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தும், முக்கியமான போட்டிகளில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறும் மூத்த வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பிய அக்தர், சில வீரர்கள் திறமையான செயல்திறன் இன்றி “நட்சத்திரங்கள்” ஆக உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவே அணியின் மிகப்பெரிய பலவீனமாக மாறிவிட்டதாகவும் அவர்…
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் அவ்வபோது இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், மீனவர்கள் பிரச்சனை தீர்ந்தபாடியில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர் இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் எக்ஸ் தள பதிவில், “புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள்…
சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அனுபவமே இல்லாத விஜய், முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும் என்று கூறியிருந்தார். சினிமாவில் உச்ச நட்சத்திரம் என்றும் பாராமல், பெண்ணுக்குரிய மரியாதையை கொடுக்காமல் பொதுவெளியில் த்ரிஷா-விஜய் குறித்து கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்காமல் இதுநாள் வரை மவுனம் காத்து வந்த த்ரிஷா, தற்போது தனது வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில அரசியல் துறையில் உயர்ந்த நிலையை வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என்று என் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. த்ரிஷா எந்த அரசியல்…
தமிழ்நாட்டின் பரபரப்பான பெருநகரமான சென்னையில், ஏராளமான மால்கள் உள்ளன. இந்தநிலையில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வடபழனி ஃபோரம் விஜயா மாலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு உள்நாட்டு பிராண்டட் கடைகள் மற்றும் சர்வதேச பிராண்டட் கடைகள் உள்ளன. இங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும், உணவகங்களும் உள்ளன. இதனால், மக்களின் கூட்டம் எப்போதும் அதிகளவில் இருக்கும். இந்தநிலையில், மாலின் முதல் தளத்தில் இருக்கக்கூடிய மெக்டொனால்ட்ஸ் பீட்சா கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக மால் முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் உதவியுடன் பொதுமக்களும் ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கோயம்பேடு, ஜே.ஜே.நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வடபழனி ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட கால முரண் இருந்துவருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் இரண்டு தரப்பின் மேலிட தலைவர்களும் கூட்டணி முரண்களை பேசி வருகின்றனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசை முறையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை பலமுறை பொதுவெளியில் மாணிக்கம் தாகூர் எழுப்பியிருக்கிறார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் காங்கிரசின் அதிகாரப்பகிர்வு கோரிக்கையை திமுக தொடர்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும், நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் பங்கு அளிக்கப்படவேண்டும், அதிகப்படியான தொகுதிகளை பெறவேண்டும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 30% இடங்களை பெறவேண்டும் உள்ளிட்ட அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும் இதற்கு பிடிக்கொடுக்காமல், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த மாணிக்கம் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக…
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட, நாட்டில் அதிக முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலை தீர்க்க கடுமையாக போராடி வருகிறது. ஒருபுறம் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடையே உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து வருகிறது. அதாவது, ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரான பிரசீன் சக்கரவர்த்தி தமிழக அரசை விமர்சித்ததை தொடர்ந்து தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட ஒரு தரப்பினர் திமுக அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் சைலண்ட்டாக பிரசீன் சக்கரவர்த்தி கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக ஜோதிமணி எம்.பி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டியிருந்தார். மற்றொரு புறம் தமிழகத்தை போன்று சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் அசாமிலும் இதே பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது.…